பாலமுனையில் விகாரை அமைக்கும் முயற்சி: அரச ஆதரவு முஸ்லிம் எம்.பி.க்கள் ஏன் மௌனம்?

0 476

எஸ்.றிபான்

இனங்­க­ளுக்கு இடையே நல்­லி­ணக்கம் பேணப்­படும் போதுதான் வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள பொரு­ளா­தா­ரத்­தையும், ஜன­நா­யக அர­சியல் கலா­சா­ரத்­தையும், சட்ட ஒழுங்­கையும் முன்­னேற்ற முடியும் என்­பது மிகவும் தெளி­வாக நாட்டு மக்­க­ளினால் உண­ரப்­பட்­டுள்­ளது. ஆயினும், இந்த நாட்டை இன்­றைய நிலைக்கு கொண்டு வந்­த­வர்கள் இன்னும் தங்­களின் ஒவ்­வாத நட­வ­டிக்­கை­களில் இருந்து தம்மை திருத்திக் கொள்­ள­வில்லை. அத­னால்தான் பல்­லின மக்கள் வாழும் நாட்டில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற போர்­வைக்குள் பௌத்த மய­மாக்­கலை மேற்­கொள்­வ­தற்­கு­ரிய திட்­டங்­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மறு­பு­றத்தில் சிறு­பான்­மை­யி­னரின் பூர்­வீகக் காணி­களை பௌத்த புனித பூமி, வன இலா­கா­வுக்­கு­ரிய பிர­தேசம் என்று பல்­வேறு பெயர்­களில் காணி­களை அப­க­ரித்துக் கொள்ளும் கொள்கைப் போக்­கிலும் மாற்­றங்­களைக் காண முடி­ய­வில்லை.

கடந்த 9ஆம் திகதி அம்­பாரை மாவட்­டத்தில் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையின் எல்­லைக்­குட்­பட்ட பால­மு­னையில் உள்ள முள்­ளி­மலை பிர­தே­சத்தில் உள்ள தனியார் ஒரு­வ­ருக்கு உரித்­து­டைய காணி ஒன்றில் பௌத்த விகாரை ஒன்­றினை அமைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை தீக­வாபி ரஜ­மகா விகா­ரா­தி­ப­தியின் தலை­மையில் இன்னும் சில தேரர்­களும், தனி­ந­பர்கள் சில­ரு­மாக இர­வோடு இர­வாக மேற்­கொண்­டனர்.

ஆயினும் அன்­றைய தினம் காலை பொது மக்­களும், அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் குறித்த இடத்­திற்கு வருகை தந்து தமது எதிர்ப்பைக் காட்­டினர். இதனைத் தொடர்ந்து பௌத்த விகாரை அமைப்­ப­தற்­கு­ரிய முயற்­சியில் ஈடு­பட்ட குழு­வினர் அங்­கி­ருந்து வெளி­யே­றினர்.

பால­முனை முள்­ளி­மலை பிர­தே­சத்தில் தனியார் ஒரு­வரின் காணியில் பௌத்த விகாரை அமைப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்சி முழுக்க சட்­டத்­திற்கு மாற்­ற­மா­னது. அதற்­கு­ரிய எந்­த­வொரு அனு­ம­தியும் சட்ட ரீதி­யாக பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை என அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபைத் தவி­சாளர் ஏ.எல்.அமா­னுல்லாஹ் தெரி­வித்தார்.

குறித்த முள்­ளி­மலை பிர­தே­சத்தில் உள்ள காணிகள் அங்­குள்ள முஸ்­லிம்­க­ளுக்­கு­ரி­ய­தாகும். அவர்கள் சட்­ட­ரீ­தி­யான அனு­மதிப் பத்­தி­ரத்­தையும் வைத்­துள்­ளார்கள். ஆயினும், இப்­பி­ர­தே­சத்தை பௌத்­தர்­களின் பிர­தே­ச­மாக்கிக் கொள்­வ­தற்­கு­ரிய முயற்­சிகள் பௌத்த இன­வாத தேரர்­க­ளினால் பல தட­வைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. பொது மக்கள் காட்­டிய எதிர்ப்­பினால் அந்த முயற்­சிகள் கைவி­டப்­பட்­டன. ஆயினும், குறித்த இடத்தில் பௌத்த விகாரை அமைப்­ப­தற்­கு­ரிய முயற்­சி­களை பௌத்த பேரி­ன­வாத தேரர்கள் கைவி­ட­வில்லை என்­ப­த­னையே அண்­மையில் இடம்­பெற்ற முயற்சி மூல­மாக புரிந்து கொள்ள முடி­கின்­றது.

இம்­மாதம் 9ஆம் திக­தியும் பொது மக்­களும், அர­சி­யல்­வா­தி­களும் எதிர்ப்புக் காட்­டி­ய­தனை அடுத்து அங்­கி­ருந்து வெளி­யே­றிய குழு­வினர் அங்கு பௌத்த விகாரை அமைக்க வேண்­டு­மென்­பதில் உறு­தி­யாக உள்­ளார்கள் என்­பது அவர்கள் மீண்டும் 13ஆம் திகதி பால­முனை முள்­ளி­மலை பிர­தே­சத்­திற்கு வருகை தந்­தி­ருந்­ததன் மூல­மாக ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது. அன்றும் கூட பொது மக்­களும், அர­சி­யல்­வா­தி­களும் எதிர்ப்புக் காட்­டினர். மீண்டும் குறித்த குழு­வினர் அங்­கி­ருந்து சென்­றனர். ஆயினும், அவர்கள் மீண்டும் வரு­வார்கள் என்­ப­துதான் அனு­ப­வ­மாகும்.

இது தனியார் ஒரு­வ­ருக்­கு­ரிய காணி, அதற்­கு­ரிய ஆவ­ணங்­களும் முறை­யாக உள்­ளன. அதே வேளை, சட்­டத்­திற்கு முர­ணான வகையில் பௌத்த விகாரை அமைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்கு இலங்­கையின் காவல்­து­றை­யினர் பாது­காப்பு அளித்­த­மை­யா­னது, சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கைக்கு வழங்­கப்­பட்ட அங்­கீ­கா­ர­மா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

பால­முனைக் கிராமம் நூறு வீதம் முஸ்­லிம்­களைக் கொண்­டது. அங்கு எந்­த­வொரு பௌத்­தரும், கிடை­யாது. இத்­த­கை­ய­தொரு நிலையில் குறித்த பிர­தே­சத்தில் பௌத்த விகாரை அமைப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­யா­னது பௌத்­தர்­க­ளுக்கும், முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே முரண்­பா­டு­களை தோற்­று­விப்­ப­தற்­கு­ரிய சதி­யா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது.
இலங்கை பௌத்த நாடாகும். நாட்டில் எல்லாப் பாகங்­க­ளிலும் வாழ்­வ­தற்­கு­ரிய உரிமை பௌத்­தர்­க­ளுக்கு மாத்­தி­ரமே உள்­ளது. ஏனைய இனங்­க­ளுக்கு அத்­த­கைய உரிமை கிடை­யாது. அவர்கள் இங்கு வாழ்­வ­தற்கு வந்­த­வர்கள் என்ற கொள்­கையை பௌத்த பேரி­ன­வாத கடும்­போக்­கு­வா­திகள் இன்று வரை உச்­ச­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதற்கு ஆட்­சி­யா­ளர்கள் உறு­து­ணை­யாக இருந்து வரு­கின்­றார்கள்.

பால­மு­னையில் பௌத்த விகாரை ஒன்று அமைப்­ப­தற்­கு­ரிய முயற்­சிகள் பௌத்த பேரி­ன­வாதத் தேரர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கைகள் குறித்து அம்­பாரை மாவட்­டத்தில் உள்ள ஒரு சில அர­சி­யல்­வா­திகள் கட்சி பேத­மின்றி தமது எதிர்ப்பை ஒற்­று­மைப்­பட்டு மேற்­கொண்ட போதிலும், இம்­மா­வட்ட முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ், பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், முஸரப் ஆகி­யோர்கள் இச்­சம்­பவம் குறித்து வாய் திறக்­க­வில்லை.

முஸ்லிம் சமூ­கத்தின் நல­னுக்­கா­கவே அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கிக் கொண்­டி­ருக்­கின்றோம் என்று இவர்கள் தெரி­வித்துக் கொண்­டாலும், பௌத்த பேரி­ன­வா­தி­களின் முஸ்லிம் விரோத நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு எந்­த­வொரு சிறு முயற்­சியைக் கூட ஆட்­சி­யா­ளர்கள் மேற்­கொள்­ள­வில்லை. அத­னால்தான் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்ற பௌத்த தேரர் குழு­வி­ன­ருக்கு பாது­காப்புத் தரப்­பினர் பாது­காப்பு வழங்­கி­யுள்­ளனர்.

இதே­வேளை, முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பால­மு­னையில் விகாரை அமைப்­ப­தற்கு எடுத்த முயற்சி குறித்து தமது பலத்த கண்­ட­னத்தை தெரி­வித்­துள்ளார்.
நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் முஸ்­லிம்­களின் மீது பௌத்த பேரி­ன­வா­திகள் பல தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டார்கள். இறக்­காமம் மாயக்­கல்லி மலை­யிலும் புத்தர் சிலை வைத்­தார்கள். அப்­போது முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அக்­கட்­சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் மற்றும் அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் அமைச்சர்கள் அந்தஸ்தில் இருந்தார்கள். ஆனால், அவர்களினால் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களை தடுக்க முடியவில்லை. மட்டுமன்றி தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுமில்லை என்ற கசப்பான உண்மையையும் சொல்லியாக வேண்டியுள்ளது.

ஆளும் கட்சியில் ஒரு முகமும், எதிர்க்கட்சியில் ஒரு முகமுமாக சமூகத்தின் விவகாரங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடகமாட ஒருபோதும் இடமளிக்க முடியாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.