பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விரைவில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு எதிராகவும் பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் இலங்கை வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறுவது தொடர்பான இந்த வாக்கெடுப்பில் இலங்கை பலஸ்தீனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை கடந்த காலங்களில் பலஸ்தீனுக்கு ஆதரவளித்ததைப் போன்று எதிர்காலத்திலும் தனது ஆதரவைத் தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli