சிரியாவின் கிழக்குப் பிராந்தியத்தின் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இடம் ஒன்றில், நூற்றுக்கணக்கானோரின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, மனித உடல்கள் புதைக்கப்பட்ட ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அரசாங்க செய்தி முகவரகமான சனா தெரிவித்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட உடல்களில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டமைக்கான அறிகுறிகள் தென்படுவதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு உயிரிழந்தவர்களில் சிலரது கண்களும் கைகளும் கட்டப்பட்டிருந்தமைக்கான சான்றுகள் உள்ளன.கண்டெடுக்கப்பட்ட சடலங்களை ஆராய்ந்தபோது, கொல்லப்பட்டவர்களில் பெண்களும்அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.