மியன்மார் இராணுவத்துடன் தொடர்புபட்ட நூற்றுக்கணக்கான பக்கங்களை பேஸ்புக் நீக்கியது

0 602

வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்­க­ளையும், தவ­றான தக­வல்­க­ளையும் சமூ­க­வ­லைத்­த­ள­மான பேஸ்புக் கட்­டுப்­ப­டுத்த தவ­றி­விட்­ட­தாக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­படும் நிலையில், மியன்­மாரில் அந் நாட்டு இரா­ணு­வத்­துடன் மறை­மு­க­மாக தொடர்பு பட்­டுள்ள நூற்­றுக்­க­ணக்­கான பக்­கங்­க­ளையும் கணக்­கு­க­ளையும் நீக்­கி­யுள்­ள­தாக பேஸ்புக் அறி­வித்­துள்­ளது.

மியன்­மாரில் மிகவும் பிர­ப­லமும் செல்­வாக்கும் கொண்ட இச் சமூக வலைத்­தளம் வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்­க­ளுக்கு, குறிப்­பாக ரோஹிங்ய முஸ்லிம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பதி­வுகள் தொடர்பில் மெத்­த­னப்­போக்­குடன் செயற்­ப­டு­வ­தாக நீண்ட கால­மாக விமர்­சிக்­கப்­பட்டு வந்­தது.

கடந்த வருடம் படு­கொ­லை­களை மேற்­கொள்ளும் நோக்கில் இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட கூட்டுப் படு­கொ­லைகள் மற்றும் கூட்டு வன்­பு­ணர்­வுகள் இடம்­பெற்று பிரச்­சினை உச்­ச­நி­லை­யினை அடைந்­த­போது பாதிக்­கப்­பட்ட மக்­களை பிழை­யா­ன­வர்­க­ளாக பேஸ்புக் மூலம் போலி­யாகக் காண்­பித்து 720,000 இற்கும் மேற்­பட்ட ரோஹிங்ய மக்­களை மியன்மார் இரா­ணு­வத்­தினர் பங்­க­ளா­தே­ஷிற்கு துரத்­தி­ய­டித்­தனர் என ஐக்­கிய நாடுகள் சபையின் விசா­ர­ணை­யா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

ரோஹிங்ய மக்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்கள் பர­வு­வ­தற்கு பேஸ்புக் மிகவும் முக்­கிய பங்­க­ளிப்பைச் செய்­தி­ருந்­தது என ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் தொடர்­பான நிபுணர் கடந்த மார்ச் மாதம் தெரி­வித்­தி­ருந்தார்.

அது குறிப்­பாக பொது­மக்­க­ளி­டையே கசப்­பு­ணர்வு , வெறுப்பு மற்றும் முரண்­பா­டுகள் குறிப்­பிட்ட மட்டம் வரை அதி­க­ரிப்­ப­தற்கு பங்­க­ளிப்புச் செய்­தி­ருந்­தது. வெறுப்­பு­ணர்வுப் பேச்சு உண்­மையில் அதன் ஒரு பகு­தி­யாக இருந்­துள்­ளது. மியன்­மாரின் நிலை­மை­யினைப் பொறுத்­த­வரை, அங்கு பேஸ்புக் என்றால் சமூ­க­வ­லைத்­தளம், சமூ­க­வ­லைத்­தளம் என்றால் பேஸ்புக் என்ற நிலைமை காணப்­பட்­ட­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் தலைவர் மர்­சுக்கி தருஸ்மன் தெரி­வித்­தி­ருந்தார். பேஸ்­புக்கின் 425 பக்­கங்­களும், 17 குழு­மங்­களும், 135 கணக்­கு­களும், 15 இன்ஸ்­டர்­கிராம் கணக்­கு­களும் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக கடந்த புதன்­கி­ழமை பேஸ்புக் அறி­வித்­தது. மேலெ­ழுந்­த­வா­ரி­யாக இவை சுதந்­தி­ர­மான செய்­திகள், பொழு­து­போக்குத் தக­வல்கள், அழகு மற்றும் நாக­ரிக வாழ்க்கை முறை தொடர்­பான தக­வல்­களை பதி­வி­டு­ப­வை­யாகக் காணப்­பட்ட போதிலும் அவை இரா­ணு­வத்­துடன் அல்­லது ஏலவே நீக்­கப்­பட்­டு­விட்ட பக்­கங்­க­ளுடன் தொடர்­பினைக் கொண்­ட­வை­யாகக் காணப்­பட்­டன.

மூன்­றா­வது தட­வை­யாக மேற்­கொள்­ளப்­படும் பக்­கங்கள் மற்றும் கணக்கு முடக்­கத்­தினை ‘இணைப்­புக்­க­ளு­ட­னான போலி­யான நடத்தை’என முகநூல் வர்ணித்துள்ளது. இதற்கு முன்னதாகவும் கடந்த ஆகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முடக்கப்பட்ட பக்கங்கள் மற்றும் கணக்குகளுள் கடும்போக்கு தேசியவாத மதகுரு மற்றும் இராணுவ உயர்மட்ட ஜெனரல் களின் கணக்குகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.