அடுத்த வருடம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளில் 3000 பேர் தங்களது பயணத்தை உறுதி செய்யுமாறு கோரப்படவுள்ளனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்த வரிசைக் கிரமப்படி 3000 பேருக்கு அவர்களது கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கு இன்று இந்த தகவலை அனுப்பி வைக்கவுள்ளது.
மீளளிக்கப்படக்கூடிய பதிவுக்கட்டணமாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்களது பயணத்தை உறுதி செய்யுமாறு அவர்கள் கோரப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சுமார் 8000 பேர் விண்ணப்பித்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஏற்கனவே 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி ஹஜ் கடமையைத் தவறவிட்ட விண்ணப்பதாரிகள் 700 பேர் ஹஜ் கடமைக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் ஹஜ் கோட்டாவை இலங்கைக்கு அதிகரித்து வழங்குமாறு ஏற்கனவே சவூதி ஹஜ் அமைச்சிடம கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களது பயணத்தை உறுதி செய்யும் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் மாத்திரமே கவனத்திற் கொள்ளப்படும் எனவும் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்த வரிசைக் கிரமப்படி 3000 பேருக்கு அவர்களது கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கு இன்று இந்த தகவலை அனுப்பி வைக்கவுள்ளது.
மீளளிக்கப்படக்கூடிய பதிவுக்கட்டணமாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்களது பயணத்தை உறுதி செய்யுமாறு அவர்கள் கோரப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சுமார் 8000 பேர் விண்ணப்பித்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஏற்கனவே 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி ஹஜ் கடமையைத் தவறவிட்ட விண்ணப்பதாரிகள் 700 பேர் ஹஜ் கடமைக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் ஹஜ் கோட்டாவை இலங்கைக்கு அதிகரித்து வழங்குமாறு ஏற்கனவே சவூதி ஹஜ் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களது பயணத்தை உறுதி செய்யும் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் மாத்திரமே கவனத்திற் கொள்ளப்படும் எனவும் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.