நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் பொதுக் கூட்டம்

0 263

றாபி­ததுன் நளீ­மிய்யீன் எனப்­படும் ஜாமிஆ நளீ­மிய்­யாவின் பழைய மாணவர் அமைப்பின் ஒன்று கூடலும் ஒன்­ப­தா­வது பொதுக் கூட்­டமும் கடந்த ஞாயிறு, திங்கள் (2,3.07.2023) ஆகிய இரு தினங்­களில் பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா வளா­கத்தில் இடம் பெற்­றது.

இந்­நி­கழ்வில் கலந்து கொள்­வ­தற்­காக நாட்டின் பல பாகங்­களில் இருந்தும் ஐக்­கிய இராச்சியம், கட்டார், அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட வெளி­நா­டு­களில் இருந்தும் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான பழைய மாண­வர்கள் வருகை தந்­தி­ருந்­தனர்.

கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியின் பொரு­ளியல் பிரிவின் சிரேஷ்ட ஆசி­ரி­யரும் றாபி­தாவின் தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி ரி.ஷாகீர் தலை­மையில் இடம்­பெற்ற அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக நளீ­மிய்­யாவின் பரி­பா­லன சபைத் தலை­வரும் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்­களின் புதல்­வ­ரு­மான யாகூத் நளீம் அவர்­களும் கெள­ரவ அதி­தி­யாக நிறு­வ­னத்தின் முதல்வர் அஷ்ஷைக் அகார் முஹம்மத் அவர்­களும் கலந்து கொண்டு உரை­களை நிகழ்த்­தினர்.

பிர­தம பேச்­சா­ள­ராக கலந்து கொண்ட தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும் பேரா­சி­ரி­ய­ரு­மான அஷ்ஷைக் மஸாஹிர் (நளீமி) நளீ­மிய்யா எதிர்­கா­லத்தில் எத்­த­கைய இலக்­கு­களை அடைந்து வளர்ச்சி காண வேண்டும் என்­பதை விளக்­கினார்.

கலா­பீ­டத்தின் முதல்வர் அஷ்ஷைக் அகார் முஹம்மத் ‘ஜாமிஆ நளீ­மிய்­யாவின் தற்­போ­தைய நிலை’ எனும் தலைப்­பிலும், மிஷ்காத் நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் அஷ்ஷைக் உஸ்தாத் மன்சூர் ‘நளீ­மீக்­க­ளது முன்­னு­ரி­மைகள்’ எனும் தலைப்­பிலும், நளீ­மிய்யா இஸ்­லா­மிய கற்­கைகள் பீடத்தின் பீடா­தி­பதி அஷ்ஷைக் பளீல் ‘நளீ­மீக்­க­ளது அடை­வு­களும் சாத­னை­களும்’ எனும் தலைப்­பிலும் உரை­களை நிகழ்த்­தினர்.

றாபி­தாவின் உயர்­மட்ட ஆலோ­சனைக் குழுவின் தலை­வ­ராக உள்ள நளீ­மிய்­யாவின் கல்­வித்­துறைப் பணிப்­பாளர் அஷ்ஷைக் ஸீ.ஐயூப் அலி உட்­பட அதன் ஏனைய அங்­கத்­த­வர்­க­ளான அஷ்ஷைக் பளீல், முன்னை நாள் தேர்­தல்கள் ஆணை­யாளர் அஷ்ஷைக் முஹம்மத், இறை­வரித் திணைக்­க­ளத்தின் பிரதி ஆணை­யாளர் நாயகம் அஷ்ஷைக் மிப்லி, சவூதி அரே­பி­யா­வுக்­கான முன்னை நாள் கொன்­ஸி­யூலர் ஜெனரல் அஷ்ஷைக் இனா­முல்லாஹ், மிஷ்காத் நிறு­வ­னத்தின் தலைவர் அஷ்ஷைக் அப்துர் ராஸிக் ஆகியோர் நிகழ்ச்­சி­களின் போது இடம்­பெற்ற தனித்­த­னி­யான அமர்­வு­க­ளுக்கு தலைமை வகித்­த­துடன் புதிய நிறை­வேற்றுக் குழுவை தெரிவு செய்யும் நிகழ்­வையும் நெறிப்­ப­டுத்­தினர்.

முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சின் செய­லாளர் அல்­ஹாபிழ் அஷ்ஷைக் நயீ­முதீன் உள்­ளிட்ட மேலும் ஐந்து பேரின் பங்­கேற்­புடன் ‘நளீ­மீக்­க­ளது வகி­பாகம்’ எனும் தலைப்­பி­லான குழுக்­க­லந்­து­ரை­யாடல் ஒன்றும் இடம்­பெற்­றது.

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்­லூ­ரியின் க.பொ.த.(உ/த) பிரிவின் பொறுப்­பா­ளரும் பொரு­ளியல் துறையில் முது­மாணிப் பட்­டம்­பெற்­ற­வ­ரு­மான அஷ்ஷைக் ழாபிர் மதனி அடுத்த மூன்று வரு­டங்­க­ளுக்­கான றாபிதா மத்­திய செயற்­கு­ழுவின் தலை­வ­ரா­கவும் மேலும் 21 பேர் உறுப்­பி­னர்­க­ளா­கவும் பொதுச் சபையால் தெரிவு செய்­யப்­பட்­டனர்.
இலங்­கையின் 13 பிராந்­தி­யங்­களில் றாபி­தாவின் கிளைகள் இருப்­பதால் அவற்­றுக்­கான பத­வி­தாங்­கு­நர்­களும் கிளை­க­ளது கலந்­து­ரை­யா­டல்­களின் போது நிய­மிக்­கப்­பட்­ட­துடன் கடந்த காலத்தில் சிறப்­பாக செயற்­பட்ட பிராந்­தியக் குழுக்­க­ளுக்­கான விரு­து­களும் வழங்­கப்­பட்­டன.

ஜாமி­ஆவில் நீண்ட கால­மாக விரி­வு­ரை­யா­ளர்­க­ளாக கடமை புரி­வோ­ருக்கு இங்­கி­லாந்தில் வதியும் நளீ­மிய்­யாவின் பழைய மாண­வர்­க­ளது அனு­ச­ர­ணை­யுடன் விரு­து­களும் பண முடிச்­சு­களும் வழங்­கப்­பட்­டன.

மாதம்பை இஸ்­லா­ஹிய்யா அரபுக் கல்­லூரி விரி­வு­ரை­யாளர் உஸ்தாத் ரம்ஸீ பஜ்ரு தொழு­கையின் பின்னர் நிகழ்த்­திய ஆன்­மீக உரை தாக்கம் மிக்­க­தாக அமைந்­தது. நிகழ்ச்சி நிரலின் படி விளை­யாட்­டுக்கள்,கலை நிகழ்ச்­சிகள் என்­ப­னவும் இடம்­பெற்­றன.

ஜாமி­ஆவில் கல்வி கற்ற முதல் ஐந்து தொகு­தி­க­ளையும் சேர்ந்த மாண­வர்­க­ளது மனப்­ப­தி­வு­க­ளையும் ஜாமி­ஆவின் ஆரம்­ப­கால வர­லாற்­றையும் உள்­ள­டக்­கிய ‘எமது ஜாமிஆ நளீ­மிய்யா முதல் தொகுதி மாண­வர்­களின் அனு­பவப் பகிர்வு’ எனும் நூல் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது. இந்­நூலை ஜாமி­ஆவின் பழைய மாண­வரும் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்­பா­ள­ரு­மான புத்­தளம் ஸன்ஹீர் எழு­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பொதுக்கூட்ட நிகழ்வுகளை றாபிதாவின் தலைவர்,பொதுச் செயலாளர் அஷ்ஷைக் இல்ஹாம் முபாரிஸ், பொருளாளர் அஷ்ஷைக் எம்.ஜே.எம். ரம்ஸான் உள்ளிட்ட மத்திய செயற்குழுவின் ஏனைய அங்கத்தவர்களும் பேருவளை வலயத்தைச் சேர்ந்தவர்களும் ஜாமிஆ நளீமிய்யா நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.