65 நிர்வாகப் பிரிவுகளுக்கு காதி நியமனங்கள் இன்மையால் சிரமம்

நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை

0 268

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் இயங்­கி­வரும் 65 காதி­நீதி நிர்­வாகப் பிரி­வு­க­ளுக்கு நிரந்­தர காதி நீதி­ப­திகள் நிய­மிக்­கப்­ப­டா­ததால் மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கி­றார்கள் என்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்ள காதி நீதி­வான்கள் போரம்,இவ்­வி­ட­யத்தில் உடன­டி­யாக தலை­யிட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷவைக் கோரி­யுள்­ளது.

அத்­தோடு வெற்­றி­ட­மாக உள்ள குறிப்­பிட்ட 21 காதி­நீதி நிர்­வாகப் பிரி­வு­க­ளுக்கு பதில் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள காதி­நீ­தி­ப­திகள் குறிப்­பிட்ட பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்­வற்கு நீண்ட நேரத்­தையும், போக்­கு­வ­ரத்து கட்­ட­ணத்­தையும் செல­விட வேண்­டி­யுள்­ளதால் அவர்­களும் சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தா­கவும் காதி­நீ­தி­வான்கள் போரத்தின் உப­த­லைவர் எப்.இப்ஹாம் யெஹ்யா நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வுக்கு காதி­நீ­த­வான்கள் போரத்தின் உப­த­லைவர் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;
64 காதி நீதி­பதி பிரி­வு­க­ளுக்கு புதிய நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்­காக 2022 டிசம்பர் மாதம் நேர்­முகப் பரீட்சை நடாத்­தப்­பட்டும் இது­வரை நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. அனைத்து காதி­நீ­தி­ப­தி­களின் பத­விக்­காலம் இம்­மாதம் பெப்­ர­வ­ரி­யுடன் கால­வ­தி­யாகவுள்­ளது.

21 காதி­நீ­தி­ப­திகள் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டதால் அல்­லது இரா­ஜி­னாமா செய்­ததால் அவ்­வி­டங்­க­ளுக்கு புதிய நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. இப்­பி­ரி­வு­க­ளுக்கு அரு­கி­லுள்ள காதி­நீ­தி­ப­தி­களே பதில் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்கள் தங்கள் பகு­தி­க­ளி­லி­ருந்தே பதில் கட­மை­யாற்­று­கி­றார்கள். இதனால் பொது­மக்கள் அவ்­வி­டங்­க­ளுக்கு நீண்ட தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.

உதா­ர­ண­மாக நாவ­லப்­பிட்டி காதி­நீ­திவான் கம்­பளை மற்றும் ஹட்டன் பிரி­வு­க­ளுக்கு பதில் காதி­நீ­தி­வா­னாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பதில் காதி­நீ­தி­வா­னாக கட­மை­யாற்றும் காதி­க­ளுக்கு கொடுப்­ப­ன­வாக மாதம் 3750 ரூபாவே வழங்­கப்­ப­டு­கி­றது.

தற்­போது காதி­நீ­தி­ப­தி­க­ளுக்கு கொடுப்­ப­ன­வாக மாதம் 7500 ரூபாவும் தபால் மற்றும் செய­லக பணி­க­ளுக்­காக 6250 ரூபா­வுமே வழங்­கப்­ப­டு­கி­றது. இந்தக் கொடுப்­ப­னவு போது­மா­னதா? என்­பதை நீங்­களே தீர்­மா­னி­யுங்கள்.

காதி­நீ­தி­ப­தி­களின் சேவை மக்களுக்கு சிறந்த சேவையாக இருக்க உங்கள் ஆதரவும் வழிகாட்டுதலும் எமக்கு அவசரமாகத் தேவை.

காதி­களின் தரம் ஊதியம் என்­ப­ன­வற்றை உயர்த்­து­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வேண்­டிக்­கொள்­கிறோம். எமது பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நேரம் ஒதுக்கித் தரு­மாறும் வேண்­டு­கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.