பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?

0 721

ஏ.ஆர்.ஏ.பரீல்

‘இலங்­கைக்கு காதி நீதி­மன்­றங்கள் தேவை­யில்லை என்றே நான் கூறு­கிறேன். காதி நீதி­மன்­றங்கள் மூலம் பெண்­க­ளுக்கும், பிள்­ளை­க­ளுக்கும் நியாயம் கிடைப்­ப­தில்லை. எனக்கு தெரி­யா­மலே எனது கண­வ­ருக்கு விவா­க­ரத்து வழங்­கப்­பட்­டுள்­ளது. எமது நாட்­டுக்கு ஒரே சட்­டமே தேவை’ என கடந்த வாரம் பது­ளையில் இடம்­பெற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­ல­ணியின் அமர்வில் சாட்­சி­ய­ம­ளித்த பது­ளையைச் சேர்ந்த பெண்­மணி பஸீனா தெரி­வித்தார்.

இவ­ரது தந்தை ஒரு முஸ்லிம். தாயார் சிங்­க­ளவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பஸீனா தொடர்ந்தும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது;

‘நான் பஸீனா. எனது வயது 30. நான் முஸ்லிம் சம­யத்தின் அடிப்­ப­டை­யிலே திரு­மணம் செய்து கொண்டேன். என்­றாலும் நான் அறி­யா­மலே, எனக்குத் தெரி­யா­மலே எனது கண­வ­ருக்கு விவா­க­ரத்து வழங்­கப்­பட்­டுள்­ளது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்­கையை ஆதரிப்பவளாகவே நான் இருக்­கிறேன்.

இன்று முஸ்லிம் பெண்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­திகள் தொடர்பில் பேசு­வ­தற்கு எவ­ரு­மில்லை. எவ­ரி­ட­மா­வது இந்த அநீ­திகள் தொடர்பில் தெரி­வித்தால் அவர்கள் அதைப் பொருட்­ப­டுத்­து­வ­து­மில்லை.

பஸீனா

எனக்­கொரு மகள் இருக்­கிறாள். அவ­ளுக்கு வயது 8. நான் எல்லா இடங்­க­ளுக்கும் சென்று முறை­யிட்டேன். எனது கண­வ­ருக்கு விவா­க­ரத்து வழங்­கிய காதி ­நீ­திவான் எனது மக­ளுக்கு கொடுப்­ப­ன­வாக மாதம் 3 ஆயிரம் ரூபா பெற்றுத் தந்தார். என்னால் விவா­க­ரத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எனது கண­வ­ருக்கு மற்­று­மொரு பெண்­ணுடன் தொடர்பு இருக்­கி­றது என்று முறை­யிட்டேன்.

அந்தப் பெண்ணை அழைத்து பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தாக பதுளை காதி­நீ­திவான் தெரி­வித்தார். என்­னையும் அழைத்தார். காதி­நீ­திவான் அந்தப் பெண்ணை எனது கணவர் திரு­மணம் செய்­வ­தற்கு கடிதம் வழங்­கி­யுள்ளார்.

எனது மக­ளுக்கு தாப­ரிப்­பாக 3 ஆயிரம் ரூபா மாதாந்தம் எனது கண­வ­ரி­ட­மி­ருந்து பெற்­றுத்­தந்த காதி­நீ­திவான் எனது பொருட்கள் அனைத்­தையும் எனது கண­வ­ருக்கு என்­னி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொ­டுத்தார். எனது மகள் பால் அருந்தும் கோப்­பை­யைக்­கூட விட்டு வைக்­க­வில்லை. எனது பிரச்சினையின் பின்பு காதிநீதிமன்றம் பதுளையில் இல்லை. மூடப்­பட்டு விட்­டது.

பின்பு நான் கொழும்பு காதி­மேன்­மு­றை­யீட்டு மன்­றத்­துக்குச் சென்றேன். காதி மேன் முறை­யீட்­டு­மன்றம் என்னை நுவ­ரெ­லியா காதி­நீ­தி­மன்­றுக்கு அனுப்பி வைத்­தது. அங்கு எனது மக­ளுக்கு தாப­ரிப்புப் பண­மாக விதிக்­கப்­பட்­டி­ருந்த 3 ஆயிரம் ரூபாவை 5000 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டது. நான் எனக்கு நஷ்ட ஈடு கோரினேன். நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபா பெற்­றுத்­த­ரு­வ­தாக காதி­நீ­திவான் கூறினார். அவ்வளவுதான் அத்­துடன் முடிந்து விட்­டது என்றும் தெரி­வித்தார். அப்­ப­டி­யென்றால் எனது பெறு­மதி 50 ஆயிரம் ரூபாவா? என காதி நீதி­ப­தி­யிடம் கேட்டேன். இந்தப் பணத்­தினால் பால் மாடு ஒன்று வாங்கி அதன் மூலம் கூட என்னால் வாழ முடி­யா­தல்­லவா? என்றேன்.

விருப்­ப­மென்றால் 50 ஆயிரம் நஷ்ட ஈடு பெற்றுக் கொள்­ளுங்கள். இன்றேல் அது­வு­மில்லை என்றார். முஸ்லிம் சட்­டத்­துக்கு அமைய கண­வரால் வேறோர் பெண்னை திரு­மணம் செய்து கொள்ள முடியும் என்றும் என்­னிடம் தெரி­விக்­கப்­பட்­டது.

எனது கண­வ­ருக்கு வேறோர் பெண்­ணுடன் தொடர்­பி­ருப்­ப­தாக நான் காதி­நீ­தி­வா­னிடம் ஏற்­க­னவே கூறி­யி­ருந்தேன். அந்தப் பெண் பொலிஸ் விசா­ர­ணையின்போது முன்பு கண­வ­ருடன் தொடர்­பி­ருந்­தது, இப்­போது இல்லை என வாக்கு மூலம் அளித்­தி­ருந்தாள். இந்த விப­ரங்­க­ளையும் காதி­நீ­தி­ப­தி­யிடம் நான் கூறினேன். இவ்­வாறு கூறியும் நீதிவான் அந்தப் பெண்ணை எனது கணவர் விவாகம் செய்து கொள்­வ­தற்கு ஏற்­பாடு செய்­தி­ருக்­கிறார்.
பின்பு கொழும்­பி­லி­ருந்து வந்து என்னை சந்­தித்­தார்கள். பிள்­ளைக்கு மாதம் எவ்­வ­ளவு செல­வா­கி­றது என்று கேட்­டார்கள். மாதம் 15 ஆயிரம் ரூபா செல­வா­கி­றது என்று கூறினேன். இப்­போது ஒரு வரு­ட­கா­ல­மாக எனது பிள்­ளைக்கு எனது முன்னாள் கண­வரால் தாப­ரிப்பு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. இதன் பிறகே நான் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்தேன்.

எனது வீட்டுப் பொருட்கள் அனைத்­தையும் காதி­நீ­திவான் கண­வ­ருக்குப் பெற்றுக் கொடுத்தார். எனது அடை­யாள அட்­டை கூட இல்­லாது நான் திரும்பி வந்தேன்.
எனது கண­வரின் வீட்­டுக்கு முன்­னாலே அவர் திரு­மணம் செய்து கொண்­டுள்ள பெண்ணின் வீடு இருக்­கி­றது. அங்கு சென்று கண­வ­ருடன் வாழு­மாறு பதுளை காதி நீதிவான் எனக்கு கூறினார். நான் முடி­யாது என்றேன்.

காதி­நீ­தி­வா­னிடம் நான் நீதி வேண்­டிய போது அவர் என்­னிடம் விவா­க­ரத்து சான்­றி­த­ழையே தந்தார். நான் அது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அனைத்து தரப்­பி­ன­ருக்கும் முறை­யிட்டேன். ஆனால் எனக்கு இது­வரை நீதி கிடைக்­க­வில்லை.

நான் காதி­நீ­தி­மன்­றத்தை அவ­ம­தித்­த­தாக காதி­நீ­திவான் பொலிஸில் முறை­யிட்டார். அவ­மா­னப்­ப­டுத்­த­வில்லை, இழைக்கப்பட்ட அநீ­திக்­கா­கவே அவள் போரா­டு­கிறாள் என்று பொலிஸார் காதி­நீ­தி­வா­னிடம் தெரி­வித்­தார்கள். நான் காதி­நீ­தி­மன்றை வீடியோ பண்­ணி­ய­தா­கவே முறை­ப்பாடு செய்­யப்­பட்­டது. பதுளை காதி­நீ­தி­வா­னிடம் பல தட­வைகள் நான் மகளின் தாப­ரிப்பு பணத்தை அதி­க­ரித்துத் தரு­மாறு கோரினேன். அவர் அதி­க­ரிக்­கா­த­தி­னாலே நான் வீடியோ பதிவு செய்து ஊட­கங்­க­ளுக்கு வழங்­கினேன்.
எனது முன்னாள் கணவர் ஒரு வரு­ட­கா­ல­மாக எனது பிள்­ளைக்கு ஒரு சதம் கூட தரு­வ­தில்லை. பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாது­காப்­புப்­பி­ரி­வுக்குச் சென்று முறை­யி­டு­வ­தற்கு கடி­த­மொன்று கோரி­னாலும் காதி­நீ­திவான் தரு­வ­தில்லை.

இலங்­கைக்கு காதி­நீ­தி­மன்ற முறைமை தேவை­யில்லை என்றே நான் கூறு­கிறேன். காதி­நீதி மன்­றங்கள் மூலம் பெண்­க­ளுக்கும் பிள்­ளை­க­ளுக்கும் நியாயம் கிடைப்­ப­தில்லை. பாதிக்­கப்­பட்ட பல பெண்கள் இருக்­கி­றார்கள். அவர்கள் தானாக முன்­வந்து பேசு­வ­தற்குப் பயப்­ப­டு­கி­றார்கள்.

காதி­நீ­தி­மன்றில் ஓய்வு பெற்ற அதி­பரே நீதி­வா­னாக இருக்­கிறார். அவர்கள் அனு­பவம் இல்­லா­த­வர்கள். இவர்­களால் தான் குடும்­ப­வாழ்க்கை சீர­ழிக்­கப்­ப­டு­கி­றது.
நான் இப்­போது தந்­தை­யு­டனே தங்­கி­யி­ருக்­கிறேன். விவா­க­ரத்து பத்­தி­ரத்தில் நான் கையொப்­ப­மிட்­டில்லை. எனது கணவர் நான் அவரை சந்­தே­கிப்­ப­தாக முறை­யிட்டே விவா­க­ரத்து பெற்­றுள்ளார். அவர் ஒரு பெண்­ணுடன் தொடர்பில் இருந்­த­த­னாலே சந்­தேகம் கொண்­டி­ருந்தேன்.

இவ­ரது தொடர்பு பற்றி பொலிஸில் நான் முறை­யிட்ட போது அவர் தனது பெற்­றோரின் விருப்பம் கார­ண­மா­கவே என்னைத் திரு­மணம் செய்­த­தா­கவும், தற்­போது அவர் விரும்­பிய பெண்ணை திரு­மணம் செய்­துள்­ள­தா­கவும் வாக்­கு­மூலம் வழங்­கி­யி­ருந்தார். இத­னையே காதி­நீ­தி­மன்­றிலும் கூறினார்.

இவர்கள் பெண்­களின் வாழ்க்­கை­யுடன் விளை­யா­டு­கி­றார்கள். எனது கணவர் என்னை தலாக் செய்து விட்­ட­தாகக் கூறப்­பட்­டது. தலாக் கூறப்­பட்­டது எனக்குத் தெரி­யாது. எனது தந்தை முஸ்லிம், தாயார் சிங்­களம். தாயார் தற்­போது உயி­ருடன் இல்லை.
நான் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­த­தை­ய­டுத்து என்­னிடம் பலர் வந்து முறை­யிட்­டார்கள். நான் இன­வா­தத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­கவும், சிங்­க­ள­வர்­க­ளிடம் பணம் பெற்­றுக்­கொண்டு இவ்­வாறு செயற்­ப­டு­வ­தா­கவும் கூறி­னார்கள்.

பதுளை காதி­நீ­திவான் பணம் பெற்­றுக்­கொண்டு கண­வரின் பக்க சார்­பாக செயற்­பட்­டவர். எனது இந்தப் பிரச்­சி­னையின் பின்பு பதுளை காதி­நீ­தி­மன்றம் மூடப்­பட்­டுள்­ளது. இப்­போது பது­ளையில் காதி­நீ­தி­மன்றம் இல்லை. பின்பு பதுளை வழக்­குகள் நுவ­ரெ­லி­யா­விலே விசா­ரிக்­கப்­பட்­டன. பின் அங்­கி­ருந்து பலாங்­கொ­டைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

நான் ஒரு வருட கால­மாக காதி நீதி­மன்றம் செல்­ல­வில்லை. சென்­றாலும் என்­னையும் எனது கைப் பையையும் சோத­னை­யிட்­டதன் பின்பே அனு­ம­திப்­பார்கள். ஆனால் ஏனை­ய­வர்கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.

எனது பிள்­ளைக்கு உரிய நீதி கிடைக்­க­வில்லை. எனது கணவர் மீண்டும் எனக்கு வேண்­டு­மென வழக்கு தாக்கல் செய்ய முடியும் என காதி­மேன்­மு­றை­யீட்டு மன்றில் தெரி­வித்­தார்கள். ஆனால் அவர் இன்­னொரு பெண்­ணுடன் இருக்­கும்­போது என்னால் எப்­படி வாழ முடியும்? அவர் என்­னுடன் உண்­மை­யாக இருப்­பாரா? அவரின் சொத்­து­களில் அரை­வா­சியை எனது பிள்­ளைக்கு பெற்றுத் தரு­மாறும் கோரினேன். காதி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் கடி­த­மொன்று தந்­தார்கள். அதை காதி­நீ­தி­மன்றில் பார்­வை­யி­டு­வதும் இல்லை.
ஆண்கள் 4 பெண்­களை திரு­மணம் செய்து கொள்ள முடியும். நால்­வ­ரையும் சம­மாக நடத்த வேண்­டு­மெனக் கூறப்­ப­டு­கி­றது. ஆனால் இது நடை­மு­றையில் இல்லை. அவர்கள் தாம் நினைத்­த­வாறு செயற்­ப­டு­கி­றார்கள்.’ என்றார்.

காதி நீதி­வான்கள் போரத்தின் விளக்கம்
பது­ளையைச் சேர்ந்த பஸீனா கடந்த வாரம் பது­ளையில் இடம்­பெற்ற ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் அமர்வில் அளித்த வாக்­கு­மூலம் தொடர்பில் விடி­வெள்ளி காதி­நீ­தி­வான்கள் போரத்தின் பிரதித் தலை­வரும் பதுளை காதி நீதி­மன்றின் பதில் நீதி­வா­னு­மான எம்.இப்ஹாம் யெஹ்­யாவைத் தொடர்பு கொண்டு வின­வி­யது, அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார்.

சம்­பந்­தப்­பட்ட பெண் ஏ.ஜே.பஸீனா. அவ­ளது முன்னாள் கணவர் எம்.சமீம் எம்.ஜனீர். இவர்­க­ளது திரு­மணம் 2013.05.19இல் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. மஹ­ராக 10 ஆயிரம் ரூபா வழங்­கப்­பட்­டுள்­ளது. கைக்­கூலி வழங்­கப்­ப­ட­வில்லை. இப்பெண் தான் 10 வயதில் திரு­மணம் செய்து வைக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் விவாக அத்­தாட்சிப் பத்­தி­ரத்­தின்­படி அவள் 22 வய­திலே திரு­மணம் செய்­துள்ளார்.
பஸீ­னாவை தலாக் கூறு­வ­தற்கு 2018 ஆம் ஆண்­டிலே கண­வ­ரினால் பதுளை காதி­நீ­தி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. பஸீனா வழக்கு விசா­ர­ணை­களில் சில­வற்­றுக்கே சமுக­ம­ளித்­துள்ளார். ஏனைய விசா­ர­ணைகளுக்கு சமூ­க­ம­ளிக்­காது விட்டால் அறி­வித்தல் ஒன்று அனுப்பி விட்டு தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு காதி நீதி­வா­னுக்கு அதி­கா­ர­மி­ருக்­கி­றது. விவா­க­ரத்து அத்­தாட்சிப் பத்­தி­ரத்தில் கட்­டாயம் மனை­வியின் கையொப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்­றில்லை.

பஸீனா காதி மேன்­மு­றை­யீட்டு மன்­றுக்கு சென்று முறை­யிட்­ட­தாக வழங்­கிய வாக்­கு­மூலம் பிழை­யா­ன­தாகும். அவர் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­விலே முறை­யிட்­டுள்ளார். அதனையடுத்தே நுவ­ரெ­லியா காதி­நீ­திவான் விஷேட காதி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

பிள்ளை தாப­ரிப்பு வழக்கு பதுளை காதி­நீ­தி­மன்றில் CM336 எனும் இலக்­கத்தின் கீழ் 2018இல் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ழக்கே பின்பு நுவ­ரெ­லியா காதி­நீ­தி­மன்­றுக்கு மாற்­றப்­பட்­டது.

பிள்ளை தாப­ரிப்பு வழக்கு பதுளை காதி­நீ­தி­மன்­றி­லி­ருந்து நுவ­ரெ­லியா காதி­நீ­தி­மன்­றுக்கு மாற்­றப்­பட்­டி­ருந்த வேளையில் காதி­நீ­தி­ப­திகள் போரத்தின் குழு­வொன்று நுவ­ரெ­லியா காதி­நீ­தி­மன்­றுக்கு விஜயம் செய்­தது. அந்­தக்­கு­ழுவில் நானும் அடங்­கி­யி­ருந்தேன். இவ்­வி­ஜயம் 2020 செப்­டெம்­பரில் இடம்­பெற்­றது.

அப்­போது பஸீ­னாவும், அவ­ளது முன்னாள் கண­வரும், பஸீ­னாவின் தந்­தையும் அழைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அவர்­க­ளுக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. அவர்­க­ளது பிரச்­சினை தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டது. பிள்ளை தாப­ரிப்பு நிலுவை 60 ஆயிரம் ரூபா நுவரெலியா காதி நீதிமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

பஸீனாவின் முன்னாள் கணவர் தனது பிள்ளைக்கு தாபரிப்பு வழங்காதிருந்தால் நுவரெலியா காதி நீதிமன்றுக்கு சென்று மனு கொடுத்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் தொடர்பில் அறி­வின்­மையும் ஒரு சிலரால் பஸீனா தவ­றாக நெறிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­மை­யுமே இவ்­வா­றான வாக்­கு­மூலம் வழங்­கு­வ­தற்கு கார­ணமாய் அமைந்­துள்­ளன.

தற்­போது பதுளை காதி நீதி­மன்­றத்தின் பதில் காதி­நீ­தி­வா­னாக நானே கட­மை­யாற்­று­கிறேன். குறிப்­பிட்ட பெண் என்னைச் சந்­தித்து தீர்­வுகள் பெற்­றுக்­கொள்ள முடியும். தவ­றான வழி நடத்­தல்­க­ளினால் காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்­பையே விமர்­சிப்­பது தவ­றாகும்.
பதுளை காதி­நீ­தி­மன்றம் மூடப்­பட்­டுள்­ளது என பஸீனா வாக்­கு மூ­ல­ம­ளித்­துள்­ளமை தவ­றாகும். பதுளை காதி­நீதி மன்றம் மூடப்­ப­ட­வில்லை. இரத்­தி­ன­புரி காதி­நீ­தி­வா­னான நான் தற்­போது பது­ளையின் பதில் காதி­நீ­தி­ப­தி­யாகக் கட­மை­யாற்­று­கிறேன்.
குறிப்­பிட்ட பெண் தனது பிள்­ளைக்­கான தாப­ரிப்பு நிலுவையாக இருப்பின் நுவரெலியா காதிநீதிமன்றத்தைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.