மஹரகம கபூரியா பள்ளிவாசலுக்கு பூட்டு

மாணவர்களின் பாதுகாப்பு கருதியே ஏற்பாடு என்கிறது நிர்வாகம்

0 222

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹ­ர­கம, கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியில் பல தசாப்­த­கா­ல­மாக இயங்கி வந்த பள்­ளி­வா­சலை கபூ­ரியா நம்­பிக்­கை­யாளர் சபை கடந்த 12 ஆம் திகதி முதல் மறு­அ­றி­வித்தல் விடுக்­கப்­படும் வரை மூடி­யுள்­ளது. மாண­வர்­களின் பாது­காப்பு கருதி இவ் ஏற்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக என்.டீ.எச். அப்துல் கபூர் நம்­பிக்­கை­யாளர் சபை விடுத்­துள்ள அறி­வித்­தலில் தெரி­வித்­துள்­ளது.

கபூ­ரியா அர­புக்­கல்­லூரி பள்­ளி­வாசல் மூடப்­பட்­டுள்­ளதால் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும்ஆ தொழு­கைக்­காக இப்­பள்­ளி­வா­சலை பயன்­ப­டுத்தும் சுமார் ஆயிரம் முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் ஜும்ஆ தொழு­கைக்­காக 2 ½ கிலோ மீட்­டர்­க­ளுக்கு அப்­பா­லுள்ள அஸ்ஹர் பிளேஸ் பள்ளிவாச­லுக்குச் செல்­ல­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

மாண­வர்­களின் பாது­காப்­பினை உறுதி செய்யும் இட­மாக அர­புக்­கல்­லூரி வளாகம் மாற்­றப்­ப­டும்­வரை பள்­ளி­வா­சலை பயன்­ப­டுத்த முடி­யாது. வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கைக்­காக மாற்­று­வ­ழி­களை ஒழுங்கு செய்து கொள்­ளு­மாறு இப்­பள்­ளி­வா­சலை பயன்­ப­டுத்தும் பொது மக்கள் நம்­பிக்­கை­யாளர் சபை­யினால் வேண்­டப்­பட்­டுள்­ளார்கள்.
இதே­வேளை கபூ­ரியா நம்­பிக்­கை­யாளர் சபை வெளி­யிட்­டுள்ள அறி­வித்­த­லுக்கு கபூ­ரியா பழைய மாணவர் சங்கம் தெளி­வொன்­றி­னையும் வழங்­கி­யுள்­ளது.

‘பாரம்­ப­ரிய வக்பு” உடை­மை­யொன்­றினை தனியார் உடை­மை­யாக்கிக் கொள்ளும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பள்­ளி­வாசல் பொது­மக்­களின் ஐவேளைத் தொழுகை, ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழு­கைகள், ஜனாஸா தொழுகை மற்றும் ஜனாஸா நல்­ல­டக்க செயற்­பா­டு­க­ளுக்கு எவ்­வித தடை­யு­மின்றி வழங்­கப்­பட வேண்டும் என பழைய மாணவர் சங்கம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

கபூரிய்யா கல்லூரி பள்ளிவாசல் மூடப்பட்டமை தொடர்பான விவகாரத்தை பழைய மாணவர் சங்கம் வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.