கூரகல தொல்பொருள் பிரதேசத்தை அழித்ததாக கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது தரீக்கா கவுன்சில்

0 556

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பல நூற்­றாண்டு கால­மாக அடிப்­படை­வா­த­ கு­ழுக்கள் கூர­கல தொல்­பொருள் பிர­தே­சத்தைப் பல­வந்­த­மாக கைப்­பற்றி புரா­த­ன­தொல்­பொ­ருளை அழித்­துள்­ளன என்று சிங்­கள தொலைக்­காட்சி சேவை­யொன்றில் முன் வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டினை தரீக்கா கவுன்ஸில் மற்றும் கொழும்பு தெவட்­ட­கஹ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை என்­பன முழு­மை­யாக மறுத்­துள்­ள­துடன், வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளன.

கூர­கல பிர­தேசம் பெளத்த அடிப்­ப­டை­வா­தி­க­ளி­னாலே முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது. இது சூபிகள் வாழ்ந்த இடம். 800வரு­டங்­க­ளுக்கும் மேலான வர­லாறு இதற்கு இருக்­கி­றது. இன்று தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் ஒரு புற­மாக ஒதுக்கி வைக்­கப்­பட்டு அப்­பி­ர­தே­சத்தில் பாரிய அளவில் பெளத்­த­தாது கோபுரம் மண்­ட­பங்கள் உட்­பட நிர்­மா­ணங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இப்­பி­ர­தேசம் தொல் பொருள் மைய­மாகும். இப்­பி­ர­தே­சத்தில் எவ­ராலும் எவ்­வ­கை­யான நிர்­மா­ணங்­க­ளையும் மேற்­கொள்ள முடி­யாது என தெவட்டகஹ­ பள்­ளி­வாசல் நிர்­வா­க­ச­பையின் தலை­வரும் தரீக்கா கவுன்­ஸிலின் நிர்­வாக உறுப்­பி­ன­ரு­மான ரியாஸ்­சாலி தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் இன்று ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்குச் செல்லும் முஸ்­லிம்கள் இடையில் நிறுத்தி வைக்­கப்­பட்டு பாது­காப்பு பிரி­வி­னரால் சோத­னை­யி­டப்­ப­டு­கி­றார்கள். நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை­யுடன் பேசி­யி­ருக்­கிறார். உலமா சபை ஜெய்­லானி பள்­ளி­வாசல் எமக்­கு­ரி­ய­தல்ல என்று தெரி­வித்­தி­ருக்­கி­றது. நெல்­லி­கல தேரர் சூபி முஸ்­லிம்­க­ளு­டனே இப்­பள்­ளி­வாசல் பற்றி பேச­வேண்டும்.

கொரோனா தொற்று பரவல் நில­விய காலத்தில் கூர­கல தொல்­பொருள் மையத்தில் இந்­நிர்­மாணப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆயி­ரக்­க­ணக்­கான இரா­ணுவ வீரர்கள், சிவில்­பா­து­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள், இப்­ப­ணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். இந்த புண்­ணிய ஸ்தல நிர்­மாணம் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும்.

சூபி முஸ்­லிம்­களை அடிப்­ப­டை­வா­தி­க­ளென எவ­ராலும் பெயர் சூட்­ட­மு­டி­யாது. உலமா சபையே வஹாபிஸ கொள்கைகளை கொண்டுள்ளது. தப்தர் ஜெய்லானி பள்ளி வாசலையோ, ஸியாரத்தையோ எவராலும் தடை செய்யவோ, மூடிவிடவோ முடியாது. கொள்ளுப்பிட்டி மஹல்லாவில் மூடப்பட்டிருக்கும் ஸியாரத்தையும் மீளத்திறக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.