எரிபொருள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பிரதமர் ரணில் வளைகுடா நாடுகளை இன்னும் நாடாமல் இருப்பது ஏன்?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். ஸுஹைர்

0 498

எரி­பொருள் மற்றும் எரி­வாயு தேவைக்­காக நாட­ளா­விய ரீதியில் மக்கள் பெரும் கஷ்டத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளனர். அதே­நேரம் இந்த எரி­பொருள் மற்றும் எரி­வாயு தட்­டுப்­பாடு கார­ண­மாக உணவு மற்றும் உணவுப் பொருட்­களை ஏற்றி இறக்­கு­வ­திலும் பய­ணிகள் சேவை­யிலும் போக்­கு­வ­ரத்துதுறை பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. இவ்­வா­றான மனி­தா­பி­மான நெருக்­க­டிக்கு நாடும் மக்­களும் முகம் கொடுத்­துள்ள சூழலில் எரி­பொருள் மற்றும் எரி­வா­யுவை அதி­க­ளவில் உற்­பத்தி செய்யும் சவூதி அரே­பியா உள்­ளிட்ட வளை­குடா நாடு­களின் தலை­வர்­க­ளுடன் இலங்கை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேர­டி­யாகத் தொடர்பு கொண்டு இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண முயற்சி செய்­யா­தி­ருப்­பதேன் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். ஸுஹைர் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இப்­ப­த­வியை ஏற்று தற்­போது ஒரு மாத காலம் கடந்­துள்ள போதிலும் கூட அவர் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு தேடும் நோக்கில் சவூதி அரே­பியா உள்­ளிட்ட வளை­குடா நாடு­க­ளுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்­த­தாகத் தெரி­ய­வில்லை. அதிலும் குறிப்­பாக நாட்­டுக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சிய எரி­பொ­ருளை மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யிலோ அல்­லது கடன் அடிப்­ப­டை­யிலோ பெற்­றுக்­கொள்­வ­தற்­கான உத­வி­க­ளைக்­கூட அவர் நாடா­துள்ளார்.

வெளி­நாட்டு முக­வர்­களை பணிக்­க­மர்த்­து­வ­தற்கு பதி­லாக, இந்­தியா தொடர்ச்­சி­யாக சரி­யான நேரத்தில் வழங்­கி­வரும் உத­வி­க­ளுக்கு மேல­தி­க­மாக மத்­திய கிழக்கில் உள்ள தனது சகாக்­க­ளு­டனும் பிர­தமர் பேசி இருக்க வேண்டும். அவர்­களே உலகில் தர­மான எரி­பொ­ருளை பாரிய அளவில் உற்­பத்தி செய்­ப­வர்­களும் ஏற்­று­மதி செய்­ப­வர்­க­ளு­மாவர். நிச்­ச­ய­மாக அவர்கள் நீண்­ட­கால கடன் அடிப்­ப­டையில் இலங்­கைக்கு உதவி செய்­வார்கள். அது­மட்­டு­மன்றி முறை­யாக இவ்­வி­ட­யத்தைக் கையாண்டால் இன்­றைய நிலையில் இலங்­கைக்கு மிகவும் அவ­சி­ய­மாகத் தேவைப்­படும் முத­லீட்டு திட்­டங்­க­ளுக்கும் அவர்கள் உத­வுவர்.

மிகுந்த அனு­ப­வ­முள்­ள­வ­ரான பிர­தமர் நாடு மிகவும் சிக்­க­லான சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள சூழ்­நி­லையில் மே மாதம் 13ஆம் திகதி ஆறா­வது தட­வை­யா­கவும் இப்­ப­த­வியை பொறுப்­பேற்­றுள்ளார். பொரு­ளா­தார நெருக்­க­டியின் விளை­வான கோபத்­தாலும் பசி­யாலும் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் கண்ணீர் அதி­க­ரித்து வரு­கின்ற போதிலும் அதனைத் தடுக்க மத்­திய கிழக்கு நாடு­களின் தலை­வர்­க­ளோடு பேசி உத­வி­களைப் பெற்­றுக்­கொள்ள 40 நாட்கள் அவ­ருக்கு தேவை இல்லை.

மக்­களின் கண்­ணோட்­டத்தில் நெருக்­க­டியின் அகோ­ரத்தைப் புரிந்து கொள்­ளவும், நாட்­டி­லுள்ள எல்லாக் குடும்­பங்­க­ளி­னதும் வாழ்­வியல் இருப்பு மற்றும் அதன் உட­னடி சரிவு என்­ப­ன­வற்றைப் புரிந்­து­கொள்­ளவும் பிர­தமர், இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களின் தின­சரி செய்­தித்­தொ­குப்­பு­களை, குறிப்­பாக சியத்த அதன் டெலி­வெக்­கிய நிகழ்ச்சி, சிரச மற்றும் அதன் தவஸ நிகழ்ச்சி மற்றும் நியூஸ்லைன் என்­ப­ன­வற்றைப் பார்­வை­யிட வேண்டும். இதனைச் சொல்­லித்தான் தெரிய வேண்டும் என்­ப­தில்லை.

எரி­பொருள் மற்றும் எரி­வாயு என்­ப­ன­வற்றை தங்­கு­த­டை­யின்றி விநி­யோகம் செய்ய அர­சாங்கம் தவ­றி­யதே அப்­பாவி குடும்­பங்கள் முகம் கொடுக்கும் வர­லாறு காணாத துன்­பங்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யான கார­ண­மாகும். இந்த எரி­பொருள் நெருக்­க­டி­யுடன் பின்­னிப்­பி­ணைந்­ததே மற்ற எல்லா பிரச்­சி­னை­க­ளு­மாகும். அர­சியல் சாசன மற்றும் அர­சியல் பிரச்­சி­னைகள் கூட அதை பின் தொடர்ந்தே வரு­கின்­றன. எரி­பொருள் பிரச்­சி­னையும் அதன் விளை­வாக ஏற்­படும் உணவுப் பிரச்­சி­னையும் திற­மை­யான முறையில் கையா­ளப்­ப­டா­விட்டால் இந்த அரசும் ஜனா­தி­ப­தியும் கூட நிலைத்­தி­ருக்க முடி­யாது.

இலங்­கைக்கு கிடைக்­கக்­கூ­டிய ஆகக்­கூ­டிய அந்­நியச் செலா­வணி வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மூலம் கிடைக்­கப்­பெ­று­கின்­றது. இது சரா­ச­ரி­யாக வரு­ட­மொன்­றுக்கு ஏழு பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாக உள்­ளது. அதில் 95 வீதம் மத்­திய கிழக்கில் பணி­யாற்றும் இலங்­கை­யர்­க­ளிடம் இருந்தே கிடைக்­கின்­றது. தர­மான எரி­பொ­ருளும் எரி­வா­யுவும் கூட மத்­திய கிழக்கில் இருந்தே பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. ஆனால் அடுத்­த­டுத்து பத­விக்கு வந்த அர­சுகள் இந்­நா­டு­க­ளுடன் நெருக்­க­மான நட்­பு­ற­வு­களைப் பேணத் தவ­றி­யமை மன்­னிக்க முடி­யா­த­வை­யாகும்.

தற்­போ­தைய அமைச்­ச­ர­வையில் இவ்­வி­டயம் தொடர்பில் அறி­வுள்ள ஒருவர் இருக்­கின்றார். சவூதி அரே­பி­யாவின் பெற்­றோ­லிய மற்றும் கனிய வள பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டம் பெற்­றவர். இப்­பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் மாண­வர்கள் பெரும்­பா­லான வளை­குடா நாடு­களில் பெற்­றோ­லிய மற்றும் கனிய வளத்­து­றை­யில் ­முக்­கிய உயர் பத­வி­களை வகிக்­கின்­றனர். இலங்கை அமைச்­ச­ர­வையில் உள்ள ஒரே­யொரு அரபு பேசத்­தெ­ரிந்த இவரை அவர் பத­வி­யேற்ற சில தினங்­களில் வளை­குடா நாடு­க­ளுக்கு அனுப்பி பேச்­சு­வார்த்­தை­களை நடாத்தி எரி­பொருள் மற்றும் எரி­வா­யுவைப் பெற்­றுக்­கொள்ள முயற்சி செய்­தி­ருக்­கலாம்.

இவ்வாறான ஒரு­வ­ருக்கு பெற்­றோ­லிய விநி­யோ­கத்­துறை அமைச்சை வழங்­கு­வ­தற்கு பதி­லாக சுற்­றாடல் துறை வழங்­கப்­பட்­டுள்­ளது. இதை­விட இன்னும் மோச­மான விடயம் என்­ன­வென்றால், வளை­கு­டாவில் இருந்து டொலர்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு பதி­லாக, முறை­யற்ற விதத்தில் ஒரு வெளி­நாட்­ட­வ­ரான மாலை­தீவின் அர­சி­யல்­வா­தியும் அந்­நாட்டின் சபா­நா­ய­க­ரு­மான நஷீட் அஹ­மட்டை அதற்­காக நாடி­ய­துதான். இலங்கை எரி­பொருள் உற்­பத்தி நாடு­க­ளுடன் நெருக்­க­மான மற்றும் நேர­டி­யான உற­வு­களை வளர்த்­துக்­கொள்ள வேண்­டிய தரு­ணத்தில் அந்­நா­டு­களை விட்டும் தூர விலகி நிற்­கின்­றது.

இலங்­கையில் பல நண்­பர்­களைக் கொண்­டுள்ள மாலை­தீவின் பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் நஷீட், 2012 இல் மாலை­தீவின் ஜனா­தி­பதி பத­வியில் இருந்து ராஜி­னாமா செய்­தவர். அந்­நாட்டின் குற்­ற­வியல் நீதி­மன்ற சிரேஷ்ட நீதி­பதி ஒரு­வரை கைது செய்­வதில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டு வலு­வ­டைந்­ததை அடுத்து ஏற்­பட்ட மக்கள் எதிர்ப்பின் கார­ண­மா­கவே அவர் இரா­ஜி­னாமா செய்­த­தாக அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் மாலை­தீவு பொலிஸார் மற்றும் இரா­ணு­வத்தின் பல­வந்தம் கார­ண­மா­கவே தான் பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நஷீட் பின்னர் அறி­வித்தார். இது­சம்­பந்­த­மாக பொது­ந­ல­வா­யத்தின் ஆத­ர­வு­ட­னான ஒரு குழு விசா­ர­ணை­களை நடத்­தி­யது. அவ்­வி­சா­ர­ணையின் முடிவில் நஷீட் நீதி­ப­தியின் கைது மற்றும் சிறை­வாசம் என்­ப­ன­வற்றை அடுத்து ஏற்­பட்ட மக்கள் கொந்­த­ளிப்பின் கார­ண­மாக தாமா­கவே பத­வியை இரா­ஜி­னாமா செய்தார் என்று உறுதி செய்­யப்­பட்­டது. தான் நிர்ப்பந்தம் காரணமாகத் துப்பாக்கி முனையில் இராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக நஷீட் கூறியதை இவ்விசாரணைக்குழு நிராகரித்திருந்தது.

இங்கே எழுகின்ற பிரதான கேள்வி மத்திய கிழக்கு செல்வாக்குள்ள இலங்கை அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு பதிலாக இலங்கையின் டொலர் பிரச்சினையைத் தணிக்க, தனது செயற்பாட்டு அறிக்கையை இன்னமும் பிரதமரிடம் கையளிக்காத நிலையில் முரண்பாடான கருத்தை இலங்கையின் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த மேலைத்தேச ஆதரவாளரான மாலைதீவு சபாநாயகர் நஷீட் அஹமட்டுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பதே. இவ்விடயம் பதில்களை விட கேள்விகளாலேயே நிரம்பி உள்ளது. ஒரு வேளை காலம் மட்டுமே இதற்கு பதில் அளிக்க முடியும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.