பள்ளியில் பாரம்பரிய மத அனுஷ்டானங்களுக்கு பள்ளி நிர்வாக சபை தடை விதிக்க முடியாது

மு.ச.ப. திணைக்களம் அறிவிப்பு

0 345

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அநு­ரா­த­புரம் – நேகம முஹி­யதீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் பாரம்­ப­ரிய மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு தடை­வி­திக்­கவோ கட்­டுப்­பாடு விதிக்­கவோ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு அதி­கா­ர­மில்லை. பிர­தே­சத்தின் சமா­தானம் மற்றும் சக­வாழ்­வுக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். அத்­தோடு வக்­பு­ச­பையின் முன்­னி­லையில் இரு தரப்பும் செய்து கொண்ட உடன்­ப­டிக்கை மீறப்­ப­டக்­கூ­டாது. மீறினால் கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் நேகம பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.

குறிப்­பிட்ட பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்குள் நில­விய கொள்கை முரண்­பா­டு­க­ளை­ய­டுத்து வக்பு சபைக்கு ஒரு தரப்­பி­னரால் முறை­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. முறைப்­பாட்­டினை விசா­ரித்த வக்பு சபை பள்­ளி­வா­ச­லுக்குப் பொறுப்­பாக இருப்­பவர் முறைப்­பாட்­டா­ளர்­களின் சமய அனுஷ்­டா­னங்கள் மற்றும் பாரம்­ப­ரிய மத நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­த­மு­டி­யாது. இரு­த­ரப்­பி­னரும் சமா­தா­னத்­துடன் சக­வாழ்­வினை கடைப்­பி­டிக்­க­வேண்டும். முரண்­பட்­டுக்­கொள்­ளக்­கூ­டாது என தீர்ப்பு வழங்­கி­யி­ருந்­தது. கடந்த மார்ச் மாதம் இத்­தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் வக்­பு­ச­பையின் இந்த உத்­த­ரவு அமுல் நடத்­தப்­ப­டாமை கார­ண­மா­கவே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் குறிப்­பிட்ட எச்­ச­ரிக்கை கடி­தத்தை அனுப்பி வைத்­துள்ளார்.நிர்­வாக சபையைச் சேர்ந்த ஒருவர் பள்­ளி­வா­ச­லுக்குள் தப்லீக் ஜமாஅத் வரக்­கூ­டாது. கந்­தூரி நடத்த முடி­யாது போன்ற கட்­டுப்­பா­டு­களை முன்­வைத்­த­தை­ய­டுத்தே முரண்­பா­டுகள் ஏற்­பட்­ட­தெ­னவும், இத­னை­ய­டுத்தே வக்பு சபைக்கு முறைப்­பாடு செய்­த­தா­கவும் பள்­ளி­வா­சலின் முன்னாள் நிர்­வாக சபை உறுப்­பினர் ஒருவர் ‘விடி­வெள்ளி’க்குத் தெரி­வித்தார்.

மேலும் கொள்கை முரண்­பாடு கார­ண­மாக ஊரில் பிரிவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அதனால் பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை தற்­போது பதவி வில­கி­யுள்­ள­தா­கவும் இறு­தி­யாக பத­வி­யி­லி­ருந்த நிர்­வாக சபையின் தலைவர் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

வக்பு சபையின் பிர­தி­நி­திகள் பள்­ளி­வா­ச­லுக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு புதிய நிர்­வாக சபை­யொன்­றினை நிய­மிக்­க­வுள்­ள­தாக அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.