புதிய சட்டங்களை இயற்றுவதை விடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குக

ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் கோரிக்கை

0 335

புதிய பெயர்­களில் மேலும் கொடூ­ர­மான சட்­டங்­களை இயற்­று­வதை விடுத்து, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முற்­றாக இரத்துச் செய்­யு­மாறு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம்.சுஹைர் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­மாற்ற தடுப்புச் சட்டம், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி­யு­தவி செய்­வதை தடுப்­ப­தற்­கான சம­வாயம் போன்ற பல புதிய சட்­டங்­களும் சக்­தி­வாய்ந்த புல­னாய்வு வழி­மு­றை­களும் ஏற்­க­னவே அமுலில் உள்ள நிலையில், புதிய பெயர்­களில் மேலும் கொடூ­ர­மான சட்­டங்­களை இயற்ற முயற்­சிப்­ப­தாக நாம் அறி­கிறோம்.

இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் பிற சட்டப் பாது­காப்­பு­களை மீறு­வ­தா­னது ஒரு பொது­வான நிகழ்­வா­கி­விட்­டது. எனினும் பெரும்­பா­லான பொது­மக்கள் உச்ச நீதி­மன்­றத்தை நாடி அடிப்­படை உரி­மை­களை பாது­காப்­ப­தற்­கான வாய்ப்­பு­களை கொண்­டி­ருக்­க­வில்லை.

பிர­பல்யம் வாய்ந்த வழக்­கு­களைத் தவிர, ஏனைய வழக்­கு­களில் நீதியைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு மனித உரிமை ஆணைக்­கு­ழுக்கள் தவ­றி­விட்­டன. வழக்குச் செல­வு­களை விட முறைப்­பா­ட­ளிப்­ப­தற்குப் பயந்து எவ்­வாறு மக்கள் அமை­தி­யா­கி­வி­டு­கின்­றனர் என்­பதை ஓர் ஆணைக்­கு­ழுவை நிய­மிப்­பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

2018 ஆம் ஆண்டில் அப்­போ­தைய அர­சாங்கம் ஒரு புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தை இயற்ற முயன்ற போதிலும் பலத்த எதிர்ப்பு கார­ண­மாக அது கைவி­டப்­பட்­டது. எனினும் தற்­போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தையும் விட மிகவும் மோச­மான சட்­டங்­களை கொண்டு வரு­வ­தற்­கான நகர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதற்கு அனு­ம­திக்க முடி­யாது. என­வேதான் மேலும் புதிய சட்டங்களை இயற்றுவதை விடுத்து, தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கின்ற நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.