­நாட்டுக்காக ஒன்றுபட வேண்டிய காலம் இது

0 413

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அனை­வ­ரையும் ஒன்­று­பட்டுச் செயற்­பட முன்­வ­ரு­மாறு ஜனா­தி­பதி அடிக்­கடி அழைப்பு விடுத்து வரு­கிறார். நேற்­றைய தினம் கொழும்பு ரோயல் கல்­லூ­ரியில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய அவர், இந்த அழைப்பை மீண்டும் நினை­வு­ப­டுத்­தினார்.

“இந்த நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப அனைத்து போட்டி எண்­ணங்­க­ளையும் மறந்து ஒன்­றி­ணை­யு­மாறு அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கின்றேன். அர­சி­யலில் ஈடு­படும் எவ­ரையும் தமது அர­சியல் பய­ணத்தை நிறுத்­தி­விட்டு என்­னுடன் இணை­யு­மாறு நான் கோர­வில்லை. ஆனால் நாட்டின் வீழ்ச்­சி­ய­டைந்த பொரு­ளா­தா­ரத்தை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பும் வரை அனைத்து அர­சி­யல்­வா­திகள், வர்த்­த­கர்கள், விவ­சா­யிகள், கல்­வி­ய­லா­ளர்கள், பேரா­சி­ரி­யர்கள் உள்­ளிட்ட அனை­வ­ரையும் ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­மாறு கேட்­டுக்­கொள்­கிறேன். அத்­துடன், இந்த நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஒன்­றி­ணை­யு­மாறு பாது­காப்புப் படை­யினர், பொலிஸார், அரச உத்­தி­யோ­கத்­தர்கள், ஆசி­ரி­யர்கள் என அனை­வ­ரையும் கேட்­டுக்­கொள்­கின்றேன். இதுதான் நாம் ஒன்­றி­ணைந்து எதிர்­கொள்ள வேண்­டிய சவா­லாகும்” என அவர் இந் நிகழ்வில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
அதே­போன்­றுதான் சமூக நீதிக்­கான தேசிய இயக்­கத்தின் தலை­வரும் முன்னாள் சபா­நா­ய­க­ரு­மான கரு ஜய­சூ­ரி­யவும் இதே­போன்­ற­தொரு அழைப்பை விடுத்­துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ள அவர், அனைத்­துத்­த­ரப்­பி­னரும் தற்­போது நாடு முகங்­கொ­டுத்­தி­ருக்கும் நெருக்­க­டியின் பார­தூ­ரத்­தன்­மையை சரி­யாகப் புரிந்­து­கொண்டு, நாட்டின் நல­னுக்குக் கேடு விளை­விக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டா­தி­ருப்­பது அவ­சி­ய­மென வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

“இன்­ற­ள­விலே எமது நாடு முகங்­கொ­டுத்­தி­ருக்கும் பாரிய நெருக்­க­டியின் உண்­மை­யான நிலை­வ­ரத்தை அனைத்­துத்­த­ரப்­பி­னரும் சரி­யாகப் புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இருப்­பினும் தற்­போது நாடு எதிர்­கொண்­டி­ருக்கும் மிக மோச­மான ஆபத்து குறித்த உண்­மை­யான புரி­த­லு­டன்தான் அனைத்­துத்­த­ரப்­பி­னரும் செயற்­ப­டு­கின்­றார்­களா? என்ற கேள்­வியை எழுப்­ப­ வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஒட்­டு­மொத்த நாடு தொடர்பில் கொண்­டி­ருக்கும் தீவிர கரி­ச­னை­யு­டனும், எந்­த­வொரு அர­சியல் தரப்­பு­டன்­கூ­டிய அதி­கார ஆசை­க­ளு­மின்­றியே நாம் இவ்­வாறு கேள்வி எழுப்­பு­கின்றோம். அது­மாத்­தி­ர­மன்றி இன, மத, மொழி உள்­ளிட்ட குறு­கிய மட்­டுப்­பா­டு­க­ளுக்குள் சிக்­காத, முன்­னேற்­ற­ம­டைந்த நாட்டை எமது அடுத்த தலை­மு­றை­யி­ன­ரிடம் கைய­ளிக்­க­வேண்­டிய பொறுப்பு எமக்கு இருக்­கின்­றது.

அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காக ஒரு­வ­ருக்­கொ­ருவர் பிரிந்­து­நின்று சண்­டை­யி­டக்­கூ­டிய சூழ்­நி­லையில் இப்­போது நாடு இல்லை. மாறாக அனைத்­துத்­த­ரப்­பி­ன­ரதும் கூட்­டி­ணைந்த கடப்­பாட்டின் ஊடாக நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே தற்­போ­தைய அவ­சி­யத்­தே­வை­யாக இருக்­கின்­றது. எனவே அர­சாங்­கமும், ஏனைய அர­சியல் கட்­சி­களும், ஏனைய முக்­கிய கட்­ட­மைப்­புக்­களும் தேசிய ரீதி­யி­லான பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­ப­டு­வ­துடன் அனைத்­துப்­பி­ர­ஜை­களும் பொது­வான புரிந்­து­ணர்வைக் கொண்­டி­ருப்­பது காலத்தின் தேவை­யாகும்.

ஆகவே நாட்டின் நல­னுக்குக் கேடு விளை­விக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதைத் தவிர்க்­கு­மாறு அனைத்­துத்­த­ரப்­பி­ன­ரி­டமும் வலி­யு­றுத்­து­கின்றோம். அதே­போன்று அர­சாங்கம் மக்­களின் உணர்­வு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் நன்கு புரிந்­து­கொண்டு, பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வு­காண்­பது அவ­சி­ய­மாகும். மேலும் மக்­களின் கருத்­துக்கு மதிப்­ப­ளித்து, தேர்­தல்­களை உரிய காலப்­ப­கு­தியில் நடாத்­து­மாறும் வலி­யு­றுத்­து­கின்றோம்” என்றும் கரு ஜய­சூ­ரிய தனது அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டுள்ளார்.

உண்­மையில் நாடு மிகப் பாரிய நெருக்­க­டியில் சிக்­கி­யுள்ள நிலையில், இதி­லி­ருந்து வெளி­வ­ரு­வ­தற்­கான முயற்­சி­களை முன்­னெ­டுப்­பது ஆட்­சியில் உள்­ள­வர்­க­ளது கடமை மாத்திரமல்ல. மாறாக ஆளும் தரப்புடன் எதிர்த்தரப்புகளும் இணைந்தே இந்தக் கடினமான பணியை முன்னெடுக்க வேண்டும்.

இன்று எதிர்க்கட்சிகள் நாடளாவிய ரீதியில் பாரிய கூட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருவதைக் காண்கிறோம். ஜனநாயக நாடென்ற வகையில் யாரும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். எனினும் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பொதுவானதொரு கொள்கையை உருவாக்கி அதன்படி அடுத்து வரும் சில வருடங்களுக்குச் செயற்பட வேண்டியதே காலத்தின் தேவையாகும். அதைவிடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் நாட்டை வழிநடாத்த முயற்சிப்பது மீண்டும் ஒரு பொருளாதார பேரனர்த்தத்திற்கே வழிவகுக்கும். எனவேதான் முன்னாள் சபாநாயகரும் சிரேஷ்ட அரசியல் தலைவருமான கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளதுபோன்று சகல தரப்பினரும் காலத்தின் தேவை கருதி ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.