இலங்கை அரசியலில் ‘System Change’ சாத்தியமானதா?

0 461

எம்.எல்.எம்.மன்சூர்

என்­னதான் ‘நிர்­பா­க்ஷிக’ (கட்சி சாராத) என்று சொல்லிக் கொண்­டாலும், கோல்பேஸ் திடல் ‘அற­கல பூமியில்’ (குமார் குண­ரத்­னத்தின் முன்­னிலை சோச­லிசக் கட்­சியைச் சேர்ந்த) ‘பெரட்­டு­காமி’ இளை­ஞர்­களே முதன்­மை­யான ஒரு வகி­பா­கத்தை வகித்து வரு­கின்­றார்கள். அக்­கட்­சியின் கருத்­தி­யலை ஒட்­டிய விதத்­தி­லேயே அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­படும் பதாகை வாச­கங்­களும் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

‘225 பேரும் வேண்டாம்’ என்ற சுலோ­கத்தின் மூலம் ஒரு பெரும் கட்­ட­மைப்பு மாற்­றத்­தையே அவர்கள் குறிப்­பி­டு­கி­றார்கள். அதா­வது, இலங்கை ஒரு சோச­லிச அரசை நோக்கி அதன் பய­ணத்தை ஆரம்­பிக்க வேண்டும் என்­பதே அவர்­களின் எதிர்­பார்ப்பு.
ஆனால், அற­க­ல­ய­வுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் எந்த விளக்­கமும் இல்­லாமல் ஒரு மோஸ்­த­ராக ‘System Change’ என்ற வார்த்­தையை உச்­ச­ரித்து வரு­கி­றார்கள். பலர் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான தமது கடும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு வடி­கா­லா­கவே அதனைப் பார்க்­கி­றார்கள். சிறு­பான்மைச் சமூ­கங்­களைச் சேர்ந்த பலரும், அதே­போல சிறு­பான்மை சமூ­கங்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஒரு சில கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்­களும் ராஜ­பக்­ச­களைத் தொலைத்துக் கட்­டு­வதே ‘System Change’ என பிழை­யாக விளங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இங்­குள்ள சுவா­ர­சியம் இந்தக் கட்­ட­மைப்பு மாற்­றத்தை துளியும் விரும்­பாத, அதற்கு எதிர்த் திசையில் செயற்­பட்டு வரும் பலரும் அந்தக் கோஷத்தை சுவீ­க­ரித்துக் கொண்­டி­ருப்­பது தான். இந்த இளைஞர் எழுச்­சியை தமது இர­க­சிய அஜென்­டாக்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்குப் பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும் என்­பது அந்த ஆட்­களின் திட்டம்.

உதா­ர­ண­மாக, விமல் வீர­வன்ச, அத்­து­ர­லியே ரதன தேரர் போன்ற கோட்­டா­பய ராஜ­பக்­சவின் சிங்­கள பெருந்­தே­சி­ய­வாத செயல்­திட்­டத்தின் ஆத­ர­வா­ளர்கள், தமது அர­சியல் எதி­ரி­யான பெரட்­டு­காமி கட்­சி­யினர் இதன் பின்­ன­ணியில் இருந்து வரு­கி­றார்கள் என்­பதை தெரிந்து கொண்டே ‘அற­க­ல­யவை’ ஆத­ரிக்­கி­றார்கள். காரணம் பசில் மீதான தீராத வன்மம். பசில் ராஜ­பக்­சவை (பசில் ராஜ­பக்­சவை மட்டும்) நாட்­டி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்க வேண்­டு­மென்ற தமது நீண்ட நாள் கனவை கோல்பேஸ் இளை­ஞர்கள் நன­வாக்கிக் காட்­டு­வார்கள் என்­பது இவர்­க­ளு­டைய நப்­பாசை.

ஆனால், இந்த எழுச்சித் தருணம் (Momentum) பல வழி­களில் முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. இலங்­கையில் இது­வ­ரையில் சாத்­தி­யப்­ப­டா­தி­ருந்த – அப்­படி நிகழ்­வ­தற்கு அறவே வாய்ப்­பில்லை என பலர் நினைத்­தி­ருந்த – ஒரு சில முக்­கி­ய­மான கட்­ட­மைப்பு ரீதி­யான மாற்­றங்­களை எடுத்து வரு­வ­தற்கு உசி­த­மான ஒரு சூழ்­நிலை இப்­பொ­ழுது தோன்­றி­யி­ருக்­கி­றது.

அர­சியல், சட்டம் ஒழுங்கு, நீதித்­துறை, அரச நிர்­வாகம், கல்வி, சுகா­தாரம் போன்ற முக்­கிய துறை­களில் எமக்கு உட­னடி மாற்­றங்கள் தேவைப்­ப­டு­கின்­றன.
முதலில் மிக முக்­கி­ய­மான அர­சியல் துறையைப் பார்க்­கலாம்.

ஒரு ‘சிஸ்­டத்தை’ மாற்­று­வ­தற்கு முன்னர் அதன் தற்­போ­தைய நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். ஆராய்ச்­சி­யா­ளர்கள் அதனை ‘Baseline’ என அழைப்­பார்கள். அதா­வது நிலைமை இப்­பொ­ழுது எப்­படி இருக்­கி­றது என்­ப­தனை முதலில் தெரிந்து கொள்­வது அவ­சியம். அதன் பின்னர் இந்த நிலை­மையை எப்­படி மாற்­று­வது? அந்த மாற்­றத்­துக்கு உதவக் கூடி­ய­வர்கள் யார் போன்ற விட­யங்­களைக் கவ­னத்தில் எடுக்க வேண்டும்.
முத­லீடு எது­வு­மில்­லாமல் செய்யக் கூடிய ஒரு தொழி­லாக இப்­பொ­ழுது அர­சியல் மாறி­யி­ருக்­கி­றது. சரி­யாக காய்­களை நகர்த்­தினால் ஓர் இரவில் கூட கோடி கோடி­யாக சம்­பா­திக்­கலாம்.

1970 கள் மற்றும் 1980 கள் வரையில் இலங்­கையில் அர­சியல் பெரும் இலா­ப­மீட்டக் கூடிய ஒரு தொழி­லாக இருந்து வர­வில்லை. அர­சாங்க தொழில்­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு இலஞ்சம் வாங்கும் வழக்கம் மட்டும் ஒரு சில அர­சி­யல்­வா­தி­க­ளிடம் காணப்­பட்­டது. இதில் தர­கர்­க­ளாக செயற்­பட்ட அந்­தந்த அர­சி­யல்­வா­தி­களின் நெருங்­கிய ஆத­ர­வா­ளர்கள் அவ்­விதம் செலுத்­தப்­பட வேண்­டிய இலஞ்சத் தொகை­களை நிர்­ண­யித்­தி­ருந்­தார்கள் (உதா­ரணம்: அரச வங்­கி­களில் இலி­கிதர் வேலை ரூ. 200,000, C O எனப்­படும் வகா நில­தாரி ரூ. 100,000, ஆசி­ரிய நிய­மனம் ரூ. 100,000 என்ற விதத்தில்).
கிழக்கு மாகாண வட்­டார வழக்கில் அதை ‘பந்தம் வாங்­கு­வது’ என்று சொல்­வார்கள்.

ஆனால், கடந்த 30 வருட காலத்தில் இதில் ஒரு பெரு மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. தொழில் வாய்ப்­புக்­களை வழங்­கு­வ­தற்­காக அர­சி­யல்­வா­திகள் இலஞ்சம் வாங்­கு­வது இப்­பொ­ழுது குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு ஊழல் துறை­யாக இருந்து வர­வில்லை. அதற்குப் பதி­லாக, பல கோடி­களில் பணம் சம்­பா­திப்­ப­தற்­கென இப்­பொ­ழுது எண்­ணற்ற பல கத­வுகள் அவர்­க­ளுக்­கென திறந்து விடப்­பட்­டுள்­ளன.
அதற்­கேற்றாற் போல, அர­சி­யல்­வா­திகள் முறை­கே­டுகள் மூலம் பணம் சம்­பா­திப்­பதை குறிப்­ப­தற்­காக இப்­பொ­ழுது கிழக்கில் ‘உழைப்பு’ என்ற சொல்லைப் பயன்­ப­டுத்­து­கி­றார்கள்.

‘A’ என்ற கட்சி மக்­க­ளுக்குப் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்கி தேர்­தலில் வெற்­றி­யீட்டி, ஆட்­சிக்கு வரு­கின்­றது. ஆனால், அவர்­க­ளு­டைய ஆட்­சியில் எல்லாம் தலைகீழ். ஊழல்­களும், முறை­கே­டு­களும் எக்­கச்­சக்கம். அடுத்த தேர்­தலில் முக்­கிய எதிர்க்­கட்­சி­யான ‘B’ பல கோடி ரூபா செலவு செய்து (உபயம்: கட்சி ‘A’ க்கு நிதி­ய­ளிப்­புக்­களைச் செய்யும் அதே கம்­ப­னிகள், பெரு வணி­கர்கள் மற்றும் கருப்புப் பண முத­லைகள்) ‘A’ க்கு எதி­ரான ஒரு தீவிர பிர­சா­ரத்தை முன்­னெ­டுக்­கி­றது.

தேர்­தலில் ‘B’ கட்சி வெற்­றி­யீட்­டு­கி­றது. பின்னர் ‘A’ விட்ட இடத்­தி­லி­ருந்து தனது கைவ­ரி­சையை ஆரம்­பிக்­கின்­றது. தலைகள் மட்டும் தான் வித்­தி­யாசம். சில சந்­தர்ப்­பங்­களில் ‘A’ கட்சி ஆட்­சியின் போது அமைச்­சர்­க­ளாக இருந்­த­வர்கள் ஏதேதோ சாக்­குப்­போக்­கு­களைச் சொல்லி கட்சி மாறி, ‘B’ அர­சாங்­கத்­திலும் அமைச்­சர்­க­ளாக இருக்­கி­றார்கள்.
‘A’ உம் ‘B’ உம் தேசியக் கட்­சிகள். ‘X’ ஒரு சிறிய பிராந்­தியக் கட்சி. முன்­னைய தேர்­தலில் ‘A’ உடன் கூட்­டணி சேர்ந்து அது தேர்­தலில் போட்­டி­யிட்­டது. தேர்தல் வெற்­றியை அடுத்து கட்சி ‘A’ ஆட்­சி­ய­மைத்த பொழுது, ‘X’ கட்சி ஒரு கெபினெட் அமைச்சர், இரண்டு ராஜாங்க அமைச்­சர்கள், கூட்­டுத்­தா­ப­னங்கள், சபைகள் என்­ப­வற்றில் தனது ஆட்­க­ளுக்கு (வாக­னங்கள் மற்றும் பிற வச­தி­க­ளுடன் கூடிய) ஒரு சில பத­விகள் மற்றும் இன்ன பிற சலு­கைகள் என்­ப­வற்றை பெற்றுக் கொண்­டது.

அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ‘X’ கட்சி, ‘A’ உடன் சேர்ந்து ‘B’ ஐ கடு­மை­யாக வசை­பாடி போட்­டி­யிட்­டது. மீண்டும் அக்­கட்­சிக்கு நான்கு ஆச­னங்கள் கிடைக்­கின்­றன. தனக்கு கிடைக்கும் தேசியப் பட்­டியல் ஆச­னங்­களில் ஒன்றை தரு­வ­தா­கவும் ‘A’ வாக்­க­ளித்­தி­ருந்­தது.

அந்தத் தேர்­தலில் கட்சி ‘B’ அதி­க­ள­வி­லான ஆச­னங்­களைப் பெற்றுக் கொள்­கி­றது. ஆனால், ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு இன்னும் மூன்று எம் பி களின் ஆத­ரவு தேவை. ‘X’ கட்­சியின் கிராக்கி திடீ­ரென அதி­க­ரிக்­கின்­றது. தொழில்­முறை தர­கர்கள் கள­மி­றங்கி, கொழும்பு ஹோட்­டல்­களில் இர­க­சிய பேரங்­களில் ஈடு­ப­டு­கி­றார்கள்.

பேரம் படி­கி­றது. ‘நாட்டின் அர­சியல் ஸ்திரத் தன்­மையைக் கருத்தில் கொண்டு ‘B’ கட்­சி­யுடன் கூட்­டணி சேர்ந்து ஆட்­சி­ய­மைக்கப் போவ­தாக’ ‘X’ கட்­சியின் தலைவர் திடீர் அறிக்கை விடு­கிறார். பணம் கோடிக் கணக்கில் கைமா­று­வது மட்­டு­மன்றி, முன்­னரைப் போலவே கெபினெட் அமைச்சு, ராஜாங்க அமைச்­சுக்கள், ஏனைய சலு­கைகள் என அனைத்தும் ‘X’ க்கு கிடைக்­கின்­றன.

யார் ஆட்­சிக்கு வந்­தாலும் சில விஷ­யங்கள் மாறு­வ­தே­யில்லை. மருந்துச் சாமான்­களை இறக்­கு­மதி செய்­வதில் ஏக­போக உரி­மையை அனு­ப­வித்து வரும் (மாபியா இயல்­பி­லான) ஒரு சில கம்­ப­னி­களின் நெருங்­கிய கூட்­டா­ளி­யாக மாறு­கிறார் சுகா­தார அமைச்சர். சீனி, கிழங்கு, பருப்பு மற்றும் அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் என்­ப­வற்றை இறக்­கு­மதி செய்யும் புறக்­கோட்டை பெரு வணி­கர்­க­ளுடன் கள்ளக் கூட்டு வைத்­தி­ருக்­கிறார் வர்த்­தக அமைச்சர். இவை சாம்­பி­ளுக்­கான இரு உதா­ர­ணங்கள் மட்டும் தான்.

அர­சி­யல்­வா­திகள் பணம் சம்­பா­திப்­ப­தற்­கென புதிய புதிய வழிகள் திறந்து கொண்டே இருக்­கின்­றன. உதா­ரணம், பூகோள அர­சியல் காய் நகர்த்­தல்கள். அவற்­றுக்கு ஊடாக உள்ளுர் அர­சி­யல்­வா­திகள்
பய­ன­டைந்து வரு­வதை சாதா­ரண வாக்­கா­ளர்­களால் ஒரு போதும் கண்டு கொள்ள முடி­யாது.

அடுத்­தது ‘Procurement’ என்­ற­ழைக்­கப்­படும் அர­சாங்­கத்தின் கொள்­வ­னவு நடை­முறை. அதா­வது, அர­சாங்­கத்­துக்கு தேவை­யான சாமான்­க­ளையும், சேவை­க­ளையும் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக பின்­பற்­றப்­பட்டு வரும் பல பில்­லியன் ரூபா தொகை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட டெண்டர் நடை­முறை. அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இவற்­றுக்­கூ­டா­கவும் பல்­வேறு வித­மான அனு­கூ­லங்கள் கிடைக்­கின்­றன என்­பதை எல்­லோரும் அறி­வார்கள்.

1989 தேர்­தலின் பின்னர் தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என ஒரு புதிய முறை அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டது. தேர்­தலில் போட்­டி­யிட்டு, அடி­த­டி­களில் இறங்கி பாரா­ளு­மன்­றத்­துக்கு வர முடி­யா­தி­ருக்கும் துறைசார் வல்­லு­னர்கள், புத்­தி­ஜீ­விகள் போன்­ற­வர்­களை பாரா­ளு­மன்­றத்­துக்குள் எடுத்து வர வேண்டும் என்ற நல்ல நோக்­கத்­துடன் அறி­முகம் செய்து வைக்­கப்­பட்ட ஒரு முறை இது.

ஆனால், முதல் தட­வையே அது மிக மோச­மான முறையில் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­ட­துடன், பதவி ஆசைக்­காக எவ்­வ­ளவு பெரிய தொகை­யையும் இழக்கத் தயா­ராக இருக்கும் ஆட்­க­ளி­ட­மி­ருந்து கோடிக் கணக்கில் பணத்தைக் கறப்­ப­தற்­கான ஓர் உத்­தி­யாக பல கட்­சிகள் அதனைப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தன.

பெரிய கட்­சி­களும், சிறிய கட்­சி­களும் தேர்­தலின் போது தமது பிரச்­சா­ரத்­திற்கு பண உதவி செய்த (Campaign Funding) ஆட்­களை ‘கவ­னிக்கும்’ ஒரு வழி­மு­றை­யாக தேசியப் பட்­டி­யலைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன. 1989 தொடக்கம் ஒவ்­வொரு கட்­சியும் நிய­மனம் செய்த தேசிய பட்­டியல் எம் பி களின் பெயர் விப­ரங்­களை மேலோட்­ட­மாக பார்த்­தாலே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

சுருக்­க­மாகச் சொன்னால், தேசிய பட்­டியல் எம் பி முறை அந்­தந்தக் கட்­சி­களின் தலைவர், செய­லாளர் போன்ற முக்­கிய புள்­ளிகள் ‘காசு பார்ப்­ப­தற்­கான’ மேலும் ஒரு வழியைத் திறந்­து­விட்­டி­ருக்­கின்­றது என்­பது தான் யதார்த்தம்.

இந்த முறையின் மற்­றொரு சுவா­ர­சியம் குறிப்­பிட்ட ஒரு கட்­சியின் முக்­கிய தலைவர் ஒருவர் பாரா­ளு­மன்­றத்­துக்கு வர விரும்பும் பொழுது, ஏற்­க­னவே இருக்கும் தேசிய பட்­டியல் எம் பி ஒரு­வரை ‘சுய விருப்பில்’ ராஜி­னாமா செய்ய வைக்கும் கூத்து. கோடிக் கணக்கில் கறுப்புப் பணம் கைமாறும் மற்­றொரு கேவ­ல­மான ஒரு பேரம்.
பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் மட்­டு­மல்­லாமல் மாகாண சபை மற்றும் உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தல்கள் போன்­ற­வற்­றுக்கு வேட்பு மனுக்­களை வழங்கும் விட­யத்­திலும் போட்­டி­யிட விரும்பும் வேட்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து ஒரு சில கட்­சிகள் பணம் பறிப்­பதை வழ­மை­யாகக் கொண்­டுள்­ளன.

அர­சி­யல்­வா­திகள் பணம் சம்­பா­திப்­ப­தற்­கென புதிய புதிய வழிகள் திறந்து கொண்டே இருக்­கின்­றன. உதா­ரணம், பூகோள அர­சியல் காய் நகர்த்­தல்கள். அவற்­றுக்கு ஊடாக உள்ளுர் அர­சி­யல்­வா­திகள் பய­ன­டைந்து வரு­வதை சாதா­ரண வாக்­கா­ளர்­களால் ஒரு போதும் கண்டு கொள்ள முடி­யாது.

1987 இந்­திய – இலங்கை சமா­தான ஒப்­பந்­தத்தை அடுத்து இலங்கை அர­சி­யலில் ஏற்­பட்ட குறிப்­பிட்டுச் சொல்­லும்­ப­டி­யான ஒரு மாற்றம், நாட்டின் உள் விவ­கா­ரங்­களில் அதி­க­ளவில் ஏற்­பட்ட வெளித் தலை­யீ­டு­க­ளாகும். குறிப்­பாக, 1988 இல் நடாத்­தப்­பட்ட முத­லா­வது மாகாண சபைத் தேர்­தல்கள் மற்றும் அதனை அடுத்து வடக்கு கிழக்கில் தோன்­றிய மிக மோச­மான பதற்ற நிலை­மைகள் என்­ப­வற்றின் போது பல கட்­சிகள் கொழும்பில் இயங்­கிய வெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களின் அஜென்­டாக்­களின் பிர­காரம் செயற்­பட்­ட­துடன், அதன் போது பல கோடி ரூபா பணம் கைமா­றி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. பல அர­சி­யல்­வா­திகள் திடீர் பணக்­கா­ரர்­க­ளாக மாறி­னார்கள்.

1987 இல் தொடங்­கிய அந்தப் போக்கு இன்று வரை நீடிக்­கி­றது. தேசிய மட்­டத்தில் நிகழும் பல முக்­கி­ய­மான அர­சியல் நகர்­வு­களின் பின்­ன­ணியில் பலம் வாய்ந்த நாடு­களின் தூது­வ­ரா­ல­யங்கள் இருந்து வரு­கின்­றன என்­பது பகி­ரங்க இர­க­சியம்.

இலங்­கையில் காலூன்­று­வ­தற்­கென இரண்டு வல்­ல­ரசு நாடு­க­ளுக்­கி­டையில் திரை மறைவில் ஒரு போட்டி இடம்­பெற்று வரு­கி­றது என வைத்துக் கொள்வோம். அது நமது அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு ஒரு கூடுதல் போன­சாக மாறு­கி­றது. இலங்கை அர­சாங்கம் அந்த இரு நாடு­களில் ஒன்­றுக்கு தனது கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த துறை­முகம் ஒன்றை குத்­த­கைக்கு விடு­வ­தற்கு முடிவு செய்கின்றது. எப்படியாவது அதனைத் தடுக்க வேண்டும் என போட்டி நாடு திட்டம் போடுகின்றது. காரியத்தை கச்சிதமாக முடித்து வைக்கும் பொருட்டு, வழமையாக தேசியவாத உணர்வுகளை தூண்டும் விதத்தில் செயற்பட்டு வரும் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியையும், சமயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பலம் வாய்ந்த அமைப்பையும் தேவையான ‘காணிக்கைகளுடன்’ தன்பக்கம் வளைத்துப் போடுகிறது அந்த நாடு.

அடுத்த நாள் தொடக்கம் அந்த தரப்புக்களின் தேச பக்தி உச்ச கட்டத்தில் எகிறுகிறது. கொழும்பில் நடக்கும் ஊடக மாநாடுகளில் ‘எமது தாய் மண்ணை காப்பாற்றிக் கொள்வதற்காக இன்னுயிரையும் கூட தியாகம் செய்யத் தயார்’ என்ற கோஷங்கள் விண்ணதிர எழுகின்றன.

இதை தான் ‘74 வருட கால சாபம்’ என்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
ஆனால், இங்குள்ள முக்கியமான கேள்வி இலங்கை அரசியலில் ஆழமாக வேரூன்றியிருக்கும் இந்த ‘சிஸ்டத்தை’ மாற்றியமைப்பதற்கு அரசாங்க கட்சி மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் முன்வருவார்களா என்பதாகும். இலங்கையில் இன்று இந்த கட்டமைப்பு மாற்றத்திற்காக உண்மையிலேயே குரல் கொடுத்து வரும் தனி நபர்களும், மக்கள் இயக்கங்களும் எதிர் கொண்டு வரும் மிகப் பெரிய சவாலாக இது இருந்து வருகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.