போராடும் மக்­களின் கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் செவி­சாய்க்க வேண்டும்

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா

0 335

நாட்டில் இடம்­பெற்று வரும் போராட்­டங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
தற்­போது நம் நாட்டு மக்­க­ளுக்கு தங்­க­ளது அன்­றாட தேவை­களை பூர்த்தி செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளதால் இன, மத பேத­மின்றி நாட்டு மக்கள் ஒன்­றி­ணைந்து வீதியில் இறங்கி ஜன­நா­யக ரீதி­யாக போராடி வரு­கின்­றனர்.

மக்கள் தமது கருத்­துக்­க­ளையும் தேவை­க­ளையும் ஜன­நா­யக ரீதி­யாக முன்­வைப்­பது அவர்­க­ளது உரி­மை­யாகும். எனினும், ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொள்ளும் போது உயிர் மற்றும் உடை­மை­க­ளுக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாத வகை­யிலும், வன்­மு­றையில் ஈடு­ப­டா­மலும், பொது மக்­க­ளுக்கு இடைஞ்­சல்­களை ஏற்­ப­டுத்­தா­மலும், இது தொடர்­பான நாட்டு சட்­டங்­களை பேணியும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் நடந்து கொள்ள வேண்­டு­மென்று நாம் அன்­பாகக் கேட்டுக் கொள்­கின்றோம்.

அத்­துடன், எரி­பொருள் பற்­றாக்­குறை, அத்­தி­ய­வ­சியப் பொருட்­களின் விலை உயர்வு, மின் துண்­டிப்பு போன்ற பல பிரச்­சி­னை­களை மக்கள் எதிர்­கொள்ளும் இத்­த­ரு­ணத்தில் மக்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை வழங்­கு­மாறும், ஜன­நா­யக ரீதியில் போரா­டி­வரும் மக்­களின் உணர்­வு­களை மதித்து அவர்­க­ளது கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் செவி­சாய்க்க வேண்­டு­மென்றும் நாம் கேட்டுக் கொள்­கின்றோம்.

நம் நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யான இந்­நிலை அவ­ச­ர­மாக நீங்கி, நம் தாய்நாடு சுபீட்சம் பெற புனித ரமழான் மாதத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.