ஹஜ் நிதிய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது?

தகவலறியும் கோரிக்கை மூலம் விபரம் வெளியானது

0 433

றிப்தி அலி

ஹஜ் நிதி­யத்தின் வங்கிக் கணக்கில் 14 கோடி 59 இலட்­சத்து 29 ஆயி­ரத்து 858 ரூபாவும் 83 சதமும் காணப்­ப­டு­கின்ற விடயம் தக­வ­ல­றியும் கோரிக்­கையின் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நிதி இலங்கை வங்­கியின் சேமிப்புக் கணக்கு மற்றும் முழா­ரபா கணக்கு ஆகி­ய­வற்றில் காணப்­ப­டு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­தது.

“ஹஜ் தொடர்­பான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கும், ஹாஜி­களின் நலன்­க­ளுக்­கா­கவும், சமூ­கத்தின் தேவை­யா­க­வுள்ள திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்கும் ஹஜ் நிதி­யத்தின் ஒரு தொகு­தி­யினை பயன்­ப­டுத்த முடியும்” என திணைக்­க­ளத்தின் தகவல் அதி­கா­ரி­ உதவிப் பணிப்­பாளர் எம்.எஸ். அலா அஹமட் தெரி­வித்தார்.

இந்த வரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கடந்த மார்ச் 14ஆம் திகதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட தக­வ­ல­றியும் விண்­ணப்­பத்­திற்கு கடந்த மார்ச் 28ஆம் திகதி திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­பட்ட பதி­லி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஹஜ் மற்றும் உம்ரா கட­மை­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வது தொடர்பில் உயர் நீதி­மன்­றத்­தினால் சில வழி­காட்­டல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதன் நான்­கா­வது பகு­தியில் கட்­டண வரு­மா­னத்­தினை முகாமை செய்­வது தொடர்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இதற்­க­மைய ஒவ்­வொரு யாத்­தி­ரிகர்­க­ளுக்­கு­மான பதிவுக் கட்­ட­ண­மாக 4 ஆயிரம் ரூபா­வினை ஹஜ் முக­வர்கள் திணைக்­க­ளத்­திற்கு செலுத்த வேண்டும்.

அதேபோன்று ஒவ்­வொரு யாத்­தி­ரிகர்­களும் மீளச் செலுத்தக் கூடிய 25 ஆயிரம் ரூபா­வினை திணைக்­க­ளத்­திற்கு செலுத்த வேண்டும். ஹஜ் குழு­வினால் சேக­ரிக்­கப்­படும் பதி­வுக்­கட்­டணம், நன்­கொடை, ஏனைய வரு­மா­னங்கள் அனைத்தும் அரச வங்­கி­யொன்றில் ஹஜ் கணக்­காக பேணப்­படும். இந்த நிதிக்கு ஹஜ் குழுவே பொறுப்­பாகும்.

இந்த வருடம் இலங்­கைக்கு 3,500 ஹஜ் கோட்­டாக்கள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. இதற்­கான உத்­த­ர­வாத பண­மாக (warranty money) ஒரு கோட்­டா­விற்கு 68 சவூதி றியால்கள் வீதம் 238,000 சவூதி றியால்கள் செலுத்த வேண்டும். இதன் இன்­றைய இலங்கை ரூபா பெறு­மதி சுமார் 2 கோடி 2 இலட்­சத்து 30 ஆயி­ர­மாகும்.

ஹஜ் நிதி­யத்தின் ஊடாக செலுத்­தப்­ப­ட­வுள்ள இத்­தொகை, ஹஜ் முக­வர்­க­ளி­ட­மி­ருந்து பின்னர் அற­வி­டப்­பட்­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, 150 பேஸாக்­களும் (Bessa) இம்­முறை இலங்­கைக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. 45 ஹாஜி­க­ளுக்கு ஒன்று என்ற அடிப்­ப­டையில் பேஸாக்கள் ஹஜ் முக­வர்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இவ்­வாறு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட பின்னர் மீத­முள்ள பேஸாக்கள் மருத்­துவக் குழு மற்றும் நிர்­வாக தன்­னார்­வலர்­களை அனு­ம­திக்­கப்­பட்ட அள­வு­கோலின் அடிப்­ப­டையில் தெரி­வு­செய்து வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பதவி வழி அடிப்­ப­டையில் ஹஜ் குழுவின் உறுப்­பி­ன­ராக செயற்­ப­டுவார். இதனால், ஹஜ் குழு எடுக்கும் தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதும், அதனை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்கும் அதி­கா­ரமும் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கே உள்­ளது.

அது மாத்­தி­ர­மல்­லாமல், ஹஜ் குழுவின் அங்­கீ­கா­ரத்­துடன் ஹஜ் நிதி­யத்­தி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­படும் கொடுப்­ப­ன­வு­க­ளுக்கு அனு­மதி வழங்கும் அங்­கீ­கா­ரமும் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரி­டமே காணப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, சவூதி அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இலங்கை யார்த்­தி­ரிகர்­க­ளுக்­கான கோட்­டா­வினைப் பெறல், ஹாஜி­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து மற்றும் மினா தங்­கு­மிட வச­திகள் போன்ற ஏற்­பா­டு­களைச் செய்­வ­தற்­காக சவூதி அரே­பிய நிறு­வ­னங்­க­ளுடன் ஒப்­பந்தம் செய்தல், சுயேட்­சை­யாக செயற்­படும் ஒரு குழுவை நிய­மித்து ஹஜ் முக­வர்­க­ளுக்கு நேர்­முகப் பரீட்­சை­யினை மேற்­கொண்டு அக்­கு­ழு­வினால் பரிந்­துரை செய்­யப்­படும் ஹஜ் முக­வர்கள் தொடர்பில் இறுதித் தீர்­மானம் எடுத்தல், விமான சேவை முக­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி ஹாஜிகள் செலுத்த வேண்­டிய விமான பயணச் சீட்­டுக்­கான கட்­ட­ணத்­தினை குறைக்க நட­வ­டிக்கை எடுத்தல் போன்­றன ஹஜ் குழுவின் பிர­தான செயற்­பா­டு­க­ளாகும்.

இதற்கு மேல­தி­க­மாக ஹஜ் முக­வர்கள் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு வாக்­கு­றுதி வழங்­கி­யது போன்று செயற்­ப­டு­கின்­ற­னரா என்­பதை திணைக்­க­ளத்­துடன் இணைந்து மேற்­பார்வை செய்தல், ஹஜ் முடி­வுற்­றதும் முக­வர்கள் தொடர்பில் கருத்துக் கணிப்­பொன்று மேற்­கொள்ளப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தல், ஹஜ் முடி­வுற்­றதும் முகவர்கள் தொடர்பான முறைப்­பா­டு­களை பெற்று சுயேட்­சை­யான குழு­வொன்றை நிய­மித்து விசா­ரணை மேற்­கொள்ளல், விசா­ரணைக் குழுவின் பரிந்­துரை தொடர்­பான இறுதித் தீர்­மா­னத்­தினை எடுத்தல் போன்ற பணி­களும் ஹஜ் குழு­விடம் காணப்படுகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.