அபூர்வ நோய்க்கு ஆளான அஸ்லா! தடைகளைத் தாண்டி வென்ற மகள்!!

0 701

வாழ்க்­கையில் தான் அனு­ப­வித்த வலி­க­ளுக்கு மட்­டு­மல்ல, பிற­ரது வலி­க­ளுக்கும் மருந்து போடப் போகிறார் இந்த இளம்பெண் பாத்­திமா அஸ்லா.

திருமணத்தின்போது…

அஸ்­லாவின் வாழ்வில் இரண்டு முக்­கிய தரு­ணங்கள் சமீ­பத்தில் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன. ஒன்று அவர் ஹோமியோ மருத்­துவ பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­பது. அடுத்­தது தன்னை நேசிக்கும் ஒரு­வரைக் கரம் பற்­றி­யி­ருப்­பது.

இந்­தி­யாவின் கேர­ளாவைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட பாத்­திமா அஸ்­லா­விற்கு இலத்­தி­ர­னியல் சக்­கர நாற்­கா­லி­யையே மஹ­ராக கொடுத்து தனது வாழ்க்கை துணை­யாக ஆக்­கிக்­கொண்­டுள்ளார் லட்­சத்­தீவை சேர்ந்த ஃபிரோஸ்.

எனது வாழ்க்­கையின் முக்­கி­ய­மான ஒரு பாக­மாக இருக்கும் “சக்­கர நாற்­கா­லியை ” மஹ­ராக தந்து என்னை நிக்காஹ் செய்வார் என நான் எதிர்­பார்க்­க­வில்லை, ஆனால் எனக்கு இப்­படி நடக்­குமா என ஏங்­கி­ய­துண்டு என்­கிறார் பாத்­திமா அஸ்லா.

தனக்கு ஏற்­பட்ட அபூர்­வ­மான நோய்­களால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அதை­யெல்லாம் கண்டு மனம் தள­ராமல் ஹோமியோ டாக்­ட­ரா­கவும் ஒரு எழுத்­தா­ள­ரா­கவும் உயர்ந்து நிற்­கிறார் அஸ்லா, அவ­ருக்கு மிகவும் மன தைரி­யத்தை ஏற்­ப­டுத்தி கொடுத்­துள்­ளார்கள் அஸ்­லாவின் பெற்­றோர்­க­ளான அப்­துல்­நா­சரும் ஆமி­னாவும்.

சக்­கர நாற்­கா­லியை மஹ­ராக கொடுத்து நிக்காஹ் செய்­தவர் உல­கி­லேயே ஃபிரோ­ஸாக ஒரு­வேளை இருக்­கலாம் . ஆனால் அதனை விட ஒரு நல்ல மாற்­றத்­திற்கு நாங்கள் முதல் ஆரம்­ப­மாக இருப்போம் என்­ப­தி­லேயே எங்கள் இரு­வ­ருக்கும் அதிக சந்­தோ­ச­முள்­ளது என்­கி­றார்கள் இந்த இளம் தம்­ப­திகள்.

அஸ்­லாவின் கதை
கேரளா, தாம­ரை­சேரி அருகே தேக்­குத்­தோட்டம் பகு­தியைச் சேர்ந்த அப்துல் நாசர் – ஆமினா தம்­ப­தியின் மகள்தான் இந்தப் பாத்­திமா அஸ்லா. சின்­னப்­பாத்து என்­பது அவ­ளது செல்லப் பெயர்.

பிறந்து விழுந்­ததே, எலும்பு ஒடிதல் என்னும் அபூர்வ நோயுடன். பிறந்த மூன்­றா­வது நாளில் தொடை எலும்பு முறிந்­த­போ­துதான் பெற்­றோர்கள் இதை அறிந்து அதிர்ந்து போயினர்.

பச்சைக் குழந்­தையை என்ன செய்ய முடியும்? தொட்டால் உடை­யுமோ என்­கிற பயத்­தி­லேயே அந்தப் பிஞ்சு உடலைப் பார்த்துப் பரி­த­வித்த பெற்­றோர்கள், வரும் வரை வரட்டும் என வைராக்­கி­யத்­தோடு அவளை வளர்க்கத் துவங்­கினர்.

ஐந்து வயது வரை­யிலும் சம வயதுக் குழந்­தை­க­ளோடு ஓடி­யாடி விளை­யாட வேண்­டி­யவள், அது இய­லாத நிலையில், வீட்டுத் திண்­ணையில் எங்கோ வெறித்­த­படி பார்த்து உட்­கார்ந்­தி­ருக்கும் சின்னப் பாத்­துவை பார்த்து அழு­வதைத் தவிர அவ­ளது பெற்­றோ­ருக்கு வேறு வழியும் தெரி­ய­வில்லை.

அதி­லி­ருந்து விடு­ப­டவே அவளை இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள பள்­ளியில் சேர்த்து விட்­டனர். இரண்டு வேளையும் குழந்­தையை பள்­ளிக்கும் வீட்­டுக்கும் சுமந்தே நடந்தாள் அவ­ளது தாய்.

இதற்­கி­டையில், பல முறை விழு­வதும் கை கால் எலும்பு உடை­வதும் கட்டுப் போடு­வ­து­மாக வலி­க­ளையும் நாட்­க­ளையும் கடத்­தினாள் அஸ்லா. குழந்தை ஓர­ளவு வளர்ந்த நிலையில், தாயின் சிர­மத்தைக் கண்ட தன்­னார்வ அமைப்பு ஒன்று அவ­ளுக்கு சக்­கர நாற்­காலி வாங்­கிக்­கொ­டுத்து உத­வி­யது. ஏழா­வது படித்­த­போது ஒரு முறை விழுந்து கால் ஒடிய, கோழிக்­கோடு மருத்­துவ கல்­லூ­ரியில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தாள் அஸ்லா.
தனக்கு சிகிச்­சை­ய­ளித்த டாக்டர் ராஜூ, `நீயும் என்னை மாதிரி டாக்டர் ஆகணும். பல பேருக்கு வைத்­தியம் பாக்­கணும், சரியா..?’ எனச் சொன்ன ஆசை வார்த்­தை­களை மனதில் பத்­தி­ரப்­ப­டுத்­தினாள் அஸ்லா. அதன் பிறகும் பல முறை விழ, எலும்பு உடைய … வலியும் நர­க­மு­மாக அவ­ளது வாழ்க்கை நகர்ந்­தது.

அலோ­பதி வைத்­தி­யமும் மாவுக்­கட்டும் சலித்­த­போது உடைந்த ஒரு கையில் கட்டுப் போட ஆயுர்­வே­தத்தை நாடினர் பெற்­றோர்கள். அப்­போது கடு­மை­யான வலியால் மறு­கையால் தடுக்க, அந்தக் கையே உடைந்து போனது. இப்­ப­டி­யாக எத்­தனை முறை உடைந்­தது என்­பது கூட அவ­ளுக்கு இப்­போது ஞாப­க­மில்லை. வலி­யிலும் கூட விதி தொடர்ந்து விளை­யாட்டு காட்டி வந்­தது. உயர் தரத்தில் உயர்ந்த மதிப்பெண் பெற்ற அஸ்லா, தனது மருத்­துவக் கனவை தூசு தட்டி எடுத்து அதற்­கான முயற்­சியில் இறங்­கினாள். சக்­கர நாற்­கா­லியில் இருந்து இறங்கி சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் சென்­ற­போது அதைப் பார்த்து, `பெரிய படிப்பு படிக்கும் உடல் நிலை­யெல்லாம் உனக்­கில்லை. டாக்டர் கனவை உத­றி­விட்டு வேறு ஏதா­வது முயற்சி செய்’ என உதா­சீ­னப்­ப­டுத்தி அனுப்­பினர் அவர்கள்.

சிறுவயதில் அஸ்லா…

ஆனால், தளர்ந்து விட­வில்லை அஸ்லா. தாம­ரை­சே­ரியில் இருந்து கோழிக்­கோடு வந்த அவள், மருத்­துவ நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கத் துவங்­கினாள். வீண் முயற்சி என்று கிண்­ட­ல­டித்­தனர் பலர். அதைப் பொருட்­ப­டுத்­தாமல் பயிற்­சியைத் தொடர்ந்தார். இதற்­கி­டையில், இவ­ளது நிலைமை அறிந்த தன்­னார்வ தொண்டு நிறு­வனம் ஒன்று, தொடர்ந்து படிப்­ப­தற்கு அனு­ச­ரணை வழங்க முன் வந்­தார்கள்.
இதற்­கி­டையில், சக்­கர நாற்­கா­லியை விட்டு விட்டு மெது­வாக வாக்­கரை பயன்­ப­டுத்தி நடக்கத் துவங்­கி­யி­ருந்தாள் அஸ்லா. தொடர்ந்து 2015 இல் கோட்­ட­யத்தில் உள்ள மருத்­துவக் கல்­லூரி ஒன்றில் அனு­மதி கிடைத்­தது. இந்த நிலையில், முதுகுத் தண்­டு­வட அறுவை சிகிச்­சையும் நடந்து முடிந்­தது. அந்த வலி அனு­பவம் அதற்கு முன் அனு­ப­வித்­ததன் ஆயிரம் மடங்கு. அதை வெறும் வார்த்­தை­களால் சொல்லி விட முடி­யாது என்­கிறார் அஸ்லா. தனது மருத்­துவ பயிற்சி அனு­ப­வங்கள் குறித்து அஸ்லா பேசு­கையில்,
“மருத்­து­வ­ம­னையில் பிசி­யோ­தெ­ரப்­பிக்கு வரும் குழந்­தை­களைப் பார்க்­கி­ற­போது எனது சிறு வய­துதான் ஞாபகம் வரு­கி­றது. வலிக்­குமா எனப் பயந்­த­படி அவர்கள் அழு­கி­ற­போது, அருகே வரும் ஒவ்­வொரு காலடி ஓசையும் டாக்­ட­ரு­டை­ய­தாக இருக்­குமோ என நினைத்துக் கதறி அழுத சின்னப் பாத்­துவின் முகம் வந்து போகி­றது. அவர்கள் நடக்­கிற போதும் விரல்­களை அசைக்­கிற போதும் வலியால் துடி­து­டித்த பழைய ஞாப­கங்­களால் என்­னையும் அறி­யாமல் எனது கால்­க­ளுக்குப் பார்வை சென்று விடு­கி­றது. கைகளை ஊன்­றி­ய­படி அவர்கள் செல்­கி­ற­போது அந்தக் கைகள் உடைந்து விடுமா எனப் பத­று­கிறேன்.

அவர்­க­ளது பெற்­றோர்­களின் முகத்தைப் பார்க்­கி­ற­போது எனது பெற்றோர்களின் முகம் தோன்றி மறையும். அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என வினவும் அவர்களது கேள்விகளுக்கு எனது வாழ்க்கைதான் பதிலாக அமையும். வலியால் அழும் ஒவ்வொரு குழந்தைக்கும் எனது அனுபவங்களைத்தான் சொல்லிக் கொடுக்கிறேன். வாழ்க்கையே பாடமாக அமைவதை விடப் பெரிய புண்ணியம் எதுவுமில்லையே” என்கிறார் தனது வாழ்க்கையைப் பிறருக்குப் பாடமாகவும் உந்து சக்தியாகவும் மாற்றிக் காட்டிய சின்னப் பாத்து என்கிற பாத்திமா அஸ்லா.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.