டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜமால் கஷோக்ஜி இடம்பெற்றிருப்பது குறித்து டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடும் போது, ”சவூதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர். இவர் சவூதி இளவரசர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது” என்று கூறியுள்ளது.
சவூதி அரசையும் அதன் இளவரசர் முகமம்து பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்தவர் பத்திரிகையாளர் ஜமால். இவர் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களைப் பெறச் சென்றவர் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.
இவருக்கும் சவூதியைச் சேர்ந்த 15 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜமால் இறந்ததாக சவூதி கூறிவந்தது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை, என்றும் இக்கொலையில் இளவசர் முகம்மது பின் சல்மானுக்குத் தொடர்புள்ளதாகவும் கூறி ஆதாரங்களை வெளியிட்டதுடன் குற்றவாளிகளைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி குற்றம் சாட்டியது.
ஆனால் சவூதி இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இந்தக் கொலை வழக்கில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று சவூதி கூறியது. இந்நிலையில் ஜமால் கொலை வழக்கில் சவூதியால் கைது செய்யப்பட்டுள்ள அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்க அந்நாடு ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.