2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் நாட்டில் 16 பள்ளிகளுக்கு பூட்டு

சமய வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்கிறது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

0 486

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
2019 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து இது­வரை பல்­வேறு கார­ணங்­களை முன்­வைத்து நாட­ளா­விய ரீதியில் 16 பள்­ளி­வா­சல்கள் மூடப்­பட்­டுள்­ள­தா­கவும், சமய வழிபாடுகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­விக்­கி­றது.

குறிப்­பிட்ட பள்­ளி­வா­சல்கள் தௌஹீத் கொள்­கை­களைப் பரப்­பு­கின்றன என்ற சந்­தே­கத்தின் கீழும் மற்றும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் முறைப்­பா­டு­கள் முன்­வைக்­கப்­பட்டு எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­ட­தை­ய­டுத்­துமே அர­சினால் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘குறிப்­பிட்ட பள்­ளி­வாசல் தொடர்­பான பிரச்­சி­னைகள் திணைக்­க­ளத்­தினால் பூர­ண­மாக ஆரா­யப்­படும். அப்­பள்­ளி­வா­சல்­களில் பிரச்­சி­னைகள் ஏது­மில்லை எனக் கண்டால் அவை புத்­த­சா­சன மற்றும் கலா­சார அமைச்சின் பரிந்­து­ரை­களைப் பெற்று மீண்டும் திறக்­கப்­படும். பாத­க­மான நிலை­மை­க­ளற்ற பள்­ளி­வா­சல்­களே இவ்­வாறு மீண்டும் திறப்­ப­தற்கு சிபா­ரிசு செய்­யப்­படும்.
சுமு­க­மான நிலை­மை­யுள்ள பள்­ளி­வா­சல்­களை மீளத் திறப்­ப­தற்கு பிராந்­திய பொலிஸ் அதி­காரிகள் மற்றும் பிராந்­திய மதத் தலை­வர்கள் என்­போ­ருடன் கலந்­து­ரை­யா­டல்­களும் மேற்­கொள்­ளப்­படும். மூடப்­பட்­டுள்ள தௌஹீத் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வாகம் அரு­கி­லுள்ள பெரிய பள்ளிவாசலிடம் கையளிக்கப்பட்டால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். மற்றும் மக்கள் அங்கு தமது சமயக் கடமைகளை முன்னெடுப்பதற்கும் வழிவகுக்கும்’ என்றும் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.