பலதார மணத்துக்கு தடைவிதிக்க முஸ்லிம்களே கோரிக்கை விடுத்தனர்

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு

0 459

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்­லிம்­க­ளுக்கு பல­தார மணம் சட்­டத்தின் மூலம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­களே முறைப்­பா­டு­களைச் செய்­துள்­ளார்கள். சென்ற இடங்­க­ளி­லெல்லாம் திரு­மணம் செய்து கொள்­வ­தாக தெரி­வித்­துள்­ளார்கள். இத­னாலே பல­தார மணத்­துக்கு தடை­வி­திக்க வேண்­டு­மென கடந்த கால அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை கோரி­யி­ருந்­தது என நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­களைப் பரிந்­து­ரைப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆலோ­ச­னைக்­கு­ழு­விடம் தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட ஆலோ­சனைக் குழு­வுக்கும் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வுக்­கு­மி­டையில் கலந்­து­ரை­யா­ட­லொன்று அண்­மையில் நீதி­ய­மைச்சின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலின் போதே நீதி­ய­மைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
முஸ்­லிம்­களின் பல­தார மணம் தொடர்பில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களைப் பரிந்­து­ரைப்­ப­தற்­காக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆலோ­சனைக் குழு நீதி­ய­மைச்­ச­ரிடம் கருத்து தெரி­விக்­கையில் முஸ்­லிம்­களின் பல­தார மணம் தொடர்பில் குர் ஆனில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே இலங்­கையில் பல­தார மணம் சில நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­ப­டலாம். சிங்­கப்பூர், மலே­சியா போன்ற நாடு­களில் சில நிபந்­த­னை­க­ளுடன் பல­தார மணம் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­னைய மனை­வி­யர்கள் மற்றும் பிள்­ளை­க­ளுக்குப் பாதிப்­புகள் ஏற்­ப­டாத வகையில் தாப­ரிப்பு போன்ற விட­யங்­களில் சட்ட ஏற்­பா­டு­களைச் செய்து இலங்­கையில் பல­தார மணம் அ-னு­ம­திக்­கப்­படும் வகையில் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­யலாம் என குறிப்­பிட்ட குழு நீதி­ய­மைச்­ச­ரிடம் சுட்­டிக்­காட்­டி­யது.

இதற்குப் பதி­ல­ளித்த நீதி­ய­ம­மைச்சர் ‘உங்கள் மார்க்­கத்தில், குர்­ஆனில் பல­தார மணம் பற்றிக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்தால் நிபந்­த­னை­க­ளுடம் பல­தார மணத்தை அனு­ப­திப்­பது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் மேற்­கொள்­கிறேன் என்று உறு­தி­ய­ளித்தார்.

முஸ்லிம் விவாக,விவா­க­ரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்னாள் நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரியினால் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனின் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.