உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் : வழக்குகளிலிருந்து ரணில் விடுவிக்கப்படுவாரா?

சட்டத்தரணிகள் சங்கம், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளும் ரணிலை நீக்க எதிர்ப்பு

0 273

(எம்.எப்.எம்.பஸீர்)
போது­மான உளவுத் தக­வல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை தடுக்க தவ­றி­யதன் ஊடாக, தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக கூறி தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள 12 அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களில், பிர­தி­வா­திகள் பட்­டி­யலில் இருந்து தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­கு­வதா இல்­லையா என்­பது தொடர்பில் உயர் நீதி­மன்றம் தனது தீர்­மா­னத்தை அறி­விப்­பதை ஒத்தி வைத்­துள்­ளது. திகதி அறி­விப்­புக்கள் எதுவும் இன்றி உயர் நீதி­மன்றம் இதனை ஒத்தி வைத்­துள்­ளது.

குறித்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய, நீதி­ய­ர­சர்­க­ளான புவ­னேக அலு­வி­ஹார, எல்.டி.பி.தெஹி­தெ­னிய, முர்து பெர்­ணான்டோ, எஸ். துரை­ராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய ஏழுபேர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழாம் முன் நேற்று முன்­தினம் ( 02) விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன. இதன்­போதே அனைத்து தரப்­பி­னரும் முன் வைத்த வாதங்­களை செவி­ம­டுத்த உயர் நீதி­மன்றம் இவ்­வாறு தனது தீர்­மா­னத்தை ஒத்தி வைத்­தது.

கடந்த ஜூலை 26 ஆம் திகதி இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, பிர­தி­வா­தி­களில் ஒரு­வ­ரான முன்னாள் பிர­த­மரும் இந் நாள் ஜனா­தி­ப­தி­யு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்­டோ­வினால் அடிப்­படை ஆட்­சே­பனை ஒன்று முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. தனது சேவை பெறுநர் தற்­போது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ள நிலையில், அர­சி­ய­ல­மைப்பின் 35 ஆவது உறுப்­புரை பிர­காரம் அவ­ருக்கு எதி­ராக எந்த வழக்­கி­னையும் முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது எனவும் , அது அவ­ருக்கு அர­சி­ய­ல­மைப்­பூ­டாக வழங்­கப்­பட்­டுள்ள விடு­பாட்­டு­ரிமை எனவும் சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்­டோ­வினால் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

குறித்த அடிப்­படை ஆட்­சே­ப­னைக்கு மற்­றொரு பிர­தி­வா­தி­யான முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சட்­டத்­த­ரணி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைசர் முஸ்­தபா கடும் எதிர்ப்பு வெளி­யிட்டு கடந்த ஜூலை27 ஆம் திகதி வாதங்­களை முன் வைத்தார்.
தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு எதி­ராக இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது என அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் முன் வைத்­துள்ள வாதம் அடிப்­ப­டை­யற்­றது என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைசர் முஸ்­தபா குறிப்­பிட்டார்.

‘ஜனா­தி­ப­திக்­கு­ரிய விடு­பாட்­டு­ரிமை இந்த வழக்கை பொருத்­த­வரை பொருத்­த­மற்­றது. தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக இவ்­வ­ழக்கை முன்­னெ­டுத்து செல்ல எந்த தடையும் இல்லை.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பிர­த­ம­ராக பதவி வகித்­த­போது முன்­னெ­டுத்த உத்­தி­யோ­க­பூர்வ நட­வ­டிக்­கைகள் தொடர்பில், அவர் ஜனா­தி­ப­தி­யா­னதால் கிடைக்கும் விடு­பாட்­டு­ரிமை ஊடாக எந்த பாது­காப்பும் கிடைக்­காது. அதனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக வழக்கு விசா­ர­ணையை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­லலாம் என உத்­த­ர­வினை பிறப்­பிக்க வேண்டும்.’ என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைசர் முஸ்­தபா கோரினார்.
இந் நிலையில் நேற்று முன்­தினம் ( 02) இம்­ம­னுக்கள் விசா­ர­ணைக்கு வந்த போது, ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்டோ, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சார்­பி­லான வாதங்­க­ளுக்கு பதில் வாதங்­களை முன் வைத்தார்.

‘ஜனா­தி­ப­திக்கு எதி­ராக அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்­றினை தாக்கல் செய்­வ­தானால், பிர­தி­வா­தி­யாக சட்ட மா அதி­பரை பெய­ரிட்டு அதனை முன்­னெ­டுக்­கலாம். எனினும் இந்த மனுக்­களில் பிர­தி­வா­தி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெய­ரி­டப்­பட்­டுள்­ளதால், அர­சி­ய­ல­மைப்பின் 35 (1) ஆம் உறுப்­பு­ரைக்கு அமைய அவ­ருக்கு எதி­ராக இவ்­வ­ழக்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது . எனது சேவை பெறு­நரை வழக்­கி­லி­ருந்து விடு­விப்­பதால் இந்த வழக்கு விசா­ர­ணைகள் எந்த வகை­யிலும் பாதிக்­கப்­ப­டாது.’ என சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்டோ குறிப்­பிட்டார்.

இதன்­போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜ­ரான மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பிரி­யந்த நாவான மன்றில் வாதங்­களை முன் வைத்தார்.

‘ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த எந்­த­வொரு நபரும் செய்த அல்­லது செய்­யாமல் தவிர்ந்த எந்­த­வொரு நட­வ­டிக்கை தொடர்­பிலும் எந்­த­வொரு நீதி­மன்­றிலும் வழக்குத் தொடுப்­பதோ அல்­லது வழக்­கொன்­றினை முன்­னெ­டுத்து செல்­வதோ கூடாது என அர­சி­ய­ல­மைப்பின் 35 ( 1) ஆம் உறுப்­புரை கூறு­கி­றது. ‘ என தெரி­வித்தார்.

இதன்­போது பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய முன் வைத்த கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளித்த மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் பிரி­யந்த நாவான, ஜனா­தி­ப­திக்கு எதி­ராக எந்­த­வொரு நீதி­மன்­றிலும் வழக்­கொன்­றினை தாக்கல் செய்து முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது என குறிப்­பிட்டார்.

அதனால் இந்த மனுக்­களில் இருந்து ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை விடு­விக்க வேண்டும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

எனினும் மனு­தாரர் தரப்­பினர், பிர­தி­வாதி ஜனா­தி­பதி ரணில்­விக்­கி­ர­ம­சிங்க மற்றும் சட்ட மா அதிபர் சார்­பி­லான வாதங்­க­ளுக்கு கடும் ஆட்­சே­பனை வெளி­யிட்­டனர்.
இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுக்­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ரான அச்­சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமைய ஜனா­தி­ப­திக்கு விடு­பாட்­டு­ரிமை என்­பது சிவில் மற்றும் குற்­ற­வியல் வழக்­குகள் தொடர்பில் மட்­டுமே உள்­ள­தா­கவும் இந்த வழக்கு அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் என்­பதால் இதனை முன்­னெ­டுத்து செல்­லலாம் என வாதிட்டார்.

கொழும்பு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை சார்பில் மன்றில் அஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஷமீல் பெரே­ராவும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸின் வாதங்­க­ளுடன் ஒத்துப் போவ­தா­கவும், அதனால் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­தி­வா­தி­யாக தொடர்ந்து கருதி வழக்கு விசா­ரணை செய்­யப்­படல் வேண்டும் எனவும் கோரினார்.
இந் நிலையில் அனைத்து தரப்­பி­ன­ரதும் வாதங்­களை செவி­ம­டுத்த நீதி­ய­ர­சர்கள் குழாம், இவ்­வி­டயம் தொடர்­பி­லான எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­களை ஆகஸ்ட் 03 இல் மன்றில் சமர்ப்­பிக்­கு­மாறு அனைத்து தரப்­பி­ன­ருக்கும் உத்­த­ர­விட்­டது. அதன் பின்னர் உயர் நீதி­மன்றின் தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தாக குறிப்­பிட்ட நீதி­ய­ர­சர்கள் குழாம், திகதி அறி­விப்­பின்றி தீர்­மா­னத்தை ஒத்தி வைத்­தது.

21/4 தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலில் தனது இரு பிள்­ளை­களை இழந்த தந்­தை­யான நந்­தன சிறி­மான்ன, சுற்­றுலா துறை வர்த்­தகர் ஜனக விதா­னகே, இரு கத்­தோ­லிக்க மத­கு­ருமார், ஷெங்­ரில்லா ஹோட்­டலில் குண்டுத் தாக்குதலிலொ சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, பொலிஸ் மா அதிபர் பூஜித், தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ், மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.