பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று ஐக்கிய தேசிய முன்னணியினால் நம்பிக்கைப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்தே சமர்ப்பிக்கவுள்ளன. பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சமர்ப்பிக்கவுள்ளார்.
பிரேரணை சமர்ப்பிக்கபட்டு இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இந்த நம்பிக்கை பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்குவதில்லை என தீர்மானித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப் பிரேரணைக்கு ஆதரவளித்து வாக்களிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-Vidivelli