ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரி நிதியத்தை கையாள பொறிமுறையொன்று அவசியம்

பாராளுமன்றத்தில் இம்ரான் மகரூப் வலியுறுத்து

0 213

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஸான்)
இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­புரி நிதி­யத்தை கையாள்­வ­தற்கு அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான பொறி­மு­றை­யொன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்­ட­மூ­லத்தின் இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கையில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது,
ஹஜ் நிதி­யத்தில் 14 கோடி 59 இலட்­சத்து 29 ஆயி­ரத்து 8 நூற்று 58 ரூபாவும் 83 சதமும் கடந்த மார்ச் 28 ஆம் திகதி மிகு­தி­யாக காணப்­பட்­டுள்­ளது. இந்த நிதியின் ஊடா­கவே இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்­களும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் மூன்று உத்­தி­யோ­கத்­தர்­களும் இலங்கை ஹஜ் யாத்­தி­ரீ­கர்­க­ளுக்கு தேவை­யான நலன்­புரி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள தற்­போது சவூதி அரே­பியா சென்­றுள்­ளனர்.

இதில், ஹஜ் குழுவின் நான்கு உறுப்­பி­னர்­க­ளுக்கு தலா 2 இலட்­சத்து 30 ஆயிரம் பெறு­ம­தி­யான விமான டிக்கட், ஹஜ் நிதி­யத்தின் நிதி­யி­லி­ருந்து பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு மேல­தி­க­மாக, குறித்த நான்கு பேரி­னதும் சவூதி அரே­பிய விஜ­யத்­திற்­கான செல­வு­க­ளுக்கு மொத்­த­மாக 40 இலட்சம் ரூபா பணம் ஹஜ் நிதி­யத்­தி­லி­ருந்து வழங்­கப்­பட்­டுள்­ளது.

நாடு தற்­போது பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டி­யினை எதிர்­நோக்­கி­யுள்ள நிலையில் குறிப்­பிட்ட இந்த பாரிய நிதித் தொகை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வருடம் ஹஜ் யாத்­தி­ரீ­கரின் நலன்­புரி நட­வ­டிக்­கை­ளுக்­காக சென்ற ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள் மற்றும் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகி­யோ­ருக்கு ஹஜ் நிதி­யத்தின் நிதி­யினை பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இதற்­கான அனு­மதி விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­க­வி­ட­மி­ருந்தும் பெறப்­பட்­டுள்­ளது.

எனவே, ஹஜ் நலன்­புரி நிதியை கையாள்­வது தொடர்பில் ஒரு பொறி­முறை கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இது விட­யத்தில் அர­சாங்கம் தீர்­மா­ன­மொன்­றுக்கு வர வேண்டும்.
அது­மட்­டு­மல்­லாமல் ஹஜ் குழுவின் செயற்­பா­டு­க­ளினால் அதி­ருப்­தி­ய­டைந்த முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்­க­ளினால் கூட்­டாக இணைந்து புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­க­விடம் எழுத்து மூல முறைப்­பா­டொன்­றையும் சமர்ப்­பித்­துள்­ளனர்.

மேலும், ஹஜ் நலன்­பு­ரிக்கு திணைக்­க­ளத்­தி­லுள்ள பெண் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்­கப்­ப­டாமல் ஆண் உத்­தி­யோ­கத்­தர்­க­ள் மாத்­திரம் அனுப்­பப்­பட்­டுள்ளர். இதே­வேளை, இவ்­வ­ருட ஹஜ் குழு­விற்கு எதி­ராக கிழக்கு மாகா­ணத்­தினைச் சேர்ந்த நான்கு முகவர் நிறு­வ­னங்­க­ளினால் உயர் நீதி­மறத்தில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வருட கட­மைக்­கான ஏற்­பா­டு­களின் போது, ஏற்­க­னவே 2013ஆம் ஆண்டு உயர் நீதி­மன்­றத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ் வழி­காட்­டல்கள் மீறப்­பட்­டமை உள்­ளிட்ட மேலும் பல கார­ணங்­களை முன்­வைத்தே இந்த மனுத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்த ஹஜ் குழு­வினால் பாதிக்­கப்­பட்ட அனைத்து தரப்­பி­ன­ருக்கும் நிவா­ரணம் கிடைப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பதை நான் சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கிறேன்.

முஸ்­லிம்கள் ஹஜ்ஜுப் பெரு­நாளை எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றனர். இந்த தரு­ணத்தில் உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்றும் மார்க்க அனுஷ்­டானம் இருக்­கின்­றது.
நாடு முழு­வதும் மாடு­க­ளுக்கு ஒரு­வகை தொற்று நோய் பர­வி­யி­ருக்­கின்­றது. இந்த விடயம் தொடர்­பில் சுகா­தார அமைச்சு முறை­யான எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளதா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் எவ்விதமான வழிகாட்டல்களும் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்க தவறியுள்ளது. இது தொடர்பில் எமது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எச்.ஏ.ஹலீம் பல தடவை துறைசார் மேற்பார்வை குழுவில் சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்றும் இம்ரான் எம்.பி. தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.