பெளத்த தர்மத்தை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு : அப்துல் ராசிக்குக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு

0 856

(எம்.எப்.எம்.பஸீர்)
பெளத்த தர்மத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்து வெளியிட்டு அதனை இணையத்தளம் ஊடாக ஒளிபரப்பியமை தொடர்பில், தற்போது தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான சிலோன் தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக்­குக்கு எதி­ராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்குத் தொடர்ந்­துள்ளார்.

2013 ஏப்ரல் 6 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த நாளொன்றில் பெளத்த தர்­மத்தை இழிவு படுத்தும் வித­மாக கருத்து வெலி­யிட்­டமை ஊடாக, இன மத முரண்­பாடு­களை ஊக்­கு­வித்­த­தாக தெரி­வித்தே இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
அப்துல் ராசிக்­குக்கு மேல­தி­க­மாக எச்.சி.2973/21 எனும் குறித்த வழக்கில் ரஹ்­ம­துல்லாஹ் மொஹம்மட் ரியாஸ், மெக்பா அமீர் மொஹம்மட் தெளசீப் அஹமட் ஆகி­யோரும் பிரதி வாதி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க இலக்க சிவில் அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3(1),3(3) ஆம் உறுப்­பு­ரைகள், தண்­டனை சட்டக் கோவையின் 291(ஆ) அத்­தி­யாயம் ஆகிய­வற்றின் கீழ், இந்த மூன்று பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ராக 6 குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன.

குற்­றச்­சாட்­டுக்­களை உறுதி செய்ய 3 சான்றுப் பொருட்­களும், 9 சாட்­சி­யா­ளர்­களின் பெயர் பட்­டி­யலும் இணைக்­கப்­பட்­டுள்­ள­துடன், குற்றப் பத்­தி­ரி­கை­யா­னது பிர­தி­வா­தி­க­ளுக்கு கொழும்பு மேல் நீதி­மன்ற 6 ஆம் இலக்க விசா­ரணை அறையில் வைத்து கடந்த 22 திங்­க­ளன்று கைய­ளிக்­கப்­பட்­டது.

இதன்­போது அப்துல் ராசிக் உள்­ளிட்ட மூன்று பிர­தி­வா­தி­களும் மன்றில் அஜ­ரான நிலையில், அவர்­க­ளுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் மன்றில் ஆஜ­ரானார்.
இந் நிலையில் மூன்று பிர­தி­வா­தி­க­ளுக்கும் பிணை வழங்­கு­மா­ரறு அவர் மன்றை கோரினார்.

இந் நிலையில், பிர­தி­வா­திகள் மூவ­ரையும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை, 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் செல்ல நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­தது.

அத்­துடன் வெளி­நாடு செல்ல பிர­தி­வா­தி­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­ட­துடன் ஒவ்­வொரு மாதமும் இறுதி ஞாயிறு தினங்­களில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கையெ­ழுத்­தி­டவும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அதன்­படி இந்த வழக்­கா­னது அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக எதிர்­வரும் 2022 ஜன­வரி 12 ஆம் திக்­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது.

முன்­ன­தாக அப்துல் ராஸிக்குக்கு எதி­ராக குற்­ற­வியல் வழக்­கொன்­றினை தொடுக்க முடி­யுமா என்­பது தொடர்பில் உட­ன­டி­யாக ஆராய்தல் வேண்டும் என உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு பரிந்துரை செய்திருந்தது. 2013 மே 6 ஆம் திகதி அவர் வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.