தலைவலிக்கு தலையணை மாற்றும் தீர்மானங்கள்

0 531

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி நிலை கைமீறிச் சென்று கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அதி­லி­ருந்து மீள்­வ­தற்­கான வழி­களைத் தோடாது மேலும் மேலும் நாட்டை சிக்­க­லுக்குள் தள்­ளு­கின்ற செயற்­பா­டு­க­ளையே அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

நாட்டின் அந்­நியச் செலா­வணி கையி­ருப்பை அதி­க­ரிக்­கிறோம் என்ற போர்­வையில் வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து தினம் தினம் அர­சாங்கம் ஆயிரக் கணக்­கான மில்­லியன் டொலர்­களைக் கட­னாகப் பெற்று வரு­கி­றது. அது மாத்­தி­ர­மன்றி வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து கட­னு­த­வியைப் பெற்றுக் கொள்­வ­தற்­கென்றே தனி­யான அமைச்சர் ஒரு­வரை நிய­மிக்­க­வுள்­ள­தா­கவும் அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது. அதா­வது நாட்டின் கடன் சுமையை அதி­க­ரிப்­ப­தற்­கென்றே ஒரு தனி­யான அமைச்­சரை நிய­மிக்­கின்ற ஒரே நாடு இலங்­கை­யா­கவே இருக்க முடியும்.

இன்று இந்த அர­சாங்­கத்தின் பெரும்­பா­லான அமைச்­சர்­க­ளையும் உய­ர­தி­கா­ரி­க­ளையும் அரபு நாடு­க­ளி­லேயே காண முடி­கி­றது. இது­வரை காலமும் அரபு நாடு­களை எதி­ரி­யாகக் காண்­பித்து நாட்டில் அர­சியல் செய்­த­வர்கள், இன்று அதே அரபு நாடு­க­ளுக்குச் சென்று கடன் கேட்டு அலை­வதன் மூலம் அவர்­க­ளது போலி வேஷம் கலைந்­துள்­ளது. நாட்டில் இன­வா­தத்தை வளர்த்­த­வர்கள் இன்று கட்­டா­ருக்குச் சென்று தம்­மையும் முஸ்­லிம்கள் போன்று நடித்துக் கடன் கேட்­ப­தாக எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச இத­னையே எள்ளி நகை­யா­டி­யுள்ளார்.

இந்த அர­சாங்கம் வீட்­டுக்குச் சென்­றாலும் இந்த நாட்டில் வாழு­கின்ற மக்­களே இந்தப் பெருந்­தொகை கடன்­களை தலை­முறை தலை­மு­றை­யாக மீளச் செலுத்தப் போகி­றார்கள் என்­பதை நாம் மறந்­து­விடக் கூடாது.

அர­சாங்­கத்தின் தவ­றான பொரு­ளா­தார முகா­மைத்­து­வத்­தினால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்­கின்ற நிலையில் அதனைத் தணிப்­ப­தற்­காக நிதி­ய­மைச்சர் பசில் ராஜ­பக்ச, சில அதி­ரடி நிவா­ரணத் திட்­டங்­களை இர­வோ­டி­ர­வாக அறி­வித்­தி­ருக்­கிறார். இதன் மூலம் அர­சாங்க ஊழி­யர்கள் சுமார் 14.5 இலட்சம் பேருக்கு மாதாந்தம் சம்­ப­ளத்­திற்கு மேல­தி­க­மாக 5000 ரூபா வழங்­கப்­படும் என்றும் ஓய்­வூ­தியம் பெறும் 666,480 பேருக்கு ஓய்­வூ­திய கொடுப்­ப­ன­விற்கு மேல­தி­க­மாக மாதாந்தம் 5,000 ரூபா வழங்­கப்­படும் என்றும் வறுமைக் கோட்­டிற்கு கீழ் வாழும் மக்­க­ளுக்­காக சமுர்த்தி திட்­டத்தின் கீழ் வழங்­கப்­படும் 3,500 ரூபா கொடுப்­ப­ன­விற்கு மேல­தி­க­மாக 1,000 ரூபா வழங்­கப்­படும் என்றும் அவர் அறி­வித்­தி­ருக்­கிறார்.

மக்கள் பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டியில் சிக்­கி­யுள்ள நிலையில் இந்த நிவா­ரணத் திட்டம் வர­வேற்­கப்­பட வேண்­டி­யது என்ற போதிலும் இதற்­கான நிதியை எவ்­வாறு பெற்றுக் கொள்ளப் போகி­றார்கள் என்­பதே இங்­குள்ள கேள்­வி­யாகும். நிதி­ய­மைச்சர் அறி­வித்­துள்ள இவ்­வ­ளவு நிவா­ர­ணங்­க­ளையும் வழங்­கு­வ­தற்கு 1 பில்­லியன் அமெ­ரிக்க டொலர், அதா­வது 229 பில்­லியன் ரூபா பணம் தேவை. ஒன்றில் வெளி­நா­டு­க­ளிடம் கடன்­பெற்று இதனை வழங்க வேண்டும் அல்­லது பணத்தை அச்­சிட வேண்டும். இவ்­வ­ளவு பெருந்­தொகைப் பணத்தை அச்­சி­டு­வது பண­வீக்­கத்தை அதி­க­ரிப்­ப­துடன் டொல­ருக்கு எதி­ரான இலங்கை நாண­யத்தின் பெறு­ம­தி­யையும் வலு­வி­ழக்கச் செய்யும் என பொரு­ளா­தார நிபு­ணர்கள் விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ளனர்.

“தற்­கா­லிக நிவா­ர­ணத்தை வழங்கி, நீண்ட கால அடிப்­ப­டையில் மக்­களின் வாழ்­வி­யலை நிலை­யற்­ற­தாக்கும் முயற்­சியே இது” என கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் பொரு­ளியல் துறை விரி­வு­ரை­யாளர் எம்.கணே­ஷ­மூர்த்தி தெரி­வித்­துள்ளார்.

“அர­சாங்­கத்தின் வரு­மானம் மிக மிக குறை­வான மட்­டத்தில் சென்­று­கொண்­டி­ருக்கும் இந்த தரு­ணத்தில், இப்­ப­டி­யான ஒரு நிவா­ரண அறி­விப்பு பொருத்­த­மற்­றது. சரிந்­து­கொண்டு செல்லும் தமது செல்­வாக்கைத் தக்க வைத்­துக்­கொள்ளும் முயற்­சி­யாக பார்க்­கக்­கூ­டி­ய­தாக இது இருந்­தாலும், இது நடை­முறைச் சாத்­தி­ய­மற்ற முயற்­சி­யாகும். காசு கிடைப்­பதை எண்ணி மக்கள் சந்­தோ­ஷப்­ப­டலாம். ஆனால் பொரு­ளா­தாரம் என்று பார்க்கும் போது, அது மிக மோச­மா­ன­தாக இருக்கும். ஒரு பில்­லியன் டொலரை ஏதா­வது ஒரு நாடு அன்­ப­ளிப்­பாக வழங்­கு­மாக இருந்தால், அதை இப்­படிச் செல­வி­டு­வது பர­வா­யில்லை. ஆனால், கடனைப் பெற்றோ அல்­லது பணத்தை அச்­சிட்டோ இவ்­வா­றான நிவா­ர­ணத்தை வழங்கும் போது அது எந்­த­வித பல­னையும் ஏற்­ப­டுத்­தாது” என்றும் அவர் சுட்­டிக்­காட்­டு­கிறார்.

எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பொரு­ளா­தார நிபு­ண­ரு­மான கலா­நிதி ஹர்ஷ டி சில்­வாவும் அர­சாங்­கத்தின் இந்த நகர்வை கடு­மை­யாக விமர்­சித்­துள்ளார். “ 2019 இல் வரி­களைத் தள்­ளு­படி செய்­த­மையும் உரப் பயன்­பாட்டைத் தடை செய்­த­மையும் இந்த அர­சாங்கம் எடுத்த மிகத் தவ­றான முடி­வு­க­ளாகும். இன்று அதன் விளை­வு­க­ளையே நாம் அதி­க­ரிக்­கிறோம். இந்த அர­சாங்கம் பொரு­ளா­தார விட­யத்தில் ஒட்­டு­மொத்த தோல்­வியைச் சந்­தித்­து­விட்­டது. அதி­லி­ருந்து மீளவே முடி­யாது. நாடு பாரிய அனர்த்தம் ஒன்றை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது” என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
துர­திஷ்­ட­வ­ச­மாக, அர­சாங்கம் இந்த நெருக்­க­டி­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­க­ளை­வி­டுத்து தொடர்ந்து தவ­றுக்கு மேல் தவ­று­க­ளையே இழைத்துக் கொண்டிருக்கிறது. அதுமாத்திரமன்றி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையிலான அரசியல் தீர்மானங்களையும் தினம் தினம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது உள்ளக அரசியல் பிரச்சினைகளைத் தோற்றுவித்து முட்டி மோதிக் கொள்கின்ற நேரமல்ல. மாறாக சகலரும் இணைந்து நாட்டைப் பாதுகாப்பது எப்படி என்பது பற்றிச் சிந்தித்து செயற்படுவதற்கான நேரம். ஆனால் ஜனாதிபதியினதோ அல்லது அவரது சகோதரர்களினதோ தீர்மானங்களும் நடவடிக்கைகளும் நாட்டை மேலும் ஸ்திரமின்மையை நோக்கித் தள்ளுவதே கவலை தருவதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.