‘ஐஸ்’ போதைக்கு அடிமையான இளைஞனின் கதை

0 1,214

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் பர­வ­லாக பயன்­பாட்­டி­லுள்ள போதைப்­பொ­ருட்­களில் ‘ஐஸ்’ கிரீடம் சூடிக்­கொண்டு முன்­ன­ணியில் பய­ணிக்­கி­றது. நாட்டில் ‘ஐஸ்’இன் ஆதிக்கம் அண்­மைக்­கா­ல­மாக வலு­வ­டைந்­துள்­ள­மையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. போதைப்­பொ­ருட்கள் தொடர்பில் நடாத்­தப்­பட்ட ஆய்­வு­களில் பல திடுக்­கிடும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

எமது நாட்டில் ஒரு வருட கால எல்­லைக்குள் ‘ஐஸ்’ எனும் போதைப்­பொருள் 10 ஆயிரம் கிலோ அளவில் நுக­ரப்­ப­டு­வ­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. ஹெரோய்ன் மற்றும் கொகேன் என்­ற­ழைக்­கப்­படும் போதைப்­பொ­ருள்­களின் பாவனையே எமது நாட்டில் அதி­க­ரித்­துக்­கா­ணப்­பட்­டது. இந்­நி­லையில் ‘ஐஸ்’ எனும் போதைப்­பொ­ருளின் பாவனை சிறி­ய­ள­விலே இருந்­தது. என்­றாலும் கடந்த ஓரிரு வரு­டங்­க­ளாக இதன் பாவனை அதி­க­ரித்­துக் ­கா­ணப்­ப­டு­கி­றது.

எமது நாட்டின் போதைப்­பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக கோஷ்­டியைச் சேர்ந்த சிலரின் புதி­ய­ வர்த்­தகப் பொரு­ளாக ‘ஐஸ்’ (கிறிஸ்டல் மெதன்­பெ­டமய்ன்) மாறி­யுள்­ளது. பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் சூட்­சு­ம­மாக ‘ஐஸ்’ போதைப்­பொருள் விநி­யோகம் உட்­பு­குந்­துள்­ளது. நாடெங்­கு­­முள்ள பாட­சாலை மாண­வர்­களின் புத்­தக பைகளை சோத­னை­யி­டு­ம­ள­வுக்கு நிலைமை மோச­மா­கி­யுள்­ளது.

‘ஐஸ்’க்கு அடி­மை­யான
ஓர் இளை­ஞனின் கதை
“தம்பி நீ எங்கே போகிறாய்? சொட் ஒன்று அடிப்­போமா? இதை ஒரு முறை அடித்­துப்­பாரும். உனக்கு நல்­லவோர் ஆத்தல் (சுகம்) கிட்டும். வேறு எந்­தப்­பொ­ரு­ளி­லி­ருந்தும் கிடைக்­காத சுகம் ஒன்று இதி­லி­ருந்து கிடைக்கும். இதை அடித்­துப்பார். காசு­ வேண்டாம் என்று கூறி எனக்கு ‘ஐஸ்’ போதைப்­பொ­ருளை தந்­த­வர்கள் எனது வீட்­டுக்குப் பக்­கத்­தி­லுள்ள அண்­ணன்மார் குழு­வொன்­றாகும். இவர்­களே முதன்­முதல் ‘ஐஸ்’ போதைப்­பொ­ருளைத் தந்­தார்கள்.

‘ஐஸ்’ போதைப்­பொ­ரு­ளுக்கு தீவி­ர­மாக அடி­மை­யாகி பாதிக்­கப்­பட்ட ஓர் இளை­ஞரின் வேதனை மிகுந்த வார்த்­தை­களே இவை.

இந்த இளைஞர் கொழும்பு மாந­கர எல்­லைக்குள் வசிப்­பவர். அவர் தனது கதையைத் தொடர்ந்தார். ‘நான் மாந­கர சபை எல்­லைக்குள் பெற்­றோ­ருடன் வசிக்­கிறேன். நான் பாட­சா­லைக்குச் செல்­லும்­போதும் டியுசன் வகுப்­பு­க­ளுக்குச் செல்­லும்­போதும் வீட்டார் என்னை சாமான்கள் வாங்­கு­வ­தற்கு கடைக்கு அனுப்­பும்­போதும் நான் வசிக்கும் பகு­தி­யி­லுள்ள சிறி­ய சந்­தியைக் கடந்­துதான் செல்ல வேண்டும். இந்தச் சந்­தியில், போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யான அண்­ணன்மார் குழு­வொன்று இருக்கும். நான் மிகவும் அறி­மு­க­மான, அறி­ந்த­வர்கள் தான் அவ்­வி­டத்தில் இருப்­பார்கள். பிர­பல்­ய­மான பாட­சா­லைக்குச் செல்­ப­வர்­களும் இருப்­பார்கள்.

அநே­க­மான சந்­தர்ப்­பங்­களில் இவர்கள் அந்தச் சந்­தி­யில்தான் ஒன்று கூடி­யி­ருப்­பார்கள். இவ்­வாறு இவர்கள் ஒன்று கூடி இருந்த சந்­தர்ப்­பத்­தில்தான் ‘ஐஸ்’ இழுத்­துப்பார்… சுவர்க்­கத்­துக்­குப் ­போ­கலாம் என்­றார்கள். அவர்கள் ‘ஐஸ்’ போதைப்­பொ­ருளை மூக்­கினால் இழுத்து உள்­வாங்கிக் கொள்­வதைப் பார்த்­த­போது எனக்கும் ஆசை­யேற்­பட்­டது. நானும் அவர்­கள்போல் ‘ஐஸ்’ஐ நுகர வேண்டும் என்று உந்­தப்­பட்டேன். அவர்­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்ட ஐஸை மூக்­கினால் நுகர்ந்தேன்.

நான் முதன்­மு­தல் ‘ஐஸ்’ போதைப்­பொ­ருளைப் பயன்­ப­டுத்­தி­ய­போது எனக்கு வயது 16. இன்­றைக்கு ஒரு வரு­டத்­துக்கு முன்பு ஐஸை நான் முதன்­முதல் பயன்­ப­டுத்­தி­ய­தி­லி­ருந்து மீண்டும் பயன்­ப­டுத்த வேண்டும் என்ற உந்­துதல் எனக்குள் ஏற்­பட்­டது.

முதன்­முதல் இதனைப் பயன்­ப­டுத்­தினால் நித்­திரை குறையும். 4 அல்­லது 5 நாட்கள் என்­றாலும் தொடர்ந்து தூங்­காது விழித்­துக்­கொண்­டி­ருக்கும் அள­வுக்கு எனக்குள் பெரும் பலம் ஏற்­பட்­டது.இவ்­வாறு தூக்கம் வரா­ம­லி­ருந்­ததால் படிப்­ப­தற்கு இந்த ஐஸ் போதைப்­பொருள் நல்­லது என்று நினைத்தேன். நான்­றாக வேலை செய்ய முடி­யு­மாக இருந்­தது. எவ்­வித களைப்பும் ஏற்­ப­ட­வில்லை.

அதனால் தொடர்ந்தும் இதனை நான் உப­யோ­கித்தேன். ஆரம்ப காலத்தில் நான் ஒரு பேயைப்போல் இருந்தேன். பின்பு எனது உடம்­புக்குள் ஏதோ நடப்­ப­துபோல் உணர்ந்தேன். ஐஸ் பாவித்த ஆரம்ப காலத்தில் வீட்டார் அது­பற்றி அறிந்து கொள்­ள­வில்லை. எனக்கு போதை அதி­க­ரிக்­கா­ததன் கார­ண­மாக வீட்டார் இது பற்றி அறிந்து கொள்­ள­வில்லை.

பாவிக்க பாவிக்க எனது உடம்­புக்­குள்­ளேயே ‘கிக்’ ஏற்­ப­டு­வதை உணர்ந்தேன். தினம் இரவு நேரத்தில் கட்­டா­ய­மாக இதனை நான் உப­யோ­கிப்பேன். ஒரு ­த­டவை பாவித்தால் இரண்டு நாட்கள் தூங்­காமல் இருக்­கலாம். நான் தொடர்ந்து இந்த போதைப் பொருளை பயன்­ப­டுத்­தி­யதால் எனது உடலின் நிறை படிப்­ப­டி­யாக குறைந்­தது. சுமார் 15 கிலோ இழப்பு ஏற்­பட்­டது. எனது எலும்­புகள் உக்­கிப்­போகும் நிலை ஏற்­பட்­டது. உடம்­பிலும் படிப்­ப­டி­யாக மாற்­றங்கள் ஏற்­பட்­டன. வாய் காய்ந்து போனது. அதி­க­மாக வியர்த்­தது. சாப்­பி­டு­வ­தற்கும் முடி­யா­மற்­போ­னது.

‘ஐஸ்’ போதைப்­பொருள் நுகர்வு கார­ண­மா­கவே எனக்குள் இந்த மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­றன என்­பதை நான் உணர்ந்து கொண்­டதால் இந்த ஆபத்­தி­லி­ருந்தும் நான் மீள வேண்டும் எனத் தீர்­மா­னித்தேன். ஓரிரு வாரங்கள் மனதில் தைரி­யத்தை ஏற்­ப­டுத்­திக்­கொண்டு ஐஸ் பாவிப்­ப­தி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருந்தேன். என்­றாலும் ஐஸ் மீதே எனது நாட்டம் சென்­றது.

எத்­தனை முயற்­சிகள் மேற்­கொண்­டாலும் நான் ‘ஐஸ்’ பாவ­னைக்கு அடி­மை­யானேன். எனது முகம் எதிர்­பா­ராத அள­வுக்கு மெலி­வுக்­குட்­பட்­டது. கண்­ணா­டியில் எனது முகத்தைப் பார்த்த போது நான் வெறுப்­புக்­குள்­ளானேன். கண்­களின் கீழே கருமை படர்ந்­தது. எனது உடலின் நிறை ­வெ­கு­வாகக் குறைந்­தது. உடம்பில் விரை­வாக படிப்­ப­டி­யாக மாற்­றங்கள் ஏற்­பட்­ட­போது எனக்கு என்னைப் பற்­றியே கவலை ஏற்­பட்­டது.

வீட்­டாரை நினைக்­கும்­போது எனக்குக் கவ­லை­யேற்­பட்­டது. எனது தாயும், தந்­தையும் அரச ஊழி­யர்கள். அவர்கள் பாது­காப்பு பிரிவில் சேவை­யாற்­று­ப­வர்கள். பெற்றோர் அதி­க­மாக வீட்டில் இருப்­ப­தில்லை. இத­னாலே எனக்கு கூடுதல் சுதந்­திரம் கிடைத்­தது. இந்தச் சுதந்­தி­ரத்தை நான் இவ்­வா­றான தவ­றான செயல்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­திக்­கொள்வேன் என அவர்கள் நினைத்­தி­ருக்­க­வில்லை.

நான் தவ­றான நண்­பர்­க­ளுடன் பழ­கி­ய­த­னாலே எனக்கு இந்­நி­லைமை ஏற்­பட்­டது. இவ்­வா­றான போதைப்­பொருளை முன்பு நான் பார்த்­தி­ருக்­க­வே­யில்லை. படிப்பிலும் விளையாட்டிலும் நான் முன்னிலையில் இருந்தவன். இன்று என்னால் 100 மீற்றர் தூரத்­தைக்­கூட நடந்து செல்ல முடி­யாத நிலை­மையில் உள்ளேன். இந்தப் பழக்­கத்­துக்கு அடி­மை­யா­ன­தாலே இன்று எனக்கு இந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இன்று கவ­லைப்­ப­டு­கிறேன். எனக்கு நானே வெட்­டிக்­கொண்ட குழி இது. போதைப்­பொ­ருளை எவரும் நினைத்­துக்­கூட பார்க்­க­வேண்டாம் என்று ஒவ்­வொ­ரு­வ­ரையும் வேண்­டிக்­கொள்­கிறேன். போதைப்­பொருள் பாவித்தால் நாம் சமூ­கத்­தில் ஏள­ன­மாக்­கப்­ப­டுவோம். சமூகம், எம்மை வளர்த்து ஆளாக்­கிய பெற்­றோ­ரையே குற்றம் சுமத்தும், தூற்றும். என்­மீது சமூகம் பல­வாறு குற்றம் சுமத்­து­கி­றது. ஏளனம் செய்­கி­றது. ஐஸா, குட்டா எனும் வார்த்­தை­களால் என்னை அழைக்­கி­றார்கள்.

போதைப்­பொருள் பாவ­னை­ எனும் ஆபத்­தி­லி­ருந்து விடு­ப­ட­வேண்டும் என்று திட­சங்­கற்பம் பூண்டால் இதி­லி­ருந்தும் நிச்­ச­ய­மாக மீள­மு­டியும். எனது தாயார் சிந்தும் கண்­ணீரை நான் தினமும் கண்­ட­தி­லி­ருந்து இதி­லி­ருந்து மீள­வேண்டும் என்ற தீர்­மா­னத்­திற்கு வந்தேன். நான் எனது பெற்­றோரை பல வகையில் நிந்­தனை செய்­திருக்கிறேன். பணம் கேட்டு சண்­டை பி­டித்­தி­ருக்­கிறேன். போராட்டம் நடத்­தி­யி­ருக்­கிறேன்.இன்று அனைத்­தையும் நினைத்து நான் கவ­லைப்­ப­டு­கிறேன். என்­னைப்போல் எவரும் இவ்­வா­றான நிலை­மைக்­குள்­ளாக வேண்டாம்.

நான் தற்­போது மன­நிலை வைத்­தி­ய­ருடன் எனது நிலைமை தொடர்பில் கலந்­து­ரை­யாடி தேவை­யான சிகிச்­சை­களைப் பெற்று வரு­கிறேன். இரண்­டு­ மாத கால­மாக புன­ருத்­தா­பன ஆலோ­ச­னை­க­ளையும், செயற்­பா­டு­க­ளையும் பெற்று வரு­கிறேன். ஐஸ் ­போதைப் பொருள் பாவனை கார­ண­மாக நான் பல­வற்றை இழந்து விட்டேன். குறிப்­பாக எனது க.பொ.த உயர்­த­ர­ ப­ரீட்­சைக்கு கூட என்னால் உரிய காலத்தில் தோற்ற முடி­யாது போய்­விட்­டது. இப்­போ­துதான் அதற்­கான ஏற்­பா­டு­களை செய்து வரு­கி­றேன்­’’ என்றார்.

‘ஐஸ்’ போதைப்­பொருள்
‘ஐஸ்’ போதைப்­பொருள் நாடெங்கும் வியா­பித்து விட்­டது. கிரா­மங்கள், நக­ரங்கள் என்ற வேறு­பா­டின்றி சந்து பொந்­து­க­ளுக்­குள்ளும் நுழைந்து விட்­டது.
போதைப்­பொருள் குறிப்­பாக ‘ஐஸ்’ விற்­ப­னை­யிலும், விநி­யோ­கத்­திலும் முஸ்லிம் கிரா­மங்கள் முன்­ன­ணியில் இருப்­ப­தாக செய்­திகள் பர­வி­யுள்­ளன. முஸ்­லிம்­களின் முன்­னணி வர்த்­த­கர்கள், பள்­ளி­வா­சல்­ நிர்­வா­கிகக் கூட இத­னுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் பள்­ளி­வா­சல்கள் தோறும் போதைப்­பொருள் ஒழிப்பு விழிப்­பு­ணர்வுக் கூட்­டங்கள் நடாத்­தப்­ப­ட­வேண்டும். பெற்­றோர்­களும் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.பெற்­றோர்கள் தங்­க­ளது பிள்­ளை­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.

மாணவர் மற்றும் இளைஞர் பரம்­ப­ரை­யினை போதைப்­பொருள் பெரு­ம­ளவு ஆட்­கொண்டு விட்­டது.

18க்கும் 30 வய­துக்கும் இடைப்­பட்ட இளை­ஞர்­களில் 75 வீத­மானோர் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­கி­யுள்­ளமை கார­ண­மாக மனநோய் வைத்­தி­ய­சா­லைக்கு வருகை தரும் இவ்­வா­றான நோயா­ளர்­களின் எண்­ணிக்­கையும் பெரு­ம­ளவு அதி­க­ரித்­துள்­ளது.
இதன் ­கா­ர­ண­மாக கொழும்பு பிர­தே­சத்தில் மாதம் சுமார் 10 இளை­ஞர்கள் தற்­கொலை செய்து கொள்­வ­தாக அங்­கொடை தேசிய மனநோய் சுகா­தார நிலையம் தெரி­விக்­கி­றது. கடந்த இரு மாதங்­க­ளாக இவ்­வா­றான நோயா­ளர்­களின் எண்­ணிக்கையில் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இதுவரை காலம் எமது நாட்டில் ‘ஐஸ்’ போதைப்­பொருள் தொடர்பில் சட்ட ஏற்­பா­டுகள் இருக்­க­வில்­லை­யா­யினும் கடந்த நவம்பர் 24 ஆம் திக­தி­யி­லி­ருந்து ‘ஐஸ்’ போதைப்­பொருள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்­கைகள் நீதி­மன்றம் மூலம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.

‘ஐஸ்’­ போதைப் பொருளை தம்­வசம் வைத்­தி­ருத்தல், விற்­பனை செய்தல் போன்ற குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்­க­ளுக்கு நீதி­மன்றம் மூலம் சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

‘ஐஸ்’ போதைப்­பொருள் 5 கிராம் அல்­லது அதற்கு மேல் தம்­வசம் வைத்­தி­ருப்­ப­வர்கள் மற்றும் விற்­பனை செய்­ப­வர்­க­ளுக்கு பிணை வழங்­கப்­ப­ட­மாட்­டாது. அவர்கள் குற்­ற­வா­ளிகள் என நிரூ­பிக்­கப்­பட்டால் அவர்­க­ளுக்கு மர­ண­ தண்­டனை அல்­லது ஆயுள் தண்­டணை வழங்­கப்­படும்.

போதைப்­பொ­ருளை ஒழிப்­பதில் நாட்டு மக்கள் ஒவ்­வொ­ரு­வரும் பொறுப்­புடன் செயற்­ப­ட­வேண்டும். இத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.