அர­சி­ய­லுக்­காக குர்­ஆனை இழி­வு­ப­டுத்த வேண்டாம்

டலஸை கண்­டிக்­கிறார் முஜிபுர் ரஹ்மான்

0 1,102

அல்­குர்­ஆனின் போத­னைகள் குறித்து அறி­யாத பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும, வெறும் அர­சியல் இலாபம்  அடைந்­து­கொள்­வ­தற்­காக அல்­குர்­ஆனை இழி­வு­ப­டுத்தக் கூடாது என கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

நேற்­று­முன்­தினம் அலரி மாளி­கையில் இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,
அன்­மையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றின்­போது உரை­யாற்­றிய டளஸ் அல­கப்­பெ­ரும அல்­குர்­ஆ­னையும் ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்­பையும் தொடர்­பு­ப­டுத்தி குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த கருத்­தா­னது கண்­டிக்­கத்­தக்க வகையில் அமைந்­தி­ருக்­கி­றது.

ஐ.எஸ். அமைப்­பா­னது தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்பு. அந்த அமைப்பு இஸ்­லாத்­துடன் தொடர்­பு­பட்ட அமைப்­பாக கருத முடி­யாது. இலங்கை முஸ்­லிம்கள் அவ்­வ­மைப்பை ஏற்­க­வில்லை. அத்­தோடு அதற்கும் இல்­லாத்­திற்கும் தொடர்­பில்லை என நாம் தெட்டத் தெளி­வாக இதற்கு முன்னர் கூறி­யி­ருக்­கின்றோம்.

புனித குர்­ஆ­னா­னது உலக மக்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்தும் ஒரு புனி­த­மான நூலாகும். அதில் தீவி­ரவாம் போதிக்­கப்­ப­ட­வில்லை.

டளஸ் அழ­கப்­பெ­ரும மேதாவி போல் அனைத்தும் தெரிந்­த­துபோல் கதைக்கக் கூடி­யவர். அல்­குர்­ஆனில் என்ன இருக்­கின்­றது என அவர் தெரி­யாமல் கதைக்கிறார். அவர், உன்மை நிலைவரத்தை தெரிந்துகொண்டு உரையாற்ற வேண்டும் என்றும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.