டான் பிரியசாத் கைது

0 383

காலி­ மு­கத்­திடல் மற்றும் அல­ரி­ மா­ளி­கைக்கு அருகில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்பில் டான் பிரி­யசாத் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

அத்­தோடு, மொரட்­டுவ நக­ர­சபை தலைவர் சமன் லால் பெர்­னாண்டோ / சீதா­வ­க­புர பிர­தேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன மற்றும் களனி பிர­தேச சபை உறுப்­பி­னர்­க­ளான மஞ்­சுள பிர­சன்ன ஆகி­யோ­ரையும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

இதே­வேளை, மேல் மாகா­ணத்­திற்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோ­னிடம் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சுமார் 10 மணித்­தி­யா­லங்கள் வாக்­கு­மூலம் பதிவு செய்­துள்­ளனர். நேற்று அதி­காலை 1 மணி­ய­ளவில் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் இருந்து அவர் வெளியேறியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.