ஐந்து தௌஹீத் அமைப்புகளின் தடையை நீக்குவது குறித்து பேச்சு

0 427

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து அர­சாங்­கத்­தினால் தடை செய்­யப்­பட்ட இஸ்­லா­மிய அமைப்­பு­களில் சில­வற்றின் தடை­களை நீக்­கு­வ­து குறித்து அரசு ஆராய்ந்து வரு­கி­றது.

இத­ன­டிப்­ப­டையில் தடை­செய்­யப்­பட்­டுள்ள சிலோன் தெளஹீத் ஜமாஅத் (CTJ) மற்றும் ஐக்­கிய தெளஹீத் ஜமா அத் (UTJ) ஆகிய இயக்­கங்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் பாது­காப்பு அமைச்சின் உய­ர­தி­கா­ரிகள் நேற்று முன்­தினம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார்கள். இப்­பேச்­சு­வார்த்தை பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம் பெற்­றது.
இரு இயக்­கங்­களும் தனித்­த­னி­யாக அழைக்­கப்­பட்டு சுமார் தலா இரண்­டரை மணித்­தி­யா­லங்கள் பேச்சு வார்த்தை நடத்­தப்­பட்­டது. குறிப்­பாக இரு இயக்­கங்­க­ளி­னதும் தடையை ஏன் நீக்­க­வேண்­டு­மென்ற அறிக்­கை­யொன்று அமைப்­பு­க­ளிடம் பாது­காப்பு அமைச்சின் அதி­கா­ரி­களால் கோரப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு பாதுகாப்பு கார­ணங்­களை முன்­வைத்து 11 இஸ்­லா­மிய அமைப்புகள் அர­சாங்­கத்­தினால் தடை செய்­யப்­பட்­டன. இந்த 11 அமைப்­பு­களில் 5 அமைப்­பு­களின் தடைகள் விரைவில் நீக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் (SLTJ), அகில இலங்கை தெளஹீத் ஜமாஅத் (ACTJ), சிலோன் தெளஹீத் ஜமாஅத் (CTJ), ஐக்­கிய தெளஹீத் ஜமாஅத் (UTJ), ஜமா­அத்துல் அன்­ஸாரி சுன்­னத்துல் முஹம்­ம­தியா (JASM) ஆகிய 5 அமைப்­பு­களின் தடைகள் நீக்­கப்­ப­டு­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­களே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

நேற்­று­முன்­தினம் நடந்த பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொண்ட இரு அமைப்­பு­களைத் தவிர்ந்த ஏனைய மூன்று அமைப்­பு­க­ளான ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத், அகில இலங்கை தெளஹீத் ஜமாஅத் மற்றும் ஜமா அத்துல் அன்­ஸாரி சுன்­னத்துல் முஹம்­ம­தியா என்­ப­ன­வற்­று­ட­னான பேச்சுவார்த்­தை­களை பாது­காப்பு அமைச்சு கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்பு நடத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

11 இஸ்­லா­மிய அமைப்­பு­களில் 6 அமைப்­பு­களின் தடை நீக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. சர்­வ­தேச ரீதி­யிலும் இத்­தடை அமுலில் உள்­ளது. இது தொடர்­பாக வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

தாருல் அதர், தேசிய தெளஹீத் ஜமாஅத், ஜமா அத்தே இஸ்­லா­மி மாணவர் அமைப்பு , ஜமா அத்தே மில்­லத்தே இப்­றாஹிம், விலாயத் சைலானி, சேவ் த பேர்ள் ( Save the Pearl) ஆகிய அமைப்­பு­களே தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

இஸ்லாமிய அமைப்புகளின் தடையை நீக்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ் என்போர் அரசுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.