ஹஜ், உம்­ராவுக்கு சவூதி செல்­வோ­ருக்கு மஹ்­ர­மான துணை அவ­சி­ய­மில்லை

சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்சர் தெளபீக் அல் ராபியா

0 343

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதிக்கு ஹஜ் மற்றும் உம்ரா யாத்­திரை மேற்­கொள்ளும் பெண்கள் மஹ்ரம் (இரத்த உறவு) துணை­யு­டனே பய­ணிக்க வேண்டும் என இது­வரை காலம் சவூதி அரே­பியா விதித்­தி­ருந்த நிபந்­தனை தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

உலகின் எந்தப் பகு­தி­யி­லி­ருந்தும் சவூதி அரே­பி­யா­வுக்கு ஹஜ், உம்ரா யாத்­திரை மேற்­கொள்ளும் பெண்­க­ளுக்கு மஹ்ரம் துணை அவ­சி­ய­மில்லை என சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்சர் கலா­நிதி தெளபீக் அல் ராபியா தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் பெண் யாத்­தி­ரி­கர்கள் மஹ்ரம் துணை­யுடன் தான் பய­ணிக்க வேண்­டுமா? இல்­லையா? எனும் சர்ச்­சைக்கு ஹஜ், உம்ரா அமைச்சர் தீர்வு வழங்­கி­யுள்ளார்.
கெய்­ரோவிலுள்ள சவூதி தூத­ர­கத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை ஊட­க­ மா­நா­டொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இந்தத் தீர்­மா­னத்தை அறி­வித்தார். அமைச்சர் தெளபீக் அல் ராபியா தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், உல­க­ளா­விய ரீதியில் உள்ள முஸ்­லிம்கள் உம்ரா யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்கு சவூதி அர­சினால் விசா வழங்­கு­வது தொடர்பில் கோட்டா முறை அமுல்­ப­டுத்­தப்­படமாட்­டாது. அதி­க­பட்ச எண்­ணிக்­கையும் நிர்­ணயம் செய்­யப்­படமாட்­டாது. சவூதி அரே­பி­யா­வுக்கு வருகை தரும் எந்த நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் என்­றாலும் எந்த வகை விசாவின் கீழ் வருகை தந்­தவர் என்­றாலும் உம்ரா யாத்­திரை மேற்­கொள்ள முடியும்.

சவூதி அரே­பியா ஹஜ் மற்றும் உம்ரா யாத்­தி­ரைக்­கான செல­வு­களைக் குறைப்­பதில் அதிக கவனம் செலுத்தி வரு­கி­றது. இவ்­வா­றான செல­வு­களைக் குறைப்­பது பல விட­யங்­களில் தங்­கி­யுள்­ளது.

சவூதி அரே­பியா அண்­மையில் மக்கா மற்றும் மதீ­னா­வி­லுள்ள புனித பள்­ளி­வா­சல்களுக்கு விஜயம் செய்­ப­வர்­களின் நலன் கருதி பல்­வேறு புதிய நடை­மு­றை­களை அமுல்­ப­டுத்­தி­யுள்­ளது. தற்­போது நவீன தொழில்­நுட்ப மற்றும் டிஜிட்டல் மயப்­ப­டுத்­தலின் கீழ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சேவைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

நவீன தொழில்­நுட்­பத்தின் கீழ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கும், பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு வருகை தரு­ப­வர்­க­ளுக்கும் விரை­வான சேவைகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. 24 மணி­நே­ரத்­துக்குள் விசா பெற்­றுக்­கொள்ளும் வகையில் உம்ரா அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­ப­டு­கி­றது என்றார்.

மேலும் மக்கா புனித ஹரம் பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்­காக 200 பில்­லி­ய­னுக்கும் அதி­க­மான சவூதி ரியால்கள் செல­வா­கி­யுள்­ளது. புனித பள்­ளி­வா­சலின் வர­லாற்றில் இது எப்­போ­து­மில்­லாத பாரிய விஸ்­த­ரிப்பு பணி­யாகும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.