உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது சரியா?

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் கேள்வி

0 488

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து விட்டு, இப்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சான்றுகளை சேகரிக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் எப்படி நிராகரிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள சூழலில், நாளுக்கு நாள் பொருட்களின் விலை மிக வேகமாக உயர்வடையும் நிலையில், நாடு வெளிநாட்டு உதவிகளிலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது. அவ்வாறான பின்னணியில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் மிக்க கரிசனையுடன் கவனம் செலுத்த வேண்டும்.

அசோசியேட்டட் பிரஸ் செய்திகளின் பிரகாரம், கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி “வெளிநாட்டு பொறிமுறை, வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை, நாட்டிற்கு வெளியே குடிமக்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தல், கலப்பு நீதிமன்ற முறைமை ஊடாக நீதிபதிகளை வரவழைத்து வழக்குகளை விசாரித்தல் போன்றவை அனைத்தும் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது. எனவே நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கைப் பிர­ஜைகள் மீது நாட்­டிற்கு வெளியே குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­வதை ஏற்க மாட்டோம்” மற்றும் ‘வெளி­நாட்டு நீதி­ப­திகள் இலங்­கையில் வழக்­கு­களை விசா­ரித்து தீர்ப்பு வழங்க அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்கள்” என்ற வெளி­வி­வ­கார அமைச்­சரின் கூற்றை நாம் வர­வேற்­கிறோம்.

எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில், உரிய நீதிவான் நீதி­மன்­றத்தின் அனு­ம­தி­யின்றி, வெளி­நாட்டு நிறு­வ­னங்­களை சுதந்­தி­ர­மாக விசா­ரணை செய்ய அனு­ம­தித்­துள்­ளனர். அவ்­வா­றான நிலையில், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் கலந்­து­கொள்­ள­வுள்ள இலங்கை அர­சாங்க தூதுக் குழு, இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்­பான ஆதா­ரங்­களை சேக­ரிக்கும் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் பொறி­மு­றையை இப்­போது எப்­படி மறுக்க முடியும்? இதுதான் தற்­போது எழுந்­துள்ள கேள்­வி­யாகும்.

எந்­த­வொரு வெளி­நாட்டு விசா­ர­ணை­யா­ள­ருக்கும், எந்­த­வொரு நீதி­வா­னாலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்­புகள் நடந்த இடங்­களை பார்வை இடவோ, இலங்கை விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்­களை வழங்­கவோ அல்­லது விசா­ரணை குழுவின் அங்­கத்­த­வர்­க­ளாக இருக்­கவோ அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை. இதனை ஒரு கௌரவ சட்­டத்­த­ர­ணி­யாக அலி சப்றி உறு­தி­யாக அறிந்­தி­ருப்பார்.

இதே நேரம் பொலிசார் அல்­லாத, நன்கு அறி­யப்­பட்ட உள்­ளு­ரர்­வா­சிகள் சிலரும் எந்த நீதி­மன்ற அனு­ம­தியும் இன்றி, குற்றம் நடந்த பாது­காக்­கப்­பட வேண்­டிய பகு­தி­க­ளுக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அத்­துடன் அவர்­க­ளுக்கு சாட்­சி­யா­ளர்­க­ளுடன் கதைக்­கவும் சந்­தர்ப்­ப­ம­ளிக்­கப்­பட்­டது. இதனால் அந்த விசா­ர­ணைகள் மாசு­பட்­டன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் ‘வெளி­நாட்டு விசா­ரணை பொறி­மு­றையை ‘நாட்­டுக்குள் அனு­ம­தித்­த­வர்கள், வெளி­நாட்டு நீதி­ப­திகள் இங்கு வழக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடியும் என பின்னர் வாதி­டு­வ­தற்கு தேவை­யான அடித்­த­ளத்தை இட்­டுள்­ள­தாக நான் அன்று ஊடக அறிக்கை ஊடாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தேன்.
பின்னர், கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது, பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் கடந்த 2021 மே 19 ஆம் திகதி, அமெ­ரிக்க பெடரல் பொலி­ஸாரும் (FBI) அவுஸ்­தி­ரே­லிய பெடரல் பொலி­ஸாரும் (AFP) உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்து சி.ஐ.டி.யின­ருடன் இணைந்து விசா­ர­ணை­களை நடத்தி வரு­வ­தாக பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

இவையும், இவற்றை ஒத்த ஏனைய நிறு­வங்­களும், மனித உரிமை மீறல்கள் குறித்து சான்­று­களை சேக­ரிக்கும் ஐ.நா. மனித உரிமை பேர­வைக்கு சம­மன்று.
கடந்த 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், அத்­தாக்­கு­தலை ஊக்­கு­வித்த கார­ணி­களில் ஒன்­றாக மூன்றாம் உலக நாடு­களின் மீதான அந்­நிய படை­யெ­டுப்பை தற்­கொலை குண்­டு­தாரி ஒருவர் குறிப்­பிட்­டுள்ளார். பல்­வேறு கார­ணிகள், குறிப்­பாக போலி­யான விட­யங்­களை மையப்­ப­டுத்தி கடந்த 40 வரு­டங்­க­ளாக மத்­திய கிழக்கு மற்றும் பிராந்­திய நாடுகள் பல­வற்றை ஆக்­கி­ர­மித்த நட­வ­டிக்­கை­களில் அமெ­ரிக்க மத்­திய உள­வுத்­துறை மற்றும் பாது­காப்பு நிறு­வனம் (US Federal intelligence and security agency) தொடர்பு பட்­டது. அப்­ப­டி­யான ஒரு நிறு­வ­னத்­துக்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணையில் தலை­யீடு செய்ய இட­ம­ளித்­ததன் ஊடாக இலங்கை விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு, விசா­ர­ணை­களின் நம்­பகத் தன்மை மற்றும் பக்கச் சார்­பற்ற நிலைமை தொடர்பில் நீதி­மன்றில் உரிமை கோர முடி­யுமா?

கடந்த 2021 ஒக்­டோபர் மாதம், இங்­கி­லாந்தின் எசக்ஸ் பிராந்­தி­யத்தில் (Essex) வைத்து, பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சேர் டேவிட் அமேர்ஸ் (Sir David Amess)பல தட­வைகள் கத்­தியால் குத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்டார். குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கத்­தோ­லிக்க மத பற்­றாளர் என்ற ரீதியில், உட­ன­டி­யாக செய்ய வேண்­டிய சில எளி­மை­யான மத சடங்­கு­களை செய்ய அப்­போது அருட் தந்தை ஜெப்ரி வூல்னப் (Father Jeffrey Woolnough) முற்­பட்ட போதும் அதற்கு எசக்ஸ் பொலிஸார் அனு­ம­திக்­க­வில்லை. குற்றம் நடந்த இடத்தின் நிலையை மாறாது பாது­காப்­பது எந்­த­வொரு விசா­ர­ணை­யி­னதும் அடிப்­படை அம்சம் என கூறி எசக்ஸ் பொலிஸார் குறித்த அனு­ம­தியை வழங்க மறுத்­தி­ருந்­தனர்.

“உலகின் கொடூ­ர­மான பயங்­க­ர­வாத குண்டுத் தாக்­கு­த­லாக கரு­தப்­ப­டும் Pan Am 103 சம்­ப­வத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களின் உண்­மை­யான அடை­யா­ளங்­களை மறைக்க அமெ­ரிக்கா, பெரிய பிரித்­தா­னியா மற்றும் ஸ்கொட்­லாந்து ஆகி­யன இணைந்து சதி செய்­தன” என அமெ­ரிக்க எழுத்­தாளர் வில்­லியம் சி சேசி (William C Chasey)1995 ஆம் ஆண்டு தான் எழு­திய புத்­த­க­மான ‘Pan Am 103-The Lockerbie Cover Up’ 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி, நடு வானில் விமா­னத்தில் நடந்த வெடிப்பு அது. ஸ்கொட்­லாந்தின் – லொக்­கர்­பியில் 31 ஆயிரம் அடி உய­ரத்தில் அந்த விமானம் வெடித்து சித­றி­யதில் 271 பேர் கொல்­லப்­பட்­டனர்.

யார் அதனை செய்­தார்கள் என்ற உண்மை கதையை மாற்ற எப்.பி.ஐ. யும் சி.ஐ.ஏ.யும் எப்­படி செயற்­பட்­டனர் என்­பதை சேசி தனது நூலில் குறிப்­பி­டு­கின்றார். உண்­மை­யான சுத்­தி­ர­தா­ரிகள் இருக்க, லிபி­யாவின் முஅம்மர் கடா­பியை சிக்கவைப்பதற்காக குற்றம் நடந்த இடம் எப்படி மாசுபடுத்தப்பட்டது என்பதை சேசி தனது நூலில் விளக்குகின்றார்.
தற்போதைய நாட்டின் நிலைமையின் அடிப்படையில், நாட்டின் 22 மில்லியன் மக்களும் சர்வதேச நாணய நிதியத்தின் கசப்பான நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அமைச்சர் அலி சப்ரியும் இணை பிரதிநிதியான நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு முகம் கொடுக்க ஒத்துழைப்புடன் செயற்படக் கூடிய அதனை ஒத்த முறைமை ஒன்றினையா கண்டுபிடிப்பார்கள்?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.