சுஹைரியா அதிபர் ஷகீலுக்கு பிணை

0 451

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்ட புத்­தளம் அல் சுஹைரியா அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் முகம்மத் ஷகீல் நேற்­றைய தினம் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

புத்­தளம் மேல் நீதி­மன்­றத்தில் இவ்­வ­ழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே அவ­ருக்கு பிணை வழங்­கப்­பட்­டது.

சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லா­வுக்கு உதவி ஒத்­தா­சைகள் வழங்­கிய குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் 2021 பெப்­ர­வரி 18 ஆம் திகதி முகம்மத் ஷகீல் கைது செய்­யப்­பட்டு அன்று முதல் பிணை வழங்­கப்­படும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.