இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவு

அபிவிருத்திக்கான சவூதி நிதியம் உறுதியளிப்பு

0 337

இலங்­கையின் அபி­வி­ருத்தி முயற்­சி­க­ளுக்கு தொடர்ந்து ஆத­ர­வ­ளிப்­ப­தாக அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதியம் உறு­தி­ய­ளித்­துள்­ளது.

அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதி­யத்தின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி சுல்தான் அப்­துல்­ரஹ்மான் அல்-­மர்ஷாட் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷவை நேற்று அலரி மாளி­கையில் சந்­தித்தார்.

இதன்­போதே அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதி­யத்தின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி சுல்தான் அப்­துல்­ரஹ்மான் அல் மர்ஷாட் இவ்­வாறு உறு­தி­ய­ளித்தார்.

இலங்­கையின் அபி­வி­ருத்தி திட்­டங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்கு சவூதி அரேபிய அர­சாங்கம் மற்றும் அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதியம் வழங்­கி­வரும் நெருக்­க­மான ஒத்­து­ழைப்பை நினை­வு­கூர்ந்த பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, இரு­நாட்டு அர­சாங்­கங்­க­ளுக்கும் இடையே தொடர்ச்­சி­யாக காணப்­படும் ஒத்­து­ழைப்­பிற்கும், நட்­பிற்கும் நன்­றி­யையும் தெரி­வித்தார்.

அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதி­யத்தின் ஆத­ர­வுடன் இந்­நாட்டின் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் 1981ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டன. அன்று முதல் கடந்த நான்கு தசாப்த காலங்­க­ளாக இந்­நாட்டின் பல அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்கு இந்­நி­தியம் பங்­க­ளிப்பு செய்­துள்­ளது.

எதிர்­கால முன்­னு­ரிமை குறித்து கவனம் செலுத்­து­கையில் குறிப்­பாக கிரா­மிய பிர­தே­சங்­களின் சிறு நீர்ப்­பா­சனம், கிரா­மிய நீர் வழங்கல் மற்றும் எதிர்­கால வீதி அபி­வி­ருத்தி தொடர்­பான திட்­டங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதிநிதிகளிடம் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.