குறிஞ்சாங்கேணி பாலத்தின் நிர்மாண பணிகள் இடைநிறுத்தம்

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சு நடத்தி மீள ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

0 308

(றிப்தி அலி)
எட்டு உயிர்­களை பலி­யெ­டுத்த கிண்­ணியா, குறிஞ்­சாங்­கேணி பாலத்தின் நிர்­மாணம் உட்­பட நாட்டில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வந்த அனைத்து பாலங்­க­ளி­னதும் நிர்­மாணப் பணிகள் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன என நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் பந்­துல குண­வர்த்­தன தெரி­வித்தார்.

நாட்டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக வெளி­நா­டு­க­ளிடம் கடன் பெறு­வது நிறுத்­தப்­பட்­ட­மை­யி­னா­லேயே பால நிர்­மாணப் பணி­களை முன்­கொண்டு செல்ல முடி­யா­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

குறிஞ்­சாங்­கேணி பால நிர்­மாணப் பணிகள் கைவி­டப்­பட்­டுள்­ளமை தொடர்பில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (09) நடை­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ள­ரொ­ருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் பந்­துல குண­வர்த்­தன மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
“பால நிர்­மா­ணங்­களை மேற்­கொண்ட ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளுக்கு சுமார் 100 பில்­லியன் ரூபா­விற்கு மேல் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இந்த பணத்­தினை எவ்­வாறு திருப்பிச் செலுத்­து­வது தொடர்பில் அர­சாங்கம் இது­வரை எந்தத் தீர்­மானம் மேற்­கொள்­ள­வில்லை. இது­வொரு பாரிய பிரச்­சி­னை­யாகும்.

இதனால் பாலம் மற்றும் வீதி நிர்­மா­ணங்கள் இடை­ந­டுவில் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த விடயம் தொடர்பில் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யுடன் பேச்சு நடத்தி கடன் பெற்று நிறை­வு­செய்­யப்­ப­டா­துள்ள பாலம், வீதி­களை நிர்­மா­ணிக்க அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது என அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை, அண்­மையில் ஏற்­பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் கார­ண­மாக நாவ­லப்­பட்டி மற்றும் யட்­டி­யாந்­தோட்டை உள்­ளிட்ட நான்கு பிர­தே­சங்­களில் பாலங்கள் உடைந்­துள்­ளன. இதனால், கிரா­மங்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்பு முற்­றிலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

அது மாத்­தி­ர­மல்­லாமல், மாண­வர்கள் பாட­சா­லைக்கு செல்ல முடி­யா­துள்­ள­துடன், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான உண­வு­களைக் கூட கொண்டு செல்ல முடி­யா­துள்­ளது.

இந்த பாலங்­களை உட­ன­டி­யாக நிர்மாணிக்க 1.2 பில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. எனினும், குறித்த நிதி தற்போது அரசாங்கத்திடமில்லை. இதனால் தற்காலிக பாலம் அமைப்பதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது” என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.