பைஸல், தெளபீக், இஷாக் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டனர்

0 360

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.ஆர்.இஷாக் ஆகியோர் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தி­லி­ருந்தும் வில­கிக்­கொள்­வ­தாக அறி­வித்­துள்­ளனர்.

நேற்று பாரா­ளு­மன்றம் சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன தலை­மையில் சபை கூடியது. இதன்­போது தனி­நபர் சிறப்­பு­ரி­மைக்­க­மைய தனது நிலைப்­பாட்டை பாரா­ளு­மன்றில் அறி­விக்­கும்­போது பைஸல் காஸிம் அர­சாங்­கத்­திற்­கான தமது ஆத­ரவை விலக்கிக் கொள்­வ­தாக தெரிவித்தார்.

மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்களும் 20 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்ற அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவை வழங்­கி­ய­துடன் அதன் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.