காத்தான்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்!

0 327
  • ஆசி­ரி­யரை கடத்தி கப்பம் கோரிய ஒருவர் கைது
  • மற்­றொ­ருவர் டுபாய்க்கு தப்­பி­யோட்டம்

எம்.எஸ்.எம். நூர்தீன்

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஏ.சி.அஜ்வத் ஆசி­ரியர் காணாமல் போன செய்தி பிர­தே­சத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யிருந்­த­து.
51 வய­தான காத்­தான்­கு­டியைச் சேர்ந்த ஏ.சி.அஜ்வத் ஆசி­ரி­யரை செவ்­வாய்க்­கி­ழமை மாலை­யி­லி­ருந்து காண­வில்லை என காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தில் அவ­ரது உற­வினர் ஒருவர் செவ்­வாய்க்­கி­ழமை இரவு முறைப்­பாடு ஒன்றை பதிவு செய்­தி­ருந்தார்.
இவர் ஒல்­லிக்­குளம் அல்­ஹம்றா வித்­தி­யா­ல­யத்தில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றி வரு­கின்றார்.

செவ்­வாய்க்­கி­ழமை மாலை அவ­ரது பால­மு­னையில் உள்ள காணிக்குச் சென்று வரு­வ­தாகக் கூறி ரி.வி.எஸ். மோட்டார் சைக்­கிளில் வீட்டை விட்டுச் சென்­றவர் அன்­றி­ரவு வரை வீடு திரும்­ப­வில்லை எனவும் அம் முறைப்­பாட்டில் உற­வினர் தெரி­வித்­தி­ருந்தார்.
இதை­ய­டுத்து புதன்­கி­ழ­மை­யன்று காத்­தான்­குடி பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி துமிந்த நய­ன­சி­றியின் ஆலோ­ச­னையின் பேரில் காத்­தான்­குடி குற்­றத்­த­டுப்பு பிரிவு பொறுப்­ப­தி­காரி ஏ.எஸ்.எம்.ரஹீம் விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­தினார்.

காணாமல் போன அஜ்வத் ஆசி­ரியர் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்­றி­ரவு சுமார் 7.30 மணி­ய­ளவில் காத்­தன்­குடி மெத்தைப் பள்ளி வீதியில் வெள்ளை வேன் ஒன்றில் வந்­த­வர்­க­ளுடன் வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­ததை தான் கண்ணால் கண்­ட­தாக அப்­ப­கு­தியைச் சேர்ந்த ஒருவர் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து பொலி­சாரின் விசா­ரணை மேலும் துரி­தா­மா­கி­யது.

இதே நேரம் புதன்­கி­ழ­மை­யன்று காலை கறுத்த மேலங்கி முகக்­க­வசம், சாரன் அணிந்த ஒருவர் ஒரு மோட்டார் சைக்­கிளில் அஜ்வத் ஆசி­ரியர் காணாமல் போன­தாக தெரி­விக்­கப்­பட்ட மெத்­தைப்­பள்­ளி­வாயல் வீதி­யி­லுள்ள சி.சி.ரி.வி.கமரா பொருத்­தப்­பட்­டி­ருந்த ஓரிரு வீடு­க­ளுக்கு வந்து வீட்­டாரை அச்­சு­றுத்­து­வது போன்று நடந்து கொண்ட சம்­ப­வமும் பொலி­சாரின் விசா­ர­ணையின் போது துரும்­பாக கிடைத்­தது.

இவை­களை மையப்­ப­டுத்தி காத்­தான்­குடி மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்­ளி­வாயல், காத்­தான்­குடி பள்­ளி­வா­யல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் உட்­பட அவ்­வீ­தியில் சி.சி.ரி.வி. கமரா பொருத்­தப்­பட்­டி­ருந்த வீடு­க­ளில கம­ராக்­களை பரி­சோ­தனை செய்யும் நட­வ­டிக்­கையில் புதன்­கி­ழமை அன்று மாலை தொடங்கி வியா­ழக்­கி­ழமை அதி­காலை வரை பொலிசார் ஈடு­பட்­டனர்.

இதன் போது குறித்த வேன், சந்­தே­கத்­துக்­கி­ட­மான மோட்டார் சைக்கிள் என்­ப­வற்றின் அடை­யா­ளங்­க­ளையும் சி.சி.ரி.வி.யிலி­ருந்து பொலிசார் எடுத்துக் கொண்­டனர்.
இந்த நிலையில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு காணாமல் போன அஜ்வத் ஆசி­ரியர் வியா­ழக்­கி­ழமை (08) காலை வீடு வந்து சேர்ந்தார்.

இதை­ய­டுத்து இவர் காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று தனக்கு நடந்த நிலை­மை­யினை வாக்­கு­மூ­ல­ம­ளித்தார்.

தன்னை வெள்ளை வேனில் வந்த சிலர் கடத்தி கப்பம் கோரி­ய­தா­கவும் தனது வாக்குமூலத்தில் தெரி­வித்­தி­ருந்தார். இதனை மையப்­ப­டுத்தி துரி­த­மாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி துமிந்த நய­ண­சி­றியின் ஆலோ­ச­னையில் காத்­தான்­குடி பொலிஸ் நிலைய குற்­றத்­த­டுப்பு பிரிவு பொறுப்­ப­தி­காரி ரஹீம் பிர­தான சந்­தேக நபரை தேடி அவரை சனிக்­கி­ழ­மை­யன்று கைது செய்தார். கைது செய்­யப்­பட்ட பிர­தான சந்­தேக நபர் காத்­தான்­கு­டியைச் சேர்ந்­த­வரும் காங்­கே­ய­னோ­டையை வசிப்­பி­ட­மா­கவும் கொண்­ட­வ­ரு­மாவார்.

இவ­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் கடத்­த­லுக்குப் பயன்­ப­டுத்­திய வெள்ளை வேன் மற்றும் உளவு பார்த்த மோட்டார் சைக்கிள், வங்­கியின் இரண்டு ஏ.ரி.எம்.கார்ட், மேலங்கி என்­ப­வற்­றையும் பொலிசார் கைப்­பற்­றினர்.

இந்த கடத்தல் சம்­பவம் காணிப்­ பி­ணக்கை மையப்­ப­டுத்­தி­யது எனவும் இதனை முன்­னெ­டுத்­த­வர்கள் கைது செய்­யப்­பட்ட நபரும் அவ­ரது சகோ­த­ர­ருமே என்­பதும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது. இவர்கள் இரு­வரும் குறித்த ஆசி­ரி­யரை கடத்தி கப்பம் கோரி­யுள்­ள­துடன் அவ­ரி­ட­மி­ருந்து எழு­தப்­பட்ட பேப்­பரில் முத்­தி­ரையில் கையொப்பம் பெற்­றுள்­ள­தா­கவும் அந்த ஆவ­ணங்­க­ளையும் மீட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிசார் தெரி­வித்­தனர்.

இக் கடத்­த­லுடன் சம்­பந்­தப்­பட்ட மேற்­படி பிர­தான சந்­தேக நபரின் சகோ­தரர் சம்­பவம் நடந்த அன்றே டுபாய் நாட்­டுக்கு தப்­பி­யோடி விட்­ட­தா­கவும் பொலிசார் தெரி­வித்­தனர்.
பிர­தான சந்­தேக நபரும் அவ­ரு­டைய சகோ­த­ரரும் சேர்ந்து நாளொன்­றுக்கு பத்­தா­யிரம் ரூபா வீதம் கூலிக்கு பெறப்­பட்ட வேனி­லேயே இக் கடத்­தலை மேற் கொண்­டுள்­ளனர்.
இவ்­விரு சந்­தேக நபர்­களும் சேர்ந்து இந்த வெள்ளை வேனில் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று இரவு காத்­தான்­குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்­ளி­வாசல் வீதியில் வைத்து அஜ்வத் ஆசி­ரியர் மோட்டார் சைக்­கிளில் செல்லும் போது அவரை வழி மறித்து கட்­டா­யப்­ப­டுத்தி வேனில் ஏற்றி கண்­களை கட்டி கடத்திச் சென்று சந்­தேக நபரின் காங்­கே­ய­னோடை ஈரான் சிற்றி நக­ரத்­தி­லுள்ள வீடொன்றில் வைத்து அச்­சு­றுத்­தி­யுள்­ள­துடன் அவ­ரிடம் கப்பம் கோரி­யுள்­ளனர். அத்­துடன் வெள்ளைப் பேப்­பரில் எழுதி முத்­தி­ரையில் அஜ்வத் ஆசி­ரி­யரின் கையொப்­பத்­தையும் பெற்­றுள்­ளனர்.

அஜ்வத் ஆசி­ரி­யரின் மோட்டார் சைக்­கிளை கடத்­திய இடத்தில் வைத்து விட்டுச் சென்று பின்னர் அங்கு வந்து தான் அதனைக் கொண்டு சென்­ற­தா­கவும் சந்­தேக நபர் தெரி­வித்­துள்ளார்.

அஜ்வத் ஆசி­ரி­ய­ருடன் பிர­தான சந்­தேக நபர் நடாத்­திய சம்­பா­ச­னை­யையும் சந்­தேக நபரின் கைய­டக்க தொலை­பே­சியில் ஒளிப்­ப­திவு செய்­துள்­ள­மையும் கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ள­துடன் சந்­தேக நபரின் கைய­டக்க தொலை­பே­சி­யையும் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கவும் காத்­தான்­குடி பொலிசார் தெரி­வித்­தனர்.

மேற்­படி அஜ்வத் ஆசி­ரி­யரின் கைய­டக்க தொலை­பே­சியை மண்­முனை வாவிக்குள் வீசி­ய­தா­கவும் விசா­ர­ணை­களில் இருந்து தெரிய வரு­வ­தாக பொலிசார் மேலும் தெரி­வித்­தனர்.

இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருவதுடன் பிரதான சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது 15 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன் டுபாய் நாட்டுக்கு தப்பியோடியுள்ள சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளையும் துரிதமாக பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.