பாகிஸ்தான் : சுற்றுலா சென்ற மக்கள் பனிக்குள் சிக்கி பரிதாப மரணம்

0 551

பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்தில் உள்ள முர்­ரியில் கடும் பனிப்­பொ­ழிவு கார­ண­மாக 22 பேர் உயி­ரி­ழந்த சம்­பவம் பல­ரையும் அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் ஆழ்த்­தி­யுள்­ளது.

முர்ரி மலைப் பகு­தியில் வெள்ளிக்­கி­ழமை மற்றும் சனிக்­கி­ழமை அதி­கா­லை­யில் 4 அடிக்கும் (122 செ.மீ) உய­ர­மான பனிப்­பொ­ழிவு ஏற்­பட்டு ஆயி­ரக்­க­ணக்­கான கார்கள் அதனுள் சிக்­கி­ய­தாக உள்­துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத் தெரி­வித்தார். வெப்­ப­நிலை மைனஸ் 8 டிகிரி செல்­சியஸ் (17.6 டிகிரி பரடைன்) ஆக குறைந்­தது.

தலை­நகர் இஸ்­லா­மா­பாத்­திற்கு வடக்கே சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்­துள்ள முர்ரி, ஆண்­டு­தோறும் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான சுற்­றுலாப் பய­ணி­களை ஈர்க்கும் பிர­ப­ல­மான குளிர்­கால சுற்­றுலாப் பிர­தே­ச­மாகும்.

மலை வாசஸ்­த­ல­மான முர்­ரிக்கு அருகில் கடும் பனியில் சிக்கித் தவித்த குறைந்­தது 24,000 வாக­னங்­களில் இருந்து மக்­களை  மீட்­ட­தாக அதிகாரிகள் தெரி­வித்­தனர். ஆனால் மேலும் 1,000க்கும் மேற்­பட்ட வாகனங்கள் பனி­யினுள் சிக்­கிக்­கொண்­டன. பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் உடல் வெப்­ப­நிலை அசா­தா­ர­ண­மாக குறைந்­தன் (Hypothermia) கார­ண­மா­கவே இறந்­த­தாக அதி­கா­ரிகள் தெரிவித்தனர்.

செவ்­வாய்க்­கி­ழமை இரவு தொடங்­கிய பனிப்­பொ­ழிவு சீரான இடை­வெ­ளியில் தொடர்ந்து பெய்து வந்­ததால் அதனைப் பார்­வை­யிட ஆயி­ரக்­க­ணக்­கான சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­தனர். எனினும் எதிர்­பா­ராத அளவு ஏரா­ள­மான பார்­வை­யா­ளர்கள் வருகை தந்­ததால், வாகன நெரிசல் ஏற்­பட்டு பல குடும்­பங்கள் வீதி­க­ளி­லேயே சிக்கித் தவித்­தன.

அர­சாங்க புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி, பனிப்­பொ­ழிவு தொடங்­கிய வெள்ளி மற்றும் சனிக்­கி­ழ­மைக்கு இடையில் சுற்­றுலாப் பய­ணி­களை ஏற்­றிய சுமார் 157,000 க்கும் மேற்­பட்ட வாக­னங்கள் முர்­ரிக்குள் நுழைந்­தன.

பனிப்­பொ­ழிவு கார­ண­மாக சாலை­களில் மரங்கள், மின்­கம்­பங்கள் விழுந்து கிடக்­கின்­றன. சிக்­கி­யுள்ள வாக­னங்­களின் கண்­ணா­டி­களைத் தட்டி மக்­களின் நிலையை அறிய மீட்புப் பணி­யா­ளர்கள் முயல்­கின்­றனர். பதில் கிடைக்­க­வில்­லை­யென்றால், வாக­னத்தை உடைத்துத் திறந்து உள்ளே இருப்­ப­வர்­க­ளுக்கு உதவும் முயற்சி நடந்து வரு­கி­றது.
மலை வாசஸ்­த­ல­மான முர்­ரிக்கு அருகில் கடும் பனியில் சிக்கித் தவித்த குறைந்­தது 24,000 வாக­னங்­களில் இருந்து மக்­களை மீட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். ஆனால் மேலும் 1,000 க்கும் மேற்­பட்ட வாக­னங்கள் பனி­யினுள் சிக்­கிக்­கொண்­டன.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் உடல் வெப்­ப­நிலை அசா­தா­ர­ண­மாக குறைந்­ததன் (Hypothermia) கார­ண­மா­கவே இறந்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். உயி­ரி­ழந்­த­வர்­களில் இஸ்­லா­மா­பாத்தில் கட­மை­யாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரியும் அவ­ரது குடும்­பத்தைச் சேர்ந்த ஏழு பேரும் அடங்­கு­கின்­றனர். மேலும் இறந்­த­வர்­களில் 15 வய­துக்­குட்­பட்ட நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்­களைக் கொண்ட ஒரு குடும்­பமும் அடங்­கு­கி­றது.

இறந்­த­வர்­களில் 10 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் 10 குழந்­தைகள் அடங்­குவர். முர்­ரியின் மீட்புப் பணி­யா­ளர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் வாக­னங்­களில் சிக்­கிய பய­ணிகள் மற்றும் மயக்­க­ம­டைந்­த­வர்­க­ளுக்கு முத­லு­தவி அளித்து அவர்­களை பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அழைத்துச் செல்­கின்­றனர்.

“இது திட்­ட­மி­ட­லின்­மையால் ஏற்­பட்ட தோல்­விக்கு ஒரு எடுத்­துக்­காட்டு, ஏனெனில் அறிக்­கை­க­ளின்­படி, சுமார் 100,000 வாக­னங்கள் குறு­கிய சாலை­களைக் கொண்ட மலைப்­ப­கு­திக்குச் சென்­றன” என்று அல் ஜஸீராவின் செய்­தி­யாளர் கமால் ஹைதர் கூறு­கிறார்.
“கடு­மை­யான பனிப்­பொ­ழிவு பற்­றிய எச்­ச­ரிக்­கைகள் இருந்தும் அதனை மீறி மக்கள் சென்­றுள்­ளனர். அல்­லது அதி­கா­ரிகள் அவர்­களைத் தடுத்து நிறுத்­தி­யி­ருக்க வேண்டும். அதுதான் ஒரு முழு பேர­ழி­விற்கு வழி­வ­குத்­தது” என்றும் அவர் குறிப்­பி­டு­கிறார்.

பல ஆண்­டு­க­ளுக்குப் பிறகு முர்­ரியில் கடும்­ப­னிப்­பொ­ழிவு கார­ண­மாக சுற்­றுலாப் பய­ணிகள் பல மணி­நேரம் போக்­கு­வ­ரத்து நெரி­சலில் சிக்கித் தவித்­தனர். காரில் நீண்­ட­நேரம் அமர்ந்­தி­ருந்­த­தாலும், ஜன்­னல்கள் மூடப்­பட்டு, ஹீட்டர் இயக்­கப்­பட்­ட­தாலும் வாக­னத்­திற்குள் ஒட்­சிசன் பற்­றாக்­குறை ஏற்­பட்டு, பல சுற்­றுலா பய­ணிகள் மயக்கம் அடைந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

முர்­ரியில் சுற்­றுலாப் பய­ணிகள் உயி­ரி­ழந்­தது குறித்து பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் வருத்தம் தெரி­வித்­துள்ளார். இந்த திடீர் பனிப்­பொ­ழிவை எதிர்­கொள்ள அரச அதி­கா­ரிகள் தயா­ராக இருக்­க­வில்லை என்று அவர் மேலும் கூறி­யுள்ளார்.

கால­நிலை விப­ரங்­களை தெரிந்து கொள்­ளா­மல்­ இவ்­வ­ளவு அதி­க­மான சுற்­றுலாப் பய­ணிகள் முர்­ரிக்கு வரு­வார்கள் என்று அதி­கா­ரிகள் எதிர்­பார்க்­க­வில்லை என்றும் அவர் கூறினார்.

“சுற்­றுலாப் பய­ணி­களின் பரி­தாப மரணம் அதிர்ச்­சியும், வருத்­தமும் அளிப்­ப­தா­கவும், எதிர்­கா­லத்தில் இது­போன்ற சோகம் நடக்­காமல் இருக்க இந்த விவ­காரம் குறித்து விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது,” என்றும் இம்ரான் கான் தனது ட்விட்டர் பதிவில் தெரி­வித்­துள்ளார்.

“இப்­போதும் நிறைய போக்­கு­வ­ரத்து நெரிசல் உள்­ளது. குறைந்­தது முந்­நூறு வாக­னங்கள் பதி­னேழு மைல் தொலைவில் உள்ள சுங்­கச்­சா­வ­டியில் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. அதே நேரத்­தில்­சுமார் 500 வாக­னங்கள் நெடுஞ்­சா­லைக்குச் செல்லும் வழியில் சிக்கிக் கொண்­டுள்­ளன,” என்று முர்­ரியில் வசிக்கும் ஷஃபிக் பிபி­சி­யிடம் கூறினார்.

பிபிசி செய்­தி­யாளர் சஹர் பலோச்­சிடம் பேசிய சானியா தாவூத், தனது கணவர் மற்றும் குழந்­தை­க­ளுடன் வெள்ளிக்­கி­ழமை இரவு முர்­ரிக்கு புறப்­பட்­ட­தாக கூறினார்.
“தற்­போது நிலைமை மோச­மாகி வரு­கி­றது. ஜிக்கா சௌக்­கி­லி­ருந்து இரு­நூ­று­மீட்டர் தொலைவில் நாங்கள் இருக்­கிறோம். கழி­வ­றைக்கு செல்ல நீண்ட வரிசை உள்­ளது, மேலும் சாலையில் கண்­ணுக்கு எட்­டிய தூரம் வரை வாக­னங்கள் சிக்­கிக்­கொண்­டுள்­ளன. காலையில் நாங்கள் குழந்­தை­களை அழைத்­துக்­கொண்டு சிற்­றுண்டி வாங்க நடந்து சென்றோம். ஆனால் அங்கு இப்­போது சமையல் கேஸும் குறை­வா­கவே உள்­ளது. சாலைகள் வழுக்­கு­வதால் நடப்­பது சிரமம். இனி வண்­டி­யை­விட்டு எங்­களால் வெளியே செல்­ல­மு­டி­யாது,” என்று அவர் சொன்னார்.

வெள்ளிக்­கி­ழமை இரவு தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்­டி­ருந்த ரெஹான் அப்­பாஸி, முந்­தை­யநாள் மாலை 6 மணி முதல் பனியில் சிக்கித் தவிப்­ப­தாக தெரி­வித்தார். “இப்­போதும் பனியில் சிக்­கி­யுள்ளேன். வாக­னங்­களில் எரி­பொருள் தீர்ந்து விட்­டது. இங்கு குளிர் அதி­க­மாக உள்­ளது. பனிக் கல்­ல­றையில் புதை­யுண்­டது போல காரில் நேரத்தை கடத்­தினேன். நல்ல வேளை நான் உயிர்­பி­ழைத்தேன்” என்றார் அவர்.

பனிப்­பொ­ழிவின் போது இது­போன்ற சூழ்நிலையை தனது வாழ்­நாளில் பார்த்­த­தில்லை என முர்­ரியில் வசிக்கும் மெஹ்தாப் அப்­பாஸி கூறினார்.
தற்­போது முர்­ரியில் மின்­சாரம் இல்லை என்றும் சில இடங்­களில் மின் கம்­பிகள் அறுந்­தி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

சில வாக­னங்­களை தட்டிக் கேட்­டாலும் அங்­கி­ருந்து எந்த பதி­லும்­வ­ர­வில்லை என்று முர்ரி சாலையைச் சுற்­றி­யுள்ள பகு­தியில் நிவா­ர­ணப்­ப­ணியில் ஈடு­பட்­டுள்ள குல் ஹசன் என்­பவர் குறிப்­பிட்டார்.

“சில வாக­னங்­களை தட்டிக் கேட்­கிறோம். ஆனால் அங்­கி­ருந்து எந்த பதிலும் வர­வில்லை. இது­போன்ற இரண்டு வாக­னங்­களை அடை­யாளம் கண்டு அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் தெரி­வித்­துள்ளேன்” என்று குல் ஹசன் கூறினார்.

நிவா­ர­ணப்­ப­ணியில் ஈடு­பட்­டுள்ள மற்­றொ­ரு­வ­ரான முக­மது மொஹ்சின், “உண்­மையில் கூறப்­ப­டு­வ­தை­விட நிலைமை மோச­மாக இருப்­ப­தாக நான் நினைக்­கிறேன்”என்றார்.
“சனிக்­கி­ழமை காலை முதல் நிவா­ரணப் பணி­யா­ளர்கள் பய­ணி­க­ளுக்கு உதவி வரு­கின்­றனர். அவர்­க­ளுடன் உள்­ளூர் மக்­களும் பனியில் சிக்­கி­ய­வர்­களை வெளி­யேற்றி வரு­கின்­றனர். நிவா­ரணப் பணி­யா­ளர்­களின் எண்­ணிக்கை மிகக் குறைவு என்று நான் நினைக்­கிறேன். நிவா­ர­ணப்­ப­ணி­களை மிக வேக­மாக விரை­வு­ப­டுத்­த­வேண்டும்,” என்று அவர் கூறு­கிறார்.

முந்­தைய தினம் பத்து குடும்­பங்கள் தங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­த­தா­கவும், ஆனால் தடுத்து நிறுத்­தி­ய­போ­திலும் அவர்கள் காலையில் ஹோட்­டலை விட்டு வெளி­யே­றி­ய­தா­கவும் முர்­ரியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான காசிம் அப்­பாஸி பிபி­சி­யிடம் கூறினார்.

மாலை 5 மணி முதல் மீண்டும் பனிப்­பொ­ழிவு தொடங்கும் என்று அவர் தெரி­வித்தார். “இங்கு ஏற்­க­னவே ஐந்­தடி பனிப்­பொ­ழிவு ஏற்­பட்­டுள்­ளது. 10 நிமி­டங்­களில் நடந்து செல்லும் தூரத்­தைக்­க­டக்க தற்­போது 2 மணி நேரம் ஆகி­றது. காரை ஓட்­டிச்­செல்லும் பேச்­சுக்கே இட­மில்லை,”என்றார் அவர்.

“கடு­மை­யான பனிப்­பொ­ழிவு இருக்கும் என்­பதை நாங்கள் ஏற்­க­னவே அறிந்­தி­ருந்தோம். மேலும், முர்ரி வர வேண்டும் என்றால் ஞாயிறு அல்­லது திங்­கட்­கி­ழமை வரு­மாறு எங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் சுற்றுலாப் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் இப்போது கூட மக்கள் சுங்கச்சாவடிகளில் இருந்து நடந்து முர்ரிக்கு வர முயற்சிப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
நிவாரணப் பணிகளைப் பற்றிக் குறிப்பிட்ட காசிம், “எந்த இயந்திரங்கள் வேலை செய்தாலும், மண்வெட்டி மூலம் வேலை செய்பவர்களைக் கொண்டுவருவதுதான் ஒரே தீர்வு” என்றார்.

மூன்று வருடங்களுக்கு முன் இங்கு இதே போன்றதொரு நிலை ஏற்பட்டது. அப்போது நிறைய பனிப்பொழிவு ஏற்பட்டபோதிலும் முர்ரியில் ஒருவர் கூட இறக்கவில்லை என்று காசிம் கூறுகிறார். அப்போது வானிலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததாக அவர் கூறினார். முர்ரியில் பனிப்பொழிவில் இவ்வளவு பேர் இறந்தது இதுவே முதல் முறை என்றும் அவர் சொன்னார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.