அத்தியாவசிய சேவை விநியோக நெருக்கடிகள் 2 வருடத்திற்கு பின்னரும் நீங்குமா எனத் தெரியாது

பொருளாதார குழப்பங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு என்கிறார் நிதி அமைச்சர் அலி சப்ரி

0 376

(எம்.ஆர்.எம்.வஸீம், இ.ஹஷான்)
பொரு­ளா­தார நெருக்­க­டிக்­கான பொறுப்­பினை அர­சாங்கம் முழு­மை­யாக ஏற்­கி­றது. வரிக்­கு­றைப்பு செய்­தமை தவ­றான தீர்­மா­ன­மாகும். சமூக கட்­ட­மைப்பில் அத்­தி­யா­வ­சிய சேவை விநி­யோ­கத்தில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மைக்கு இன்னும் 2 வருட காலத்தின் பின்­ன­ரா­வது தீர்வு காண முடி­யுமா என குறிப்­பிட முடி­யாது. தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண சகல தரப்­பி­னரும் ஒன்­றிணைந்து செயற்­பட வேண்டும்.

நடை­மு­றையில் உள்ள வரவு -செலவு திட்டம் யதார்த்த நிலை­மைக்கு பொருந்தும் வகையில் அமை­ய­வில்லை.தற்­போ­தைய நெருக்­க­டிக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவு திட்டம் மறு­சீ­ர­மைக்­க­பட்டு வரி வரு­மானம் 15 சத­வீ­தத்­தினால் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என நிதி மற்றும் நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி சபையில் வலி­யு­றுத்­தினார்.

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தத்தை இரத்து செய்து அர­சி­ய­மைப்பின் 19ஆவது திருத்­தத்தை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் முன்­வைத்­துள்ள யோசனை சிறந்­தது, அதனை ஏற­றுக்­கொள்­கிறோம் எனவும் அவர் சபையில் குறிப்­பிட்டார்.

சபா­நா­யகர் தலை­மையில் நேற்று புதன்­கி­ழமை கூடிய பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரின் போது சர்­வ­தேச நாணய நிதி­யத்­துடன் இலங்கை பிர­தி­நி­திகள் குழு­வினர் மேற்­கொண்ட பேச்­சு­வார்த்­தையின் முன்­னேற்­றத்­தன்மை குறித்து சபையில் விசேட உரை­யாற்­று­கையில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
நாட்டில் தற்­போ­தைய நிலை­மையில் எவ­ரையும்,எந்த அர­சாங்­கத்­தையும் குறைகூற முடி­யாது.சுதந்­தி­ரத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் நாடு மிக மோச­மான பொரு­ளா­தார நெருக்­க­டி­யினை எதிர்்­கொண்­டுள்­ளது என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.எரி­பொருள், மருந்து மற்றும் எரி­வாயு ஆகிய சேவை விநி­யோக கட்­ட­மைப்பில் தோற்றம் பெற்­றுள்ள நெருக்­கடி நிலை­மை­யினை முகா­மைத்­துவம் செய்­யா­விடின் அது பாரிய விளை­வினை ஏற்­ப­டுத்தும்.

தற்­போ­தைய தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண சகல தரப்­பி­னரும் ஒன்­றி­ ணைந்து செயற்­பட வேண்டும்.தென்­கொ­ரியா, இந்­தியா ஆகிய நாடு­களின் ஆரம்ப கால பொரு­ளா­தார நிலை­மை­யினை ஒரு எடுத்­துக்­காட்­டாக கொண்டு தற்­போ­தைய நிலை­மை­யினை முகா­மைத்­துவம் செய்­யா­விடின் வெனி­சுலா, லெபனான் ஆகிய நாடு­களின் நிலை­மையே இலங்­கைக்கும் ஏற்­படும்.

நாட்டின் அரச வரு­மா­னத்­திற்கும், அரச செல­விற்கும் இடையில் பாரிய இடை­வெளி காணப்­ப­டு­கி­றது. 2021ஆம் ஆண்டு அரச வரு­மானம் 1500 பில்­லி­யன் ரூபாவாக காணப்­பட்டபோது அரச செல­வினம் 3522 பில்­லி­ய­னாக உயர்­வ­டைந்­துள்­ளது. மறு­புறம் புன­ர­மைக்­கப்­பட்ட கடன் 2748 பில்­லி­யன்­க­ளாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

1959ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மொத்த தேசிய வரி வரு­மானம் வீழ்ச்­சி­ய­டைந்த நிலையில் உள்­ளது. 1981, 1982 மற்றும் 1983ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­களில் வரி வரு­மானம் 25 சத­வீ­த­மாக காணப்­பட்ட, பிற்­பட்ட காலப்­ப­கு­தி­களில் வரி வரு­மானம் கட்டம் கட்­ட­மாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளன. 2022ஆம் ஆண்டு வரி­வ­ரு­மானம் 8.1 சத­வீ­த­மாக நிலைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

2021ஆம் ஆண்டு அரச சேவை­யா­ளர்­க­ளுக்கு சம்­பளம் செலுத்த 845 பில்­லி­யனும், ஓய்­வூ­தியம், சமுர்த்தி,பாட­சாலை சீருடை உட்­பட நலன்­புரி திட்­டங்­க­ளுக்­காக 595 பில்­லியன் நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது.நாட்டின் வெளி­நாட்டு கடன் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு பிறி­தொரு கார­ணி­யாக அமைந்­துள்­ளது.தற்­போது மொத்த அர­ச­முறை கடன் 53 பில்­லி­யன்­க­ளாக உயர்­வ­டைந்­துள்­ளது.

1954ஆம் ஆண்டு இலங்கை முதன் முறை­யாக 06 மில்­லியன் அர­ச­முறை கடனை பெற்­றுக்­கொண்­டுள்­ளது.2015ஆம் ஆண்டு 2 பில்­லியன், 20161.6 பில்­லியன், 2017ஆம் ஆண்டு 2.4 பில்­லியன், 2018ஆம் ஆண்டு 3 பில்­லி­யனும், 2019ஆம் ஆண்டு 4.5 பில்­லி­யனும், 2020ஆம் ஆண்டு 4 பில்­லி­யனும், 2021ஆம் ஆண்டு 4 பில்­லியன் அர­ச­முறை கடன்­கள் செலுத்­தப்­பட்­டுள்­ளன.

சமூக கட்­ட­மைப்பில் எரி­பொருள்,எரி­வாயு மற்றும் மருந்து ஆகிய அத்­தி­யா­வ­சிய சேவை கட்­ட­மைப்பில் தோற்றம் பெற்­றுள்ள பிரச்­சி­னைக்கு இன்னும் இரண்டு வருட காலத்­தி­லா­வது தீர்வு காண முடி­யுமா என குறிப்­பிட முடி­யாது.தற்­போ­தைய பிரச்­சினை 10 அல்­லது 15 வருட காலத்­திற்கு நீடிக்­கா­ம­லி­ருக்க பாரா­ளு­மன்றில் உள்ள சகல தரப்­பி­னரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.

பொரு­ளா­தார நெருக்­க­டிக்­கான பொறுப்­பினை அர­சாங்கம் முழு­மை­யாக ஏற்­கி­றது. ஆட்­சிக்கு வந்­த­வுடன் அர­சாங்கம் வரி குறைப்பு செய்­தமை தவ­றா­ன­தாகும்.2022ஆம் ஆண்­டுக்­கான வரவு- செலவு திட்டம் யதார்த்த பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகையில் அமை­யாது.ஆகவே வர­வு-­செ­லவு திட்டம் மறு­சீ­ர­மைக்­கப்­பட வேண்டும்.

பொரு­ளா­தார நெருக்­கடி அர­சியல் நெருக்­க­டி­யினை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.அர­சியல் நெருக்­க­டிக்கு குறு­கிய காலத்தில் தீர்வு காண முடியும். ஆனால் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு குறு­கிய காலத்தில் தீர்வு காண முடி­யாது. பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்வு காண நீண்ட கால கொள்கை திட்டம் வகுக்­கப்­பட வேண்டும்.அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை வரவேற்கத்தக்கது.

அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தம் முழு­மை­யாக இரத்து செய்­யப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தம் மீண்டும் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் குறிப்­பிட்­டுள்­ளமை சிறந்­தது.18மாத காலத்­திற்கு சகல தரப்­பி­ன­ரையும் ஒன்­றி­.ைணத்து புதிய அர­சாங் கத்தை ஸ்தாபித்து அதனை தொடர்ந்து 5வார காலத்­திற்குள் தேர்­தலை நடத்தி தீர்வு காணு­மாறு குறிப்­பிட்­டுள்­ளது ஏற்றுக்கொள்ள கூடியது என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.