கிழக்கில் கால்பதிக்க முனையும் சீனா

0 347

றிப்தி அலி

இலங்­கைக்­கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங், கடந்த வாரம் கிழக்கு மாகா­ணத்­திற்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். இந்த விஜயம் இரா­ஜ­தந்­திர மட்­டத்தில் முக்­கிய பேசு­பொ­ரு­ளாகக் காணப்­பட்­டது.

வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகா­ணங்­களில் இந்­தி­யா­வினால் அதி­க­மான செயற்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த நிலையில் கடந்த 2020 மே மாதம் முதல் இலங்­கைக்­கான இந்­திய உயர் ஸ்தானி­க­ராக செயற்­பட்டு வரு­கின்ற கோபால் பாக்லே, இது­வரை கிழக்கு மாகா­ணத்­திற்­கான விஜ­யத்­தினை மேற்­கொள்­ள­வில்லை.
இவ்­வா­றான நிலையில் சீனத் தூதுவர் கிழக்கு மாகா­ணத்­திற்கு முக்­கி­யத்­துவம் செலுத்தி விஜ­யத்­தினை மேற்­கொண்­டுள்ளார். இத­னா­லேயே சீனத் தூது­வரின் குறித்த விஜயம் முக்­கிய பேசு­பொ­ரு­ளாக காணப்­பட்­டது.

திரு­கோ­ண­ம­லையில் இயற்கை துறை­மு­கத்­தினைக் கொண்ட கிழக்கு மாகா­ணத்­தினை தங்­க­ளது கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க இந்­தியா நீண்ட கால­மாக முயற்­சித்து வரு­கின்­றது. இத­னா­லேயே இந்­திய எண்ணெய் கம்­ப­னியின் எரி­பொருள் தாங்­கிகள் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தில் காணப்­ப­டு­கின்­றன. இதற்கு மேல­தி­க­மாக இலங்கை தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள மின்­சார நெருக்­க­டிக்கு உதவும் வகையில், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் சம்பூர் பிர­தே­சத்தில் சூரிய மின் உற்­பத்தி நிலை­ய­மொன்­றினை இந்­தியா விரைவில் நிர்­மா­ணிக்­க­வுள்­ளது.

இவ்­வாறு கிழக்கு மாகா­ணத்­துடன் இந்­தியா நெருங்கிச் செயற்­ப­டு­கின்ற நிலையில், அம்­மா­கா­ணத்தில் தங்­க­ளது செல்­வாக்­கையும் நிலை­நி­றுத்த சீனா முயற்­சிக்­கி­றதா என்ற கேள்­வியை சீனத்­தூ­து­வரின் கிழக்கு விஜயம் எழுப்­பு­கி­றது.
கடந்த மே 24ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­பித்த மூன்று நாட்­களைக் கொண்ட இந்த விஜ­யத்தின் போது மாகா­ணத்­தி­லுள்ள மூன்று மாவட்­டங்­களும் சீனத் தூதுவர் விஜயம் செய்தார்.

இலங்­கைக்­கான சீனத் தூது­வ­ராக குய் சென் ஹாங், கடந்த 2020ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்ட பின்னர் அவர் கிழக்கு மாகா­ணத்­திற்கு மேற்­கொண்ட முதல் விஜயம் இது­வாகும். அது போன்று சீனத் தூது­வ­ரொ­ருவர் கிழக்கு மாகா­ணத்தின் அனைத்து மாவட்­டங்­க­ளுக்கும் விஜயம் மேற்­கொண்­டமை இதுவே முதற் தடவை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனு­ராதா யஹம்­பத்தின் அழைப்­பினை ஏற்றே இந்த விஜயம் அமையப் பெற்­றது. இந்த விஜ­யத்தின் போது கிழக்கு மாகா­ணத்தில் வரு­மானம் குறைந்த 10,400 குடும்­பங்­க­ளுக்கு 5,200 ரூபா பெறு­ம­தி­யான உல­ரு­ணவுப் பொதிகள் வழங்­கப்­பட்­டன.

இதற்கு மேல­தி­க­மாக கல்­முனை பிர­தே­சத்தில் தெரி­வு­செய்­யப்­பட்ட சில விளை­யாட்டுக் கழ­கங்­க­ளுக்கு விளை­யாட்டு உப­க­ர­ணங்­களும் வழங்­கப்­பட்­டன. இந்த நிகழ்வு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸினால் ஒழுங்கு செய்­யப்­பட்­டது.
இதே­வேளை, வந்­தா­று­மூ­லை­யி­லுள்ள கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு விஜயம் செய்த தூதுவர், பல்­க­லைக்­க­ழ­கத்தின் சர்வதேச கற்­கைகள் நிலை­யத்­தி­னையும் திறந்­து­வைத்தார். அத்­துடன் மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லாளர் கே. கரு­ணா­க­ரனை சந்­தித்து மாவட்­டத்தின் அபி­வி­ருத்தி தொடர்பில் பேச்சு நடத்­தினார்.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள பௌத்த விகாரை, இந்து கோயில், பள்­ளி­வாசல் மற்றும் தேவா­லயம் ஆகி­ய­வற்­றுக்கு விஜயம் செய்து சமய வழி­பா­டு­க­ளிலும் சீனத் தூதுவர் ஈடு­பட்டார்.

அது­மாத்­தி­ர­மல்­லாமல், திரு­கோ­ண­மலைத் துறை­முகம் மற்றும் சீனங்­குடா போன்ற பிர­தே­சங்­க­ளுக்கும் தூதுவர் விஜயம் மேற்­கொண்டார். எதிர்­கா­லத்தில் கிழக்கு மாகா­ணத்தில் பல்­வேறு முத­லீ­டு­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக இந்த விஜ­யத்தின் போது தூதுவர் அறி­வித்­தி­ருந்தார்.

இந்­தி­யா­வினைப் போன்று சீனாவும் கிழக்கு மாகா­ணத்தில் முத­லீ­டு­களை மேற்­கொள்­ள­வுள்­ளது என்ற செய்தி தற்­போது இந்­தி­யா­விற்கு பாரிய தலை­யி­டி­யினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது போன்ற விஜ­ய­மொன்­றினை கடந்த வருட இறு­தியில் சீனத் தூதுவர் வட மாகா­ணத்­திற்கு மேற்­கொண்­டி­ருந்தார். அதன் பின்னர் பல செயற்­திட்­டங்­களை ஆரம்­பிக்க சீனா நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது.

எனினும், இந்­தி­யா­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட பாரிய எதிர்ப்­ப­லையின் கார­ண­மாக அனைத்து செயற்­திட்­டங்­க­ளையும் இலங்கை அர­சாங்கம் தற்­போது நிறுத்­தி­யுள்­ளது. இவ்­வா­றான நிலை­யி­லேயே, சீனாவின் பார்வை கிழக்கு மாகாணம் பக்கம் திரும்­பி­யுள்­ளது.

கிழக்கு மாகா­ணத்தில் சீனா­வினால் ஆரம்­பிக்­கப்­படும் செயற்­திட்­டங்­க­ளுக்கு இந்­தியா எதிர்ப்பு வெளி­யிடும் என்றே பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு எதிர்ப்பு தெரி­விக்­கப்­படும் பட்­சத்தில் இலங்கை விட­யத்தில் சீனா­விற்கும் இந்­தி­யா­விற்கும் இடை­யி­லான முறுகல் இன்னும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது.

இதே­வேளை, குறித்த விஜ­யத்தின் போது உள்ளூர் அர­சியல் பிர­முகர்கள் எவ­ரையும் சீனத் தூதுவர் பிரத்­தி­யே­க­மாக சந்­திக்­க­வில்லை. மாறாக கிழக்கு மாகாண ஆளு­நரின் நேரடிக் கண்­கா­ணிப்­பி­லேயே இந்த விஜயம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

சீனத் தூது­வரை கிழக்கு மாகாண ஆளுநர் பல தட­வைகள் கொழும்­பி­லுள்ள சீனத் தூது­வ­ரா­ல­யத்தில் சந்­தித்து மாகா­ணத்­திற்­கான விஜ­யத்­தினை மேற்­கொள்­ளு­மாறு அழைத்­தி­ருந்­த­மையும் முக்­கிய விட­ய­மாகும்.
பல மாகா­ணங்­களில் பல்­வேறு செயற் திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற சீனா இது­வரை கிழக்கு மாகா­ணத்தில் எந்­த­வொரு பாரிய நிகழ்ச்சித் திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

இவ்­வா­றான நிலையில் தற்­போது கிழக்கு மாகாணம் நோக்கி அவர்­க­ளது பார்வை சென்­றுள்­ளது. அது மாத்­தி­ர­மல்­லாமல் இம்­மா­காண மக்­க­ளுக்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் எதிர்­கா­லத்தில் வழங்­கு­வ­தாக தூதுவர் இந்த விஜ­யத்தின் போது உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

எது எப்படியிருந்தபோதிலும் கிழக்கு மாகா­ணத்தில் தடம் பதிக்க வேண்டும் என்ற சீனாவின் ஆசை இந்தளவு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியே.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.