அரபுக் கல்லூரிகள் வழங்கும் ஆவணங்கள் அரச கரும மொழிகளில் அமைய வேண்டும்

டிப்ளோமா, டிகிரி என்ற வாசகங்களை தவிர்க்குமாறும் வலியுறுத்துகிறது திணைக்களம்

0 463

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அரபுக் கல்­லூ­ரி­க­ளினால் வழங்­கப்­படும் ஆவ­ணங்கள் இலங்­கையின் அர­ச­க­ரும மொழி­க­ளான சிங்­களம், தமிழ் அல்­லது ஆங்­கி­லத்தில் அமையப் பெற்­றி­ருக்க வேண்­டு­மென முஸ்லிம் சம­ய­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அர­புக்­கல்­லூ­ரி­களின் நிர்­வா­கங்­களை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

மேலும் Diploma, Higher Diploma, Higher Studies, Higher Education, Degree, Licentiate போன்ற வாச­கங்கள் இலங்கை பல்­க­லைக்­க­ழ­கங்கள் மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் அங்­கீ­கா­ரத்தின் அடிப்­ப­டையில் மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதால் , குறிப்­பிட்ட வாச­கங்கள் மத்­ர­ஸா­வினால் வழங்­கப்­படும் ஆவ­ணங்­களில் உள்­ள­டங்­கப்­ப­டு­வது தவிர்க்­கப்­பட வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்­ளது.

இது தொடர்பில் முஸ­்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்கு MRCA/R/08/01/01 எனும்­இ­லக்க சுற்று நிருபம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.

சுற்­று­நி­ரு­பத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள அர­புக்­கல்­லூ­ரி­க­ளினால் வழங்­கப்­படும் ஆவ­ணங்கள் உரிய விதி­மு­றை­க­ளுக்கு உட்­ப­டா­விட்டால் திணைக்­க­ளத்­தினால் அவ் ஆவ­ணங்கள் மற்றும் சான்­றி­தழ்கள், கல்விச் சான்­றி­தழ்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட மாட்­டாது.

கல்­லூ­ரி­யினால் வழங்­கப்­படும் சான்­றி­தழ்­களில் ஒப்­ப­மி­டு­ப­வர்கள் தொடர்­பான பெயர், பதவி மற்றும் மாதிரி ஒப்­பங்கள் திணைக்­க­ளத்­திற்கு வழங்­கப்­பட வேண்டும். மாற்­றங்கள் ஏற்­படும் போது அவ்­வவ்­போது அறி­விக்க வேண்டும்.

கல்­லூ­ரி­யினால் தயா­ரிக்­கப்­படும் சான்­றி­தழ்­களின் பிரதி ஒன்­றினை மாதிரி சான்­றிதழ் எனக் குறிப்­பிட்டு திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சான்­றி­தழ்­களின் மாதி­ரிகள் மாற்­றப்­ப­டு­மாயின் திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்க வேண்டும்.
கல்­லூ­ரிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டது தொடக்கம் 2021ஆம் ஆண்­டு­வரை பட்டம் பெற்­ற­வர்­களின் முழுப்­பெயர், முக­வரி, தேசிய அடை­யாள அட்டை இலக்கம் போன்ற தக­வல்கள் ஆண்டின் அடிப்­ப­டையில் கல்­லூ­ரி­யினால் சான்று படுத்தி திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­படல் வேண்டும்.

கல்­லூ­ரி­யினால் வழங்­கப்­படும் பட்­டத்தின் தன்மை சான்­றி­தழில் (மௌலவி சான்­றிதழ்/ ஹிப்லு சான்­றிதழ்) என்று தெளி­வாக குறிப்­பி­டப்­படல் வேண்டும்.
கல்லூரியில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் பிரதியொன்று திணைக்களத்திற்கு வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதாக பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.