முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தின் கீழ் திருமண வயதெல்லையை 18 ஆக நிர்ணயிக்க அரசாங்கம் தீர்மானம்

0 325

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக,விவா­க­ரத்து சட்­டத்தின் கீழ் திரு­மண வய­தெல்லையை 18 ஆக நிர்­ண­யிக்­கப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. நீதி­ய­மைச்சு இதற்­கான அர­சாங்க வர்த்­த­மா­னியை வெளி­யி­ட­வுள்­ளது.

இதே­வேளை கண்­டிய விவாக,விவா­க­ரத்து சட்­டத்தின் கீழ் திரு­மண வய­தெல்­லையும் 18 ஆக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான அர­சாங்க வர்த்­த­மானி தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு 18 வய­துக்கு கீழா­ன­வர்கள் போலி உறு­தி­மொ­ழி­களை வழங்கி, அல்­லது போலி ஆவ­ணங்­களை வழங்கி திரு­மணம் செய்து கொண்டால் அவர்­களை தண்­டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.