திங்களன்று துல்ஹஜ் மாத தலை பிறை மாநாடு

0 285

(எஸ்.என்.எம்.சுஹைல்)
ஹிஜ்ரி 1444 புனித துல் ஹிஜ்ஜஹ் மாத தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை 19 ஆம் தினதி (துல்கஃதஹ் 29) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.ஹிஷாம் (அல் பத்தாஹி) தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அதன் பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் சிரேஷ்ட அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டின் இறுதித் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஊடாக உத்தியோகபூர்வமாக மாநாட்டு தலைவரினால் அறிவிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளர் ஃபாரிஸ் ஃபஹ்மி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தலைப்பிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ, வதந்திகளையோ பகிர்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பிறை சம்பந்தமாக மேலதிக தகவல்களுக்கு 0112432110, 0112451245, 0777316415 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.