ராஜகிரிய மத்ரஸதுந் நூராணியாவின் காணிகள் வேறு நிறுவனமொன்றின் பெயருக்கு மாற்றம்
வக்பு சபையில் முறைப்பாடு, 30 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
(எஸ்.என்.எம்.சுஹைல்,எம்.வை.எம்.சியாம்)
ராஜகிரிய நூராணியா ஜும்ஆப்பள்ளிவாசல், அதன் கீழ் இயங்கும் மத்ரஸதுல் நூராணியா ஹிப்ழ் கல்லூரியின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகள் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் முகாமைத்துவக்குழு அனுமதியின்றி நிதா பவுண்டேஷன் எனும் நிறுவனத்தின் பெயரில் மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வக்பு சபையில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் வக்பு சபையில் இடம்பெற்றது. இதன்போது, இரு தரப்பினரும் வக்பு சபைக்கு தமது நிலைப்பாட்டை தெரிவித்தனர்.
வழக்கு தொடுநர்களான பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மூவர் மற்றும் ஜமாஅத் அங்கத்தவர்கள் இருவர் சார்பில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.- Vidivelli