கல்வியைக் கைவிடும் மாணவர் சமுதாயம்

0 802

நாட்­டி­லுள்ள பாட­சா­லை­களில் கல்வி பயிலும் மாண­வர்கள் தமது கல்­வியை இடை­ந­டுவில் கைவிட்டு, தொழில்­து­றை­களை நாடிச் செல்லும் நிலை­மைகள் அதி­ரி­கத்து வரு­வ­தாக கல்­வித்­துறை சார்ந்­த­வர்கள் கவ­லை­களை வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ளனர்.

கொவிட் முடக்கம், ஆசி­ரியர் போராட்­டங்கள் மற்றும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் ஏற்­பட்ட எரி­பொருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக நீண்ட கால­மாக பாட­சா­லைகள் முறை­யாக இயங்­க­வில்லை. கொவிட் முடக்க காலத்தில் இணைய வழி­யாக வகுப்­புகள் நடை­பெற்ற போதிலும் அவை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. இது ஒரு தோல்­வி­ய­டைந்த முறை என்­பதை கல்­வி­ய­மைச்சே ஏற்றுக் கொண்­டி­ருந்­தது. அதனைத் தொடர்ந்து இந்த வருட ஆரம்பம் முதலே எரி­பொருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக போக்­கு­வ­ரத்­துகள் பாதிக்­கப்­பட்­ட­மையால் மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் பாட­சா­லை­க­ளுக்குச் செல்­வதில் பாரிய சிர­மங்­களை எதிர்­நோக்­கினர். குறிப்­பாக எரி­பொருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக கடந்த மாதம் முழு­வதும் பாட­சா­லைகள் நடை­பெ­ற­வில்லை. ஓரிரு நாட்கள் நடை­பெற்ற போதிலும் மாண­வர்­களும் ஆசி­ரி­யர்­களும் குறிப்­பி­டத்­தக்­க­ளவு சமு­க­ம­ளிக்­க­வில்லை.

நிலைமை இவ்­வா­றி­ருக்க, தொடர்ச்­சி­யாக பாட­சா­லைகள் இடம்­பெ­றாத கார­ணத்­தி­னாலும் கற்றல், கற்­பித்தல் செயற்­பா­டுகள் பாதிக்­கப்­பட்­ட­த­னாலும் மாண­வர்கள் கல்­வி­யின்பால் கொண்­டி­ருந்த ஆர்­வத்தை வெகு­வாக இழந்­துள்­ளனர். இதன் கார­ண­மாக பாட­சா­லை­களை விட்டு விலகி, சிறு தொகை­யேனும் வரு­மானம் தரக் கூடிய தொழில்­வாய்ப்­பு­களை நோக்கி தமது கவ­னத்தை திருப்­பி­யுள்­ளனர். நாட்டில் நிலவும் பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக இன்று பலரும் தொழில்­வாய்ப்­பு­களை இழந்து வரு­மா­ன­மின்றித் தவிக்­கின்­றனர். இதன் கார­ண­மாக இவ்­வாறு வரு­மா­ன­மி­ழந்­துள்ள பெற்றோர் தமது பிள்­ளை­களை பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பு­வதை விடுத்து, அன்­றாட கூலித் தொழில்­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்ற சம்­ப­வங்கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

குறிப்­பாக உயர்­த­ரத்தில் கல்வி பயிலும் மாண­வர்­களே இவ்­வாறு தமது பாட­சாலைக் கல்­வியை கைவிட ஆரம்­பித்­துள்­ள­தாக இலங்கை ஆசி­ரியர் தொழிற்­சங்­கத்தின் தலைவர் பிரி­யந்த பெர்­ணான்டோ சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். சாதா­ரண தரத்தில் நல்ல பெறு­பேறைப் பெற்று, உயர்­தரம் கற்க வந்த மாண­வர்கள் பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக இவ்­வாறு இடை­வி­லகிச் செல்­வது அவர்­க­ளதும் நாட்­டி­னதும் எதிர்­கா­லத்தை வெகு­வாகப் பாதிக்கும் என்றும் அவர் கவலை வெளி­யிட்­டுள்ளார்.

முஸ்லிம் பிர­தே­சங்­களில் கூட இதே நிலை­மையை எம்மால் அவ­தா­னிக்க முடி­கி­றது. கல்­வியில் நம்­பிக்­கை­யி­ழந்த ஓர் இளம் சமு­தாயம் நம்­மத்­தியில் உரு­வாகி வரு­கி­றது. குறுக்கு வழியில் பணம் சம்­பா­தித்து, ஆடம்­ப­ர­மாக வாழ்­வது எப்­படி என இந்த இளம் சந்­த­தி­யினர் சிந்­திக்கத் தலைப்­பட்­டுள்­ளனர். பலர் போதைக்கு அடி­மை­யா­கி­யுள்­ள­துடன் போதைப் பொருள் வியா­பா­ரத்­திலும் ஈடு­பட ஆரம்­பித்­துள்­ளனர்.

என­வேதான் இந்த சந்­தர்ப்­பத்தில் சகல தரப்­பி­னரும் இணைந்து மாண­வர்கள் தமது கல்வி வாழ்க்­கையை உரிய முறையில் பூர்த்தி செய்­வ­தற்குத் தேவை­யான உதவி ஒத்­தா­சை­களை வழங்க முன்­வர வேண்டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

கல்­வி­ய­மைச்சு இந்த அபா­ய­மான நிலைமை தொடர்பில் எந்­த­வித ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. கல்­வி­ய­மைச்சு இதற்குத் தீர்வு தரும் என நம்­பு­வதை விடுத்து, பாட­சா­லைகள் ரீதி­யாக இவ்­வாறு இடை­வி­லகும் மாண­வர்­களைக் கண்­ட­றிந்து மீண்டும் அவர்கள் கல்­வியைத் தொடர்­வ­தற்குத் தேவை­யான உத­வி­களை வழங்­கு­வ­தற்­கான திட்­டங்­களை வகுக்க வேண்­டி­யதே அவ­சி­ய­மா­னதும் அவ­ச­ர­மா­ன­து­மான பணி­யாகும்.

அதே­போன்று முஸ்லிம் பிர­தே­சங்­களில் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பொது நிறு­வ­னங்­க­ளுக்கும் இதில் முக்­கிய பங்­கி­ருக்­கி­றது. மஹல்லா ரீதி­யாக இவ்­வா­றான கல்­வியைக் கைவிட்ட மாண­வர்­களை இனங்­கண்டு மீண்டும் அவர்­களை பாட­சா­லை­க­ளுடன் இணைப்­ப­தற்கும் அவர்­க­ளுக்குத் தேவை­யான பொரு­ளா­தார உத­வி­களை வழங்­கு­வ­தற்­கு­மான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. மேலும் பிர­தே­ச­வா­ரி­யான புல­மைப்­ப­ரிசில் திட்­டங்­க­ளையும் இதற்­காக அங்­கு­ரார்ப்­பணம் செய்து முன்­னெ­டுக்­கலாம். பிர­தேச ரீதி­யாக ஆய்­வு­களை முன்­னெ­டுத்து தேவை­களை இனங்­காண முடியும். அவற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு திட்­டங்­களை வகுத்து செயற்­பட முடியும்.

உண்மையில் இது மிகவும் கவனத்தை வேண்டி நிற்கின்ற விடயமாகும். குறிப்பாக வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கங்களிலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கல்விக்காக உதவி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் உலமாக்கள் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரையும் கூடுதல் கவனம் செலுத்துமாறும் கல்வியைக் கைவிட்டு, தவறான பாதையில் பயணிக்கின்ற ஒரு சமுதாயம் உருவாவதைத் தடுக்க கைகோர்க்குமாறும் வேண்டுகோள்விடுக்க விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.