‘ஹக்கீமின் உத்தரவுக்கமையவே கோத்தா அரசை ஆதரித்தோம்’

0 337

தமது கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டிக் கொண்­ட­தற்­க­மை­யவே, 20 ஆம் திருத்­தத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­ய­தா­கவும் அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தற்­போதும் அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்கி வரு­வ­தா­க சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் தெரி­வித்­துள்ளார்.

பிபிசி தமி­ழுக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, “பொது­ஜன பெர­முன பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிரான் அலஸின் வீட்­டி­டுக்கு 2020ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 10ஆம் திகதி மிலிந்த மொர­கொ­ட­வுடன் (தற்­போ­தைய இந்­தி­யா­வுக்­கான இலங்கைத் தூதுவர்) ஒரு தடவை சென்ற முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அங்கு ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்­சவைச் சந்­தித்து தனக்குத் தேவை­யான அனைத்து ஒப்­பந்­தங்­க­ளையும் செய்து முடித்­தார.;

அதே­போன்று முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரஊப் ஹக்­கீ­மு­டைய வீட்­டுக்கு 2020 ஒக்­டோபர் 18ஆம் திகதி பசில் ராஜ­பக்ச வந்து ஹக்­கீ­முடன் பேச்­சு­வார்­ததை நடத்­தினார். அப்­போது நான் உட்­பட முஸ்லிம் காங்­கி­ரஸின் 4 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அங்கு இருந்தோம். அதன்­போது முஸ்லிம் காங்­கி­ரஸின் 04 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 20ஆவது திருத்­தத்தை ஆத­ரித்து வாக்­க­ளிப்­பார்கள் என பசில் ராஜ­பக்­ச­விடம் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்­கு­றுதி வழங்­கினார்.
பசில் ராஜ­பக்­ச­வு­ட­னான அந்த சந்­திப்பு பகல் 12.16 மணிக்கு ஆரம்­பித்து 1.15 வரைக்கும் நடந்­தது.

அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு பாரா­ளு­மன்றில் நான் உரை­யாற்­றிய போது, எமது கட்சித் தலைவர் மனச்­சாட்­சிக்கு அமை­வாக வாக்­க­ளிக்­கு­மாறு எங்­க­ளுக்குக் கூறி­யுள்ளார் என கூறினேன். அதனை தலைவர் ஹக்கீம் கேட்டுக் கொண்­டி­ருந்தார். நான் கூறி­யது பொய் என்றால், அவர் என்னை இடை­ம­றித்து, ‘நீங்கள் 20ஆவது திருத்­தத்தை எதிர்த்து வாக்­க­ளிக்க வேண்டும்” எனக் கூறி­யி­ருக்­க­லா­மல்­லவா? ஆனால் அவர் அதனைச் செய்­ய­வில்லை. காரணம், அவரின் உத்­த­ர­வுக்கு அமை­வா­கத்தான் அன்று 20ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ர­வாக நாம் வாக்­க­ளித்தோம்.

இவ்­வாறு எம்மை அரசாங்கத்தின் பக்கம் செல்லுமாறு கூறிவிட்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்மைக் குற்றஞ்சாட்டுவது எந்தவகையில் நியாயம் எனவும் ஹாபிஸ் நசீர் கேள்வியெழுப்பியுள்ளார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.