வணாத்தவில்லு வெடிபொருட்கள் களஞ்சிய விவகாரம்: நௌபர் மௌலவி உட்பட நால்வருக்கு பிணை

0 484

எம்.எப்.எம்.பஸீர்

புத்­தளம் – வணாத்­த­வில்லு, லக்டோஸ் தோட்­டத்தில், வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­றமை தொடர்பில் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ள­வர்­களில் தேசிய தௌஹீத் ஜமாஅத் எனும் தடை செய்­யப்­பட்ட அமைப்பின் முக்­கி­யஸ்­த­ரான நௌபர் மௌலவி உள்­ளிட்ட 4 பிர­தி­வா­தி­க­ளுக்கு கடந்த திங்­கட்­கி­ழமை (27) பிணை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அபூ தஹ்தா எனும் அபூ ஹனீபா மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீர் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், அபூ செய்த் எனும் நௌபர் மௌலவி அல்­லது மொஹம்மட் இப்­ராஹீம் நௌபர், அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மௌலவி ஆகிய முறையே 1,2,5,6 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்கே சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் இவ்­வாறு பிணை­ய­ளித்து உத்­த­ர­விட்­டது.

தலா ஒன்­றரை இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும், 2 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் செல்ல இவர்­களை அனு­ம­தித்த நீதி­ப­திகள், பிர­தி­வா­தி­களின் வெளி­நாட்டு பய­ணங்­களை தடைச் செய்து கடவுச் சீட்­டுக்­களை மன்றில் ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்­டனர். அத்­துடன் ஒவ்­வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழ­மை­களில் முற்­பகல் 9.00 மணிக்கும் நண்­பகல் 12.00 மணிக்கும் இடையில் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் புத்­தளம் பிராந்­திய அலு­வ­ல­கத்தில் கையெ­ழுத்­திட வேண்டும் எனவும் மற்­றொரு பிணை நிபந்­தனை விதிக்­கப்­பட்­டது.

இந்த விவ­கார வழக்கு விசா­ர­ணைகள், இவ்­வ­ழக்­கினை விசா­ரணை செய்­ய­வென புத்­தளம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூவர் கொண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில், விசா­ர­ணைக்கு வந்­தது. ஏற்­க­னவே, குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள 6 பிர­தி­வா­தி­களில் ஐவர் சார்பில் முன் வைக்­கப்­பட்ட பிணைக் கோரிக்­கை­களை ஆராய்ந்து, ட்ரயல் அட்பார் நீதி­மன்ற நீதி­ப­திகள் பிணை குறித்த உத்­த­ரவை அறி­வித்தே, பிர­தி­வா­தி­களில் நால்­வ­ருக்கு பிணை­ய­ளிப்­ப­தாக அறி­வித்­தனர்.

பிணை­ய­ளிக்­கப்­பட்ட குற்றப் பத்­தி­ரி­கையின் முதல் இரு பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள, அபூ தஹ்தா எனும் அபூ ஹனீபா மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீர் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ் ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான வஸீமுல் அக்ரம், நதீஹா அப்பாஸ், மொஹம்மட் சஜாத் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ராகி வாதங்­களை முன் வைத்­தி­ருந்­தனர்.
5 ஆம் பிர­தி­வா­தி­யான அபூ செய்த் எனும் நௌபர் மௌலவி அல்­லது மொஹம்மட் இப்­ராஹீம் நௌபர் சார்பில் அர­சினால் அவ­ருக்கு வழங்­கப்­பட்ட சட்­டத்­த­ர­ணியும், அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மௌலவி சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கஸ்­ஸாலி ஹுசைன் உள்­ளிட்ட குழு­வி­னரும் மன்றில் ஆஜ­ராகி வாதங்­களை முன் வைத்­தனர்.

மூன்றாம் பிர­தி­வாதி கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை சார்பில் பிணைக் கோரிக்கை முன் வைக்­கப்­பட்­டி­ருந்த போதும் அது நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

4 ஆம் பிர­தி­வாதி, அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ் சார்­பிலும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மை­யி­லான சட்­டத்­த­ர­ணி­க­ளான வஸீமுல் அக்ரம், நதீஹா அப்பாஸ் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ராகும் நிலையில், அவர் சார்பில் பிணைக் கோரிக்கை முன் வைக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வ­ழக்கில், தற்­போதும் மர­ண­ம­டைந்­துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்­மது அஹ­மது ஹஸ்தூன் ஆகி­யோ­ருடன் இணைந்து, வணாத்­த­வில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரிக்கும் மற்றும் தயா­ரிக்கும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்துச் சென்­ற­தாக பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் பிர­தி­வா­திகள் 6 பேருக்கும் எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

நாச­கார அல்­லது பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் எண்­ணத்­துடன் வணாத்­த­வில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரிக்க சதி செய்­தமை, யூரியா நைற்றேட், நைற்றிக் அசிட், தோட்­டாக்கள் உள்­ளிட்ட வெடி­பொ­ருட்­களை சேக­ரித்­தமை, வெடி­பொ­ருட்­களை உற்­பத்தி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2 (1) உ பிரிவின் கீழும், 3 (2) ஆம் பிரிவின் கீழும் பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக விஷேட குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் வெடி­பொருள் சேக­ரிப்பு, தயா­ரிப்பு, ஆயுத பயிற்சி உள்­ளிட்­ட­வற்­றுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் அனைத்து பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ராக குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, முதல் பிர­தி­வா­தி­யான அபூ தஹ்தா எனப்­படும் மொஹம்மட் முபீஸ் மீது, பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி­ய­ளித்­தலை தடுக்கும் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 ஆம் உறுப்­பு­ரையின் கீழ் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. ஆயுத களஞ்­சி­யத்­துடன் கூடிய வணாத்­த­வில்லு லக்டோ தோட்­டத்தின் ஒரு பகு­தியை ஆயுத பயிற்­சி­களை முன்­னெ­டுக்க அபூ உமர் எனும் சாதிக் அப்­துல்­லாஹ்­வுக்கு வழங்­கி­யமை தொடர்பில் அந்த குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் இவ்­வ­ழக்கின் சாட்சி விசா­ர­ணைகள் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

எவ்­வா­றா­யினும் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் பிணை­ய­ளித்த போதும், முதல் இரு பிர­தி­வா­தி­களைத் தவிர ஏனை­யோ­ருக்கு மேலும் சில வழக்­குகள் இருப்­பதால், அவர்கள் விளக்­க­ம­றி­ய­லி­லேயே தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

வணாத்­த­வில்லு விவ­கா­ரத்தின் பின்­னணி:
கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்­பெற்ற மாவ­னல்லை சிலை உடைப்பு சம்­ப­வங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களின் போதே வணாத்­த­வில்­லுவில் வெடி பொருட்கள் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இடம் விசா­ர­ணை­யா­ளர்­களால் கண்­ட­றி­யப்­பட்­டது.

சிலை உடைப்பு தொடர்பில் மாவ­னெல்லை பொலி­ஸாரும் கேகாலை மாவட்ட தீர்க்­கப்­ப­டாத குற்­றங்­களை விசா­ரிக்கும் பிரிவும் பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில், சிலை­யொன்றை உடைக்­கும்­போது பொது­மக்­க­ளிடம் பிடி­பட்­ட­வ­ருடன் வந்த மற்­றைய நபர் இச்­சம்­ப­வங்­களின் பிர­தானி என்­பது கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அவ­ரது சகோ­த­ரரும் இந்த விட­யங்­க­ளுடன் தொடர்­பு­பட்­டுள்­ள­மையும், சகோ­த­ரர்கள் இரு­வ­ருமே இந்த விஷ­மத்­த­ன­மான செயற்­பா­டு­க­ளுக்கு தலைமை வகித்­துள்­ள­மையும் கண்­ட­றி­யப்­பட்­டது.

மொஹம்மட் இப்­ராஹிம் சாதிக் அப்­துல்லா, மொஹம்மட் இப்­ராஹிம் சாஹித் அப்­துல்லா என்ற இந்த சகோ­த­ரர்­களை கண்­டு­பி­டிக்க கேகாலை சிறப்பு பொலிஸ் பிரி­வி­ன­ருக்கு மேல­தி­க­மாக சி.ஐ.டி.யும் களத்தில் குதித்­தது.

இந் நிலையில் தேடப்­படும் சாதிக் அப்­துல்­லாவும், சாஹித் அப்­துல்­லாவும் புத்­தளம், வணாத்­த­வில்லு பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட புபு­து­கம – லெக்டோ ஹவுஸ், இலக்கம் 637/3 எனும் இடத்தில் அமைந்­துள்ள தென்னந் தோப்பில் மறைந்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு ஒரு தகவல் கிடைத்­தி­ருந்­தது. அந்த தகவல் கிடைத்­தி­ருந்­தது. அதிலும் பாலாவி, புத்­தளம் – மன்னார் வீதியின் இரண்டாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த மொஹம்மட் முபீஸ் என்­ப­வ­ருடன் அவர்கள் இருப்­ப­தாக இதன்­போது தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதன்­ப­டியே சி.ஐ.டி. குழு­வினர் அங்கு செல்ல நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தனர். புத்­தளம் – மன்னார் வீதி­யூ­டாக சென்ற சி.ஐ.டி. குழு­வினர் அங்கு சென். செபஸ்­டியன் கிறிஸ்­தவ ஆலயம் அமைந்­துள்ள இடத்­தி­லி­ருந்து இடது பக்­க­மாக உள்ள வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்­றர்கள் வரை செல்ல வேண்­டி­யேற்­பட்­டது. அப்­போதே அங்கு அந்த 80 ஏக்கர் வரை விஸ்­தீ­ரணம் கொண்ட தென்­னத்­தோப்பை சி.ஐ.டி.யினரால் அடைய முடி­யு­மாக இருந்­துள்­ளது. ஆள் நட­மாட்­ட­மில்­லாத ஒதுக்­குப்­பு­ற­மான அந்த தோட்­டத்தில் காடுகள் அடர்ந்­தி­ருந்­தன. போவ­தற்கு வழி மட்டும் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அங்கு சி.ஐ.டி.யினர் செல்­லும்­போது மாலை நேர­மாக இருந்­தது.

அந்த தோட்­டத்தில் ஒரு சிறு கட்­டிடம் இருந்த நிலையில் அக்­கட்­டி­டத்­துக்கு சூரி­ய­ஒளி ஊடாக மின்­சா­ரமும் பெறப்­பட்­டி­ருந்­தது. சாதிக் அப்­துல்லா, சாஹித் அப்­துல்­லாவை தேடி சி.ஐ.டி. சென்­ற­போதும் அவர்கள் அங்கு இருக்­க­வில்லை. எனினும், வேறு இளை­ஞர்கள் நால்வர் அங்கு இருந்­தனர். அவர்­களில் குறித்த தென்­னத்­தோப்பு உரி­மை­யா­ளரின் மக­னான மொஹம்மட் முபீஸும் ஒருவர். அந்த தென்­னத்­தோப்பு அபூ ஹனீபா என்­ப­வ­ருக்கு உரி­யது. அவர் மர­ணித்­தி­ருந்த நிலையில் அது அவ­ரது இரு மகள்மார் மற்றும் மகனால் பரா­ம­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மகள்மார் குறித்த காணி தொடர்பில் நேர­டி­யாக எத­னையும் முன்­னெ­டுக்­காத நிலையில் மக­னான மொஹம்மட் முபீஸே அக்­கா­ணியில் நடந்த நட­வ­டிக்­கை­களை கண்­கா­ணித்­துள்ளார்.

இந்­நி­லையில் சி.ஐ.டி. அங்கு சிலை உடைப்பு சந்­தேக நபர்­களைத் தேடி சென்­ற­போது, முபீஸும் அவ­ருடன் புத்­தளம் – மன்னார் வீதியைச் சேர்ந்த மொஹம்மட் பஸ்ரின், மொஹம்மட் பர்வீன் ஆகி­யோரும், புத்­தளம், வான் வீதியைச் சேர்ந்த மொஹம்மட் ஹமாசும் அத்­தோட்­டத்தின் சிறிய கட்­டிடப் பகு­தியில் இருந்­துள்­ளனர்.

இந்­நால்­வ­ரி­டமும் சி.ஐ.டி. விசா­ரித்­துக்­கொண்­டி­ருக்கும் போது, அங்­கி­ருந்த சி.ஐ.டி. அதி­காரி ஒரு­வரின் கண்ணில் சுமார் 20 மீற்றர் தூரத்தில் புதைத்து, அரை­வாசி நில­மட்­டத்­துக்கு மேல் தெரியும் பிளாஸ்ரிக் பீப்பாய் ஒன்று தென்­பட்­டுள்­ளது.

அப்­போது அந்த அதி­காரி யதார்த்­த­மாக அந்த பீப்பாய் வரை சென்று அதனை சோதித்­துள்ளார். இதன்­போதே அதில் சி-4 ரகத்தை ஒத்­த­தென சந்­தே­கிக்­கத்­தக்க வெடி­பொ­ருள்கள், மேலும் சில அமில வகைகள் மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­மையை அவர் அவ­தா­னித்­துள்ளார். இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக அந்த நால்­வ­ரையும் சி.ஐ.டி. தனது பொறுப்­பி­லெ­டுத்து அது­கு­றித்து விளக்கம் கோர ஆரம்­பித்­தது.

அப்­போது இருட்­டி­வி­டவே உட­ன­டி­யாக புத்­தளம் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் ஸ்தலத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­துடன், அந்த தோட்டம் அதி­ரடிப் படை பாது­காப்பின் கீழ் அடுத்த 24 மணி நேரத்­துக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இந்­நி­லையில் மறுநாள் சி.ஐ.டி.யினரால் விரி­வான சோத­னைகள் நடாத்­தப்­பட்­டன. இதன்­போது சி.ஐ.டி. உய­ர­தி­கா­ரிகள் ஸ்தலத்­துக்கு விரைந்­தனர். வெடி­பொ­ருட்கள் தொடர்பில் விசேட பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்ட மோப்­பநாய் ரினாவும், லெசியும் ஸ்தலத்­துக்கு அழைத்­து­வ­ரப்­பட்டு சோத­னை­யி­டப்­பட்­டது. அரச இர­சா­யனப் பகுப்­பாய்­வா­ளர்கள், வெடி­பொருள் நிபு­ணர்கள் எனப் பலரும் அப்­போது அங்கு கூடினர்.

இந்­நி­லை­யில்தான் நாள் முழு­வதும் நடாத்­தப்­பட்ட சிறப்புத் தேடு­தலில் அந்த தென்னத் தோப்­பி­லி­ருந்து பல உப­க­ர­ணங்கள் கைப்­பற்­றப்­பட்­டன. அதன்­படி அவை தொடர்பில் அங்­கி­ருந்த அந்த நான்கு பேரையும் சி.ஐ.டி. கைது செய்­தது.

சுமார் 90 கிலோ வெடி­பொ­ருட்­க­ளுக்கு மேல­தி­க­மாக 100 இந்­திய தயா­ரிப்பு டெட­னே­டர்கள், வயர் கோர்ட் தொகு­திகள், இலங்கைக்குள் தடை செய்யப்பட்டுள்ள  நைட்டிரேட் அமிலம் 20 லீட்டர் அடங்கிய 6 கேன்கள், மின் குமிழ்கள், அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களுக்குப் பயன்படுத்தும் சி 4 வெடி மருந்து 75 கிலோ, குழல் 12 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள், எயா ரைபிள் ரக துப்பாக்கி ஒன்று, பாதுகாப்பு கூடாரங்கள் இரண்டு, 20 நாட்கள் வரை பயன்படுத்த முடியுமான உலருணவுகள், கணினி ஒன்று, கமெராவொன்று, தமிழ், அரபு மொழிகளிலான சமயப் புத்தகங்கள், பெரும் தொகை பாய்கள் என பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையிலேயே அங்கு கைது செய்யப்பட்ட நால்வரையும் அந்தப் பொருட்களுடன் சி.ஐ.டி. தனது தலைமையகத்துக்கு அழைத்து வந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் அந்த நால்வரையும் பயங்கரவாத தடை சட்ட விதிகள் பிரகாரம் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்த சி.ஐ.டி. அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டது. இவர்களில் முபீஸ் மற்றும் ஹமாஸ் தவிர ஏனைய இருவரும் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டிருந்தனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.