இலங்கையின் முதலாவது ஹஜ் குழுவுக்கு சவூதியில் வரவேற்பு

இறுதி யாத்திரிகர்கள் குழு ஞாயிறன்று பயணம்

0 345

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்­கை­யி­லி­ருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் 50 பேர் நேற்று முன்­தினம் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­விற்குப் பய­ண­மா­கினர்.

சவூதி அரே­பியா ஜெத்தா விமான நிலை­யத்தைச் சென்­ற­டைந்த முதற்­தொ­குதி ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை ஜெத்தா விமான நிலை­யத்தில் சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கை தூதுவர் பக்கீர் ஹம்சா மற்றும் கொன்­சீ­யூலர் நாயகம் பலாஹ் ­மெ­ள­லானா ஆகியோர் வர­வேற்­றனர்.

சவூதி அரே­பிய ஹஜ், உம்ரா அமைச்சு இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 1585 ஹஜ் கோட்டா வழங்­கி­ய­போதும் இலங்­கை­யி­லி­ருந்து இவ்­வ­ருடம் 960 யாத்­தி­ரி­கர்­களே தங்கள் பய­ணத்தை உறுதி செய்­தனர். ஹஜ் விமா­னங்கள் தொடர்ந்து ஜூலை 3 ஆம் திகதி வரை இலங்­கை­யி­லி­ருந்து புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளன.

இவ்­வ­ருட ஹஜ் கட்­டணம் 2019 ஆம் ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் 5 மடங்கு அதி­க­மாக இருக்­கின்­ற­மையே யாத்­தி­ரி­க­ர்களின் ஆர்வம் குறை­வ­டைந்­த­மைக்கு கார­ண­மாகும். இவ்­வ­ருட ஹஜ் கட்­டணம் 20 முதல் 25 இலட்சம் ரூபாய்­க­ளாகும்.

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­கான ஆகக்­கூ­டிய வய­தெல்லை 65 ஆகும். 65 வய­துக்­குட்­பட்­ட­வர்­களே ஹஜ் யாத்­தி­ரைக்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­ருட இலங்கை யாத்­தி­ரி­கர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யானோர் சிரேஷ்ட பிர­ஜைகள் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் தெரி­வித்தார்.

ஹஜ் யாத்­தி­ரைக்கு சவூதி அரே­பியா இவ்­வ­ருடம் உள்­நாட்டு, வெளி­நாட்டு யாத்­தி­ரி­கர்கள் மொத்தம் ஒரு மில்­லியன் பேருக்கே அனு­மதி வழங்­கி­யுள்­ளது.
இலங்கை யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு கட்டார் எயார், ஓமான் எயார், ஜெஸீரா மற்றும் எயார் அரேபியா ஆகியன விமான சேவைகளை வழங்கியுள்ளன.

இலங்கை யாத்திரிகர்கள் ஹஜ் கடமையை நிறைவு செய்து கொண்டு இம்மாத இறுதிப் பகுதியில் நாடு திரும்பவுள்ளனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.