ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்கிறார் ஜயசுமான

0 514

இரா­ஜாங்க அமைச்சர் சன்ன ஜய­சு­மா­ன­வுக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கும் இடையில் சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

1979 ஆம் ஆண்டு உலமா சபை வெளி­யிட்­ட­தாக கூறப்­படும் பத்வா ஒன்று தொடர்பில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணிக்கும் நீதி­ய­மைச்­ச­ருக்கும் இரா­ஜாங்க அமைச்சர் சன்ன ஜய­சு­மான எழு­திய கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த விட­யங்கள் குறித்து தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இச்சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

மேற்­படி விடயம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தி, உலமா சபை இரா­ஜாங்க அமைச்சர் சன்ன ஜய­சு­மா­ன­வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­தி­ருந்­தது. இதற்­க­மை­வா­கவே விரைவில் இச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே­வேளை உலமா சபை இரா­ஜாங்க அமைச்சர் சன்ன ஜய­சு­மா­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

42 வரு­டங்­க­ளுக்கு முன்­பாக அன்­றைய ஜம்­இய்­யத்துல் உல­மா­வினால் விடுக்­கப்­பட்ட, சட்ட ரீதி­யாக பிழை­யான மார்க்க கருத்­து­ரை­யொன்று தொடர்பில் நீதி அமைச்­ச­ருக்கு முறைப்­பாடு செய்து அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடிதம் தொடர்பில் ஆழ்ந்த கவ­லை­ய­டை­கிறோம். ஒரு பொறுப்­புள்ள கல்­வி­மா­னாக, இவ்­வி­ட­யத்தை மூன்றாம் தரப்­புக்கு எடுத்­து­ரைப்­பதை விட, முஸ்லிம் அறி­ஞர்­களைக் கொண்ட, இலங்­கையில் நன்கு அறி­மு­க­மான நிறு­வ­ன­மான அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­விடம் இது தொடர்­பான தெளி­வு­களை பெற்­றி­ருக்­கலாம்.

42 வரு­டங்­க­ளுக்கு முன்பு ‘அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வா­னது மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்­கான சட்­டத்­துக்கு புறம்­பான தீர்ப்­பொன்றை வழங்கி உள்­ளது’ என்ற உங்­க­ளது குற்­றச்­சாட்டு, திட்­ட­வட்­ட­மான பொய்­யா­ன­தா­கவும், பார­தூ­ர­மான விஷமம் நிறைந்­ததும், முன்­னைய காலத்தில் இலங்கை முஸ்­லிம்­களால் நன்கு மதிக்­கப்­பட்ட அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் மூத்த, பிர­ப­ல­மான அறி­ஞர்­களை இழி­வு­ப­டுத்­து­வ­தா­கவும் உள்ள கருத்­தாக அமைந்­துள்­ளது.

பேரா­சி­ரியர் அவர்கள் தீய சக்­தி­க­ளினால் வழி­ந­டாத்­த­ப­டு­வ­தி­லி­ருந்து தன்னை காத்து, எம்முடன் சுமுகமான கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தருமாறு அன்பாக அழைப்புவிடுக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.