இஸ்ரேலிய எல்லை வேலிக்கு அருகில் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கையின் போது இஸ்ரேலிய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அஹ்மெட் அபூ அபெட் என்ற சிறுவனே கடந்த செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல்கித்ரா தெரிவித்தார்.
கான் யூனிசின் கிழக்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காயத்திற்குள்ளான நான்கு வயதும் எட்டு மாதங்களும் உடைய அஹ்மெட் அபூ அபெட் உயிரிழந்ததாக தனது அறிக்கையில் அல்கித்ரா தெரிவித்திருந்தார்.
வைத்தியசாலையில் சிறுவன் உயிரிழந்ததாக குழந்தையின் 90 வயதான மாமா பாஸ்ஸெம் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் 30 ஆந் திகதி தொடக்கம் நடத்தப்பட்டுவரும் மீளத் திரும்புவதற்கான மாபெரும் பேரணியின் கடந்த வெள்ளிக்கிழமைப் போராட்டத்தில் தனது தந்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தபோது வெடிபொருட் சிதறலினால் அஹ்மெட் அபூ அபெட்டும் காயமடைந்தான்.
சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மீளாய்வு செய்து வருவதாக புதன்கிழமையன்று தெரிவித்த இஸ்ரேல், தாக்குதல்களுக்கு பொதுமக்களை காஸா பள்ளத்தாக்கினை நிருவகித்து வருகின்ற ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.